ஜிஎஸ்டி கவுன்சிலின் 39-வது கூட்டத்தில் மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 12%-லிருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் சற்று சுணக்கம் கண்டுள்ளது எனலாம்.
இந்த நிலையில் நடந்து முடிந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மொபைல் போனுக்கான வரி அதிகரிப்பு
இது குறித்து வெளியான அறிக்கையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 39வது கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%ல் இருந்து 18% ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

தீக்குச்சிக்கும் வரி அதிகரிப்பு
இதனிடையே கைகளால் செய்யப்படும் மற்றும் எந்திரத்தால் தயாரிக்கப்படும் தீக்குச்சிகளுக்கான ஜிஎஸ்டி வரியை ஒரே சீராக மாற்றியமைக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். இதனால் இதுவரை கைகளால் செய்யப்படும் தீக்குச்சிகளுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆகவும், எந்திரத்தால் தயாரிக்கப்படும் தீக்குச்சிகளுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆகவும் இருந்தது.

மொபைல்போன் துறை பின்னடைவு
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று தீக்குச்சிகளுக்கான ஜிஎஸ்டி வரியை ஒரே மாதிரியாக 12% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஸ்மார்ட்போன் துறை ஏற்கனவே சரியான உதிரி பாகங்கள் இன்மையால் பின்னடைவை சந்தித்துள்ளது.

விலை அதிகரிக்கலாம்
இந்த நிலையில் சீனாவில் இருந்து சரியான மூலதனங்கள் கிடைக்கவில்லை. ஆக இதனால் ஸ்மார்ட்போன்களின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி அதிகரிப்பால் விலை மேலும் கூடும் அபாயம் உள்ளது. இந்த விலை அதிகரிப்பானது ஸ்மார்ட் உபயோகிப்பாளர்களை பெரிதும் பாதிக்ககூடும்.

விலையை அதிகரிக்க ஊக்குவிக்கும்
மேலும் உற்பத்தியாளர்களுக்கும் மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு, குறைந்த உதிரிபாகங்களால் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் கொரோனா தாக்கதினால் விற்பனையும் குறைந்துள்ளது. இதனால் மேலும் உற்பத்தியாளார்களுக்கு இலாபம் குறையலாம். மேலும் உற்பத்தியாளார்கள் இதனால் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த திட்டம் மேக் இன் இந்தியா திட்டத்தினை பெரிதும் பாதிக்கலாம் என்றும் ஜியோமி நிறுவனத்தின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.