16 ஆப்களை நீக்கிய கூகுள்.. உஷார் மக்களே உங்க போனில் இது இருக்கா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் அனைத்து டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த அதிகப்படியான அக்கறை காட்டி வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களுக்குப் பிரச்சனையாக இருக்கும் பல விஷயங்களை மையப்படுத்தி முக்கியமான மாற்றங்களைச் செய்து வருகிறது, இதில் கூகுள் நிறுவனமும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் கூகுள் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் 16 செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

இந்த 16 செயலிகள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ளதா..? உடனே செக் பண்ணுங்க..!

75 டிஜிட்டல் வங்கியியல் கிளை திறந்து வைத்த மோடி.. ஜம்மு காஷ்மீர் வங்கி உட்பட..! 75 டிஜிட்டல் வங்கியியல் கிளை திறந்து வைத்த மோடி.. ஜம்மு காஷ்மீர் வங்கி உட்பட..!

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சுமார் 16 செயலிகளை அதிகப்படியான பேட்டரி திறனை விழுங்கும் காரணத்திற்காகவும், அதிகப்படியாக இண்டர்நெட் டேட்டா-வை உட்கொள்ளும் காரணமாகவும் இந்த 16 ஆண்ட்ராய்டு செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

16 செயலிகள்

16 செயலிகள்

இந்த 16 செயலிகளைச் செக்யூரிட்டி நிறுவனமான McAfee விளம்பர மோசடி செய்தது கண்டுபிடித்துள்ளது, அதாவது போலியாக இணையப் பக்கத்தில் விளம்பரங்களைக் கிளிக் செய்து கூகுள் நிறுவனத்திடம் இருந்து விளம்பர வருவாய் பெற்று வருவதைக் கண்டு பிடித்துள்ளது. இந்த ரிப்போர்ட் படி கூகுள் ஆய்வு செய்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

2 கோடி இன்ஸ்டால்

2 கோடி இன்ஸ்டால்

இந்த 16 செயலிகளைச் சுமார் 2 கோடி பேர் இன்ஸ்டால் செய்துள்ளனர், McAfee கண்டுபிடித்த 16 செயலிகளைக் கூகுள் நீக்கியுள்ளது எனத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த 16 செயலிகளும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சின்ன சின்ன விஷயங்களைச் செய்யக்கூடிய செயலிகளாகும்.

16 செயலிகள் நீக்கம்

16 செயலிகள் நீக்கம்

தற்போது தடை செய்யப்பட்டு உள்ள 16 செயலிகளின் பட்டியல்.

1. High-Speed Camera
2. Smart Task Manager
3. Flashlight+
4. memocalendar
5. 8K-Dictionary
6. BusanBus
7. Flashlight+
8. Quick Note
9. Currency Converter
10. Joycode
11. EzDica
12. Instagram Profile Downloader
13. Ez Notes
14. flashlite
15. calcul
16. Flashlight+

விளம்பர மோசடி

விளம்பர மோசடி

இந்த ஆப் இன்டால் செய்யப்பட்ட உடனே தானாக CODE டவுன்லோடு செய்யப்பட்டு, அதனைப் பயன்படுத்தி இணையதளத்தில் விளம்பரங்களைக் கிளிக் செய்து விளம்பர மோசடியில் ஈடுப்பட்டு வந்தது, இதைச் செக்யூரிட்டி நிறுவனமான McAfee கண்டுப்பிடித்துள்ளது. இந்தப் பெயர் கொண்ட செயலிகள் ஏதேனும் உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் செய்துவிடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google removes 16 apps based on Ad Frauds from google play store; Check your smartphone right away

Google removes 16 apps based on Ad Frauds, high data usage, High battery drain issues from google play store; Check your smartphone right away with complete ban list.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X