ஆரம்பமே இழப்பு.. எலான் மஸ்க்-கிற்குச் சோதனை காலம் துவங்கியது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலான் மஸ்க் திட்டமிட்டபடியே டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு கைப்பற்றினாலும் பல தடுமாற்றங்கள், சரிவுகள், இழப்புகளை எதிர்கொண்டார்.

டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக எலான் மஸ்க் தன்னுடைய பெரும் பகுதி டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து டிவிட்டரை கைப்பற்றியுள்ளார்.

எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய பின்பு 5க்கும் அதிகமான உயர் மட்ட அதிகாரிகள் வெளியேறினாலும் நிர்வாகத்தில் பெரிய பாதிப்பு இல்லாத அளவிற்கு டெஸ்லா ப்ராடெக்ட் மேனேஜர்களைக் கொண்டு தடுமாற்றத்தை முதல் நாளிலேயே தடுத்துள்ளார் எலான் மஸ்க்.

இந்த நிலையில் எலான் மஸ்க் வருகையைத் தொடர்ந்து இரு முக்கியமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் டிவிட்டர் உடனான வர்த்தகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

எலான் மஸ்க் வசம் ட்விட்டர்: மீண்டும் கணக்கை தொடங்குவாரா டொனால்ட் ட்ரம்ப்? எலான் மஸ்க் வசம் ட்விட்டர்: மீண்டும் கணக்கை தொடங்குவாரா டொனால்ட் ட்ரம்ப்?

டிவிட்டர் சிஇஓ எலான் மஸ்க்

டிவிட்டர் சிஇஓ எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பாகவே வருமானத்தையும், விளம்பர வர்த்தகத்தையும், விளம்பரத்தைத் தாண்டி பிற வழிகளில் எப்படி வருமானம் ஈட்ட வேண்டும் என்பது தான் முக்கிய இலக்காகக் கொண்டு இருந்தார்.

டிவிட்டரில் விளம்பரம் வர்த்தகம்

டிவிட்டரில் விளம்பரம் வர்த்தகம்


இந்த நிலையில் டிவிட்டரில் விளம்பரம் வர்த்தகத்தில் இருந்து அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு ஆகியவை வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார்ஸ்

எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றி ஒரு நாள் கூட முழுமையாக முடியாத நிலையில் இவருடைய நிர்வாகத்தில் பல முக்கியமான மாற்றங்கள் நடக்க உள்ள காரணத்தால் தற்காலிகமாக ஜெனரல் மோட்டார்ஸ் விளம்பரம் செய்வதை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

வெளியேறியது GM

வெளியேறியது GM

டிவிட்டர் எலான் மஸ்க் நிர்வாகத்தில் கண்டென்ட் மாடரேஷன் அளவிலும், வாடிக்கையாளர் சேவை அளவிலும் பல மாற்றங்களைச் செய்ய உள்ளதால் எங்களுடைய விளம்பரம் யாருக்குச் செல்கிறது என்பதற்கான தெளிவான புரிதல் தேவை என்பதால் விளம்பர வர்த்தகத்தைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளோம் என ஜெனரல் மோட்டார்ஸ் விளக்கம் கொடுத்துள்ளது.

ஃபோர்டு

ஃபோர்டு

இதேவேளையில் ஃபோர்டு இதுவரையில் டிவிட்டரில் விளம்பரம் செய்யவில்லை, ஆனாலும் விளம்பரம் செய்வதற்கான முடிவுகளை விரைவில் டிவிட்டர் தளத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து முடிவு செய்ய உள்ளோம் என ஃபோர்டு தெரிவித்துள்ளது.

டெஸ்லா நிறுவனம்

டெஸ்லா நிறுவனம்

ஆனால் உண்மையில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் வாகன பிரிவில் ஜெனரல் மோட்டார்ஸ்-க்கும், ஃபோர்டு நிறுவனத்திற்கும் நேரடி போட்டியாளர்.

 போட்டி நிறுவனம்

போட்டி நிறுவனம்

இவ்விரு நிறுவனங்களும் டெஸ்லா வர்த்தகத்தைப் பிடிக்கவே போராடி வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் போட்டி நிறுவனத்திற்கு எதற்காக வருமானம் அளிக்க வேண்டும் என முடிவு செய்து விளம்பர வர்த்தகத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

 பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இதே காரணத்திற்காக ஹூண்டாய், கியா, Lucid, Rivian மற்றும் Fisker ஆகிய நிறுவனங்களும் வெளியேற வாய்ப்புகள் உள்ளது, ஆனாலும் இதுவரையில் எவ்விதமான அறிவிப்புகளும் வெளியிடவில்லை.

Fisker - ஹென்ரிக் ஃபிஸ்கர்

Fisker - ஹென்ரிக் ஃபிஸ்கர்

Fisker தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஹென்ரிக் ஃபிஸ்கர், எலான் மஸ்க் உடனான பிரச்சனை இருந்த நிலையில் மஸ்க் டிவிட்டரை வாங்குவதாக அறிவித்த சில நாளில் டிவிட்டர் கணக்கை டெலிட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய மாற்றங்கள்

முக்கிய மாற்றங்கள்

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றிய நிலையில், டிவிட்டர் தளத்தில் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தத் தீவிரமாக உள்ளார். அதேபோல் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார் காரணம் பல முக்கியமான நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார் எலான் மஸ்க்.

சிறிய அளவிலான கட்டணம்

சிறிய அளவிலான கட்டணம்

வருமானத்தை ஈட்டி, டிவிட்டர் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் திட்டத்தில் முதல் கட்டமாக டிவிட்டர் வாடிக்கையாளர் மத்தியில் சிறிய கட்டணத்தை வசூலிக்கவும், போலி மற்றும் ஸ்பாம் கணக்குகளைக் குறைக்கவும் உள்ளார் எலான் மஸ்க்.

சுதந்திர பேச்சு உரிமை

சுதந்திர பேச்சு உரிமை

இதைத் தொடர்ந்து டிவிட்டரை எலான் மஸ்க் வாங்க அடிப்படை காரணமாக இருந்த சுதந்திர பேச்சு உரிமை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகக் கொள்கை மாற்றங்களைச் செய்ய உள்ளார். மேலும் அனைத்து டிவிட்டர் பயனர்களுக்கும் EDIT பட்டன் சேவையை அளிக்கவும் திட்டமிட்டு உள்ளார் எலான் மஸ்க்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

General Motors, Ford left twitter from ads business; Big competitors in EV to Elon musk owned Tesla

General Motors, Ford left twitter from ads business; Big competitors in EV to Elon musk owned Tesla
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X