ரூ.824 கோடி மோசடி.. ஜிஎஸ்டி அமைப்பின் வலையில் சிக்கிய 15 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல நிறுவனங்கள் வரி மோசடியில் சிக்கி வரும் நிலையில் தற்போது 15 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மாட்டிக்கொண்டு உள்ளது.

ஜிஎஸ்டி விரி விதிப்பில் அதிகளவிலான வரி ஏய்ப்பு செய்யப்படுவதால் இவ்வமைப்பு கடந்த சில வருடங்களாகக் கட்டுப்பாடுகளையும், கண்காணிப்புகளையும் அதிகரித்து உள்ளது. இதேவேளையில் துறை வாரியாகப் பல நிறுவனங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனாலேயே ஜிஎஸ்டி வரி வசூல் வளர்ச்சிப் பாதையில் உள்ளது.

இந்நிலையில் ரூ.824 கோடி மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, எப்படி மோசடி செய்யப்பட்டு உள்ளது தெரியுமா..?!

பெங்களூர் நிறுவனத்திற்கு ரூ.21,000 கோடி வரி நோட்டீஸ்.. ஜிஎஸ்டி துறை அதிரடி..! பெங்களூர் நிறுவனத்திற்கு ரூ.21,000 கோடி வரி நோட்டீஸ்.. ஜிஎஸ்டி துறை அதிரடி..!

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி இயக்குநரகத்தின் மும்பை அலுவலகம் 15 இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இண்டர்மீடியடரி மார்க்கெட்டிங் நிறுவனங்கள், NBFC அமைப்புகள் இணைந்து சுமார் 824 கோடி ரூபாய் அளவிலான வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளது.

15 நிறுவனங்கள்

15 நிறுவனங்கள்

இந்த 15 நிறுவனங்களும் எவ்விதமான சரக்கு மற்றும் சேவை அளிக்காமல் இன்புட் டாக்ஸ் கிரெடிட் மூலம் இந்த வரி ஏய்ப்புச் செய்துள்ளதாகச் சரக்கு மற்றும் சேவை வரி இயக்குநரகத்தின் மும்பை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதலான விசாரணையும் தொடுத்துள்ளது. இதேபோல் இன்னும் பிற இடைதரக்கு நிறுவனங்களும் இதில் தொடர்புடையதாக உள்ளது.

DGGI மும்பை அலுவலகம்

DGGI மும்பை அலுவலகம்

DGGI மும்பை அலுவலக அதிகாரிகள் இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களில் நேரடியாக ஆய்வு செய்துள்ளது மட்டும் அல்லாமல் பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது. இதில் மார்கெட்டிங் சர்வீஸ் பெயரில் போலியாக இன்புட் டாக்ஸ் கிரெடிட்-ஐயும், இருதரப்பு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் போலியான பில்களை உருவாக்கியுள்ளனர்.

 செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி

செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி

இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் 1.45 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை தாண்டும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு மார்ச் மாதம் 1.4 லட்சம் கோடி ரூபாயும், ஆகஸ்ட் மாதம் 1.43 லட்சம் கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டு உள்ளது.

பண்டிகை காலம்

பண்டிகை காலம்

விழாக்காலம் என்பதால் இந்தியா முழுவதும் வர்த்தகம் சூடுபிடித்துள்ள நிலையில் செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் 1.45 கோடி ரூபாய் அளவீட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst tax credit ஜிஎஸ்டி
English summary

GST fraud: 15 insurance Cos tax evasion of 824 crore; allegedly availed input tax credit

GST fraud: 15 insurance Cos tax evasion of 824 crore; allegedly availed input tax credit
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X