டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் 17,947.11 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் 51 பேர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நாடாளுமன்றத்தில், சுமார் 18,000 கோடி ரூபாய் கடனை வாங்கிவிட்டு அதை திரும்ப செலுத்தாமல் வெளி நாடுகளூக்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொருளாதார குற்றவாளிகள் பற்றிய கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த அனுராக் சிங் தாக்கூர், தனது எழுத்துபூர்வமான பதிலை அளித்தார்.
இந்தியாவின் மிகப் பெரிய மளிகை டெலிவரி கடைக்கு இத்தனை கோடி நஷ்டமா..?

வெளி நாடுகளுக்கு தப்பி சென்ற மோசடியாளார்கள்
விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு, திரும்ப செலுத்தாமல் திருட்டுத் தனமாக வெளி நாடுகளுக்கு தப்பி சென்றவர்களை அரசு பொருளாதார குற்றவாளிகள் என கூறியது. இவ்வாறு மோசடி செய்து விட்டு 51 பேர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியுள்ளனராம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் அவர்கள் 66 வழக்குகளில் குற்றவாளிகள் எனவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனராம்.

என்ன சொல்கிறது சிபிஐ
சிபிஐ அறிக்கையின் படி, இந்த 66 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மொத்தம் 17,947.11 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டத்திற்கு புறம்பான வழிமுறைகளில் வெளி நாட்டுக்கு தப்பியோடியதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனி நபர்கள் மீது வழக்கு
இவ்வாறு சட்ட விரோதமாக தப்பியோடியதாக கூறப்படும் பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018ன் கீழ் 10 தனி நபர்கள் மீது அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை திரும்ப அழைத்து வருவதற்கான ஒப்படைப்பு கோரிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக, சிபிஐசி இதுபோன்ற இரண்டு கோரிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு ஜூலை மாதம் அனுப்பியதாகவும் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பண பரிமாற்ற மோசடி
இது வரை பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிறது. ஆக இதுவரை 694 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இதில் 13 பேர் இதுவரை தண்டனை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. . பொருளாதார குற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு சென்றுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

நாடு கடத்த திட்டம்
இரண்டு பேரை நாடு கடத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சகத்திடம் சிபிஐசி வேண்டுகோள் விடுத்துள்ளது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று 8 பேரை நாடு கடத்துவதற்கான உத்தரவை இண்டர்போல் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளில் இருந்து கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் 51 பேர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளனர்.