கொரோனாவால் தங்கம் விலை ஏறும்! உலக உகழ் முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ் ஆரூடம்! அடக்குனா அடங்குற ஆளா நீ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் வந்தது தான் தெரியும், தங்கத்தை கையில் பிடிக்க முடியவில்லை.

Recommended Video

கொரோனாவால் மீண்டும் 44,000 தொட்ட 24 கே 10 கி தங்கம்! இன்னும் விலை ஏறுமாம்!

தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 50,000 ரூபாயை தொட்டாலும் தொட்டு விடும் போலிருக்கிறது.

தங்கம் விலை தற்போதைக்கு என்ன ஆகும்..? விலை ஏறுமா இறக்குமா எனக் கேட்டால் விலை ஏறும் எனச் சர்வதேச அளவில் புகழ் பெற்ற கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ் சொல்லி இருக்கிறார்.\

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

உலக புகழ் கமாடிட்டி வர்த்தகர் ஜிம் ராஜர்ஸிடம் (Jim Rogers) தங்கத்தின் விலை என்ன ஆகும் என கேட்ட போது "இந்த ஏற்ற இறக்கம் எல்லாம் முடிவதற்குள், தங்கம் ஒரு நல்ல விலை ஏற்றத்தைப் பார்க்கும் என அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். அதோடு எப்போது எல்லாம் பணத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும், மக்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ அப்போது எல்லாம் மக்கள் தங்கம் & வெள்ளியை வாங்குவார்கள்" எனச் சொல்லி அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.

எம் சி எக்ஸ் விலை ஏற்றம்

எம் சி எக்ஸ் விலை ஏற்றம்

ஜிம் ராஜர்ஸ் சொன்னதை உறுதி செய்யும் விதமாக, இந்தியாவின் கமாடிட்டி சந்தையான எம் சி எக்ஸ்-ல் ஜூன் 2020-க்கான 10 கிராம் தங்க காண்டிராக்ட், நேற்று ஏப்ரல் 03, 2020 மாலை 43,720 ரூபாய்க்கு ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

அடுத்த காண்டிராக்டும் விலை ஏற்றம்
 

அடுத்த காண்டிராக்டும் விலை ஏற்றம்

அதே போல அடுத்த காண்டிராக்டான, ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்ட் எம் சி எக்ஸ் சந்தையில், நேற்று மாலை 43,860-க்கு ஏற்றம் கண்டு நிறைவடைந்து இருக்கிறது. ஆக விலை ஏற்றத்தை இந்திய காமாடிட்டி சந்தைகளும் எதிர்பார்ப்பதை இந்த விலை ஏற்றங்கள் உறுதி செய்கின்றன.

சர்வதேச சந்தை டாலர்

சர்வதேச சந்தை டாலர்

ஒரு அவுன்ஸ் தங்கம் சர்வதேச அளவில் 1,23,710 ரூபாய்க்கு வர்த்தகமகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக 1,24,284 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகி இருப்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது. கடந்த சில மாதங்களில் தங்கத்தின் உச்ச விலை என்றால் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,25,085 ரூபாய்க்கு நிறைவடைந்தது தான்.

இன்னும் கொஞ்சம் தான்

இன்னும் கொஞ்சம் தான்

சர்வதேச தங்கம் இந்திய ரூபாய் மதிப்பில் தற்போது கிட்டத்தட்ட, தன் உச்ச விலையைத் தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வேறு 76 ரூபாய்க்கு மேலேயே நிற்பதும் இந்திய ரூபாயில் தங்கத்தின் விலை அதிகரிக்க மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

டாலரில் சர்வதேச தங்கம்

டாலரில் சர்வதேச தங்கம்

ஒரு அவுன்ஸ் சர்வதேச ஸ்பாட் தங்கம், தற்போது சுமாராக 1,620 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களில் அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் தங்கம் 1,680 டாலரைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது மீண்டும் தன் உச்ச விலையை நோக்கிச் செல்லும் விதத்திலேயே சர்வதே ஸ்பாட் தங்கத்தின் விலை டாலரில் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

சென்னையில் தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை

ஏற்கனவே சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 44,020 ரூபாய்க்கு இன்று விற்கப்பட்டு வருகிறது. ஜிம் ராஜர்ஸ் சொல்வதைப் போல, பங்குச் சந்தை சரிவு, மக்களுக்கு கொரோனா மீதான பயம் போன்ற காரணங்களால், மேலும் தங்கத்தின் விலை அதிகரித்தால், 50,000 ரூபாயைத் அசால்டாக தொட்டு விடும் போலத் தான் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price rise further Jim rogers Due to COVID-19 24 k 10 gm gold price touched 44000

Gold price will rise further before all settles down. In Chennai due to coronavirus 24 carat 10 gram gold price surged 44000 rupees again.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X