பிட்காயின் முதலீட்டின் மீது 18% ஜிஎஸ்டி வரி.. மத்திய அரசின் திட்டத்தால் முதலீட்டாளர்கள் சோகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020ல் பிட்காயின் வளர்ச்சியால் முதலீட்டாளர்களும், உலக நாடுகளும் வியப்பில் இருக்கும் நிலையில், கிரிப்டோகரன்சி முதலீட்டை முறைப்படுத்தப் பல நாடுகள் களத்தில் இறங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பிட்காயின் முதலீட்டின் மூலம் அதிகளவிலான வரி வருமானத்தைப் பெறத் திட்டமிட்டுள்ள மத்திய நிதியமைச்சகம் அதிக வரியை விதிக்க முடிவு செய்துள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் இந்த முடிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிட்காயின் மீது ஜிஎஸ்டி

பிட்காயின் மீது ஜிஎஸ்டி

மத்திய நிதியமைச்சகத்தின் முக்கியப் பிரிவாக விளங்கும் Central Economic Intelligence Bureau (CEIB) இந்தியாவில் பிட்காயின் மீது ஆண்டுக்கு 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. எனவே பிட்காயின் பரிமாற்றங்கள் மீது 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கலாம் என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறையிடம் பரிந்துரை செய்துள்ளது.

18 சதவீத வரி

18 சதவீத வரி

பிட்காயின் பரிமாற்றங்கள் மீது 18 சதவீத வரி விதிக்கப்படும் போது மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 7,200 கோடி ரூபாய் அளவிலான வரி வருமானம் கிடைக்கும் எனவும் CEIB அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்திற்குத் திங்க் டேங்க் அமைப்பாக விளங்கும் CEIB அமைப்பு, கிரிப்டோகரன்சி மற்றும் இந்தியாவில் அதன் வர்த்தகத்தை ஆய்வு செய்து ஜிஎஸ்டி வரி பரிந்துரையைச் செய்துள்ளது.

CEIB அமைப்பு

CEIB அமைப்பு

மேலும் CEIB அமைப்பு பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சியை intangible assetsஆகப் பிரிக்கப்பட்டு அனைத்துப் பரிமாற்றங்கள் மீதும் வரி விதிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஜிஎஸ்டி வரி கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டில் கிடைக்கும் லாபத்தின் மீது விதிக்கப்படும்.

மத்திய அரசுக்குச் சவால்

மத்திய அரசுக்குச் சவால்

இந்தியாவில் கிரிப்டோகரன்சி முறைப்படுத்தப்படாமல் இயங்குகிறது, எனவே மத்திய அரசுக்கு இதைக் கட்டுப்பாட்டில் வைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

ரிசர்வ் வங்கி தடை

ரிசர்வ் வங்கி தடை

குறிப்பாகக் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் உதவுவதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதில் இருந்து அதிகளவிலான சவால்களை எதிர்கொண்டு வருகிறது மத்திய நிதியமைச்சகம்.

கட்டுப்பாட்டு அமைப்பு

கட்டுப்பாட்டு அமைப்பு

இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த செபி இருப்பது போல் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் இந்தியாவில் அமைப்பு இல்லை. இதனால் மத்திய அரசு இத்தளத்தைப் பெரிய அளவில் பணச் சலவைக்குப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இதனாலேயே ரிசர்வ் வங்கிக்கு இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு அனுமதி அளிக்கத் தயங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt plans to impose 18 percent GST on bitcoin and other cryptocurrencies trading

Govt plans to impose 18percent GST on bitcoin and other cryptocurrencies trading
Story first published: Tuesday, December 29, 2020, 12:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X