Future Retail: ரூ.3000 கோடிக்கு புதிய பிரச்சனை.. எப்போது விடிவுகாலம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ரீடைல் நிறுவனங்களில் ஒன்றான பியூச்சர் ரீடைல் அதிகப்படியான கடன் சுமையிலும், வங்கிகளின் நெருக்கடியிலும் இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் தான் நிறுவனத்தைச் சமாளிக்க முடியாமல் கிஷோர் பியானி தனது பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு விற்பனை செய்ய முடிவு செய்து ஒப்பந்தம் செய்த நிலையில் அமேசான் இதற்கு எதிர் வழக்குப் போட்டு உள்ளது.

 

இதனால் பியூச்சர் ரீடைல் இன்னும் விற்பனை செய்ய முடியாமல் உள்ளது.

 ஆரம்பமே அசத்தல்.. முகேஷ் அம்பானி முடிவால் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..! ஆரம்பமே அசத்தல்.. முகேஷ் அம்பானி முடிவால் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!

கடனை மறுசீரமைப்பு

கடனை மறுசீரமைப்பு

மத்திய அரசு கொரோனா பாதிப்பில் சிக்கிய நிறுவனங்களுக்குத் தனது கடனை மறுசீரமைப்புச் செய்ய ஒரு வாய்ப்பு அளித்தது, இந்த வாய்ப்பை பெற்றுக்கொண்ட பியூச்சர் ரீடைல்-க்கு வங்கிகள் சில மாதம் அவகாசம் கொடுத்தது.

3000 கோடி ரூபாய்

3000 கோடி ரூபாய்

இந்த அவகாசம் முடிந்து டிசம்பர் 31ஆம் தேதி 3000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும், ஆனால் பியூச்சர் குரூப் அதைச் செலுத்தாமல் நிற்கிறது. பியூச்சர் ரீடைல் 2021 ஏப்ரல் மாதம் one-time restructuring (OTR) திட்டத்தின் கீழ் தன் நிறுவனத்தின் கீழ் இருக்கும் சிறு கடைகளை விற்பனை செய்து சுமார் 3000 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட வேண்டும்.

பியூச்சர் ரீடைல்
 

பியூச்சர் ரீடைல்

ஆனால் அமேசான் தொடர்ந்து வழக்குப் போட்டு வரும் காரணத்தால் பியூச்சர் ரீடைல் நிறுவனத்திற்குக் கீழ் இருக்கும் கடைகளை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இதன் மூலம் புத்தாண்டைத் துவங்கும் முன்னரே புதிய பிரச்சனை உடன் பியூச்சர் குரூப் துவங்கியுள்ளது.

ஜனவரி 30

ஜனவரி 30

தற்போது OTR ஒப்பந்தம் படி 3000 கோடி ரூபாய் பேமெண்ட்-ஐ செலுத்த ஜனவரி 30 வரையில் கால அவகாசம் கொடுத்துள்ளது. குறித்த நாட்களுக்குப் பேமெண்ட்-ஐ செலுத்தாவிட்டால் பியூச்சர் குரூப்-ஐ NPA என வங்கிகள் அறிவித்துவிடும்.

ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் ரீடைல்

இது மட்டும் அல்லாமல் கடன் மறுசீரமைப்புச் செய்யப்பட்ட கடன்கள் திரும்பப்பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் பெயரில் சுமார் 10,500 கோடி ரூபாய் கடன் உள்ளது.

மேலும் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் ரீடைல் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் காலமும் மார்ச் 31, 2022 உடன் முடிய உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Future Retail started new year with ₹3,000 crore payment failed problem; RIL deal ends March 31

Future Retail started new year with ₹3,000 crore payment failed problem; RIL deal ends March 31 Future Retail: ரூ.3000 கோடிக்கு புதிய பிரச்சனை.. எப்போது விடிவுகாலம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X