ரூ40,000 கோடி மோசடி.. மத்திய அரசு கொடுத்த பகிர் ரிப்போர்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்புகளைத் தடுக்கத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் காரணத்தால் வரி வசூல் அளவீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

குறிப்பாகக் கொரோனா தொற்று 2வது அலைக்குப் பின்பு வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை சரிவில் இருந்து மீண்டு வந்த போது ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.

2021ல் பலத்த வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. 2022ல் தூள் கிளப்பலாம்.. நிபுணர்களின் செம கணிப்பு..!

இதேவேளையில் கடந்த 2 வருடமாக ஜிஎஸ்டி அமைப்பு பல்வேறு சோதனைகளைச் செய்து மோசடிகளையும், ஏமாற்றுவோரையும் கண்டுப்பிடத்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

 40,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு

40,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு

2021ஆம் ஆண்டில் மட்டும் போலி பில் மற்றும் போலியான இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிளைம் ஆகியவற்றின் வாயிலாக மட்டும் சுமார் 40,000 கோடி ரூபாய் அளவிலான சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதாக வரித்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்து உள்ளனர்.

 ஜிஎஸ்டி வரி

ஜிஎஸ்டி வரி

இந்நிலையில் ஜனவரி 1 முதல் ஜிஎஸ்டி வரியில் செய்யப்படும் மோசடிகளைத் தடுக்கவும், நடைமுறையில் இருக்கும் சில ஓட்டைகளைத் தடுக்கவும் சில முக்கியமான மாற்றங்களும், கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்த உள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார், இதேவேளையில் மத்திய அரசின் Ease of Doing Business நடைமுறைகளில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

 5,700 வழக்குகள்
 

5,700 வழக்குகள்

மத்திய அரசின் மறைமுக வரித்துறை, சுங்கவரி துறை ஜிஎஸ்டி அமைப்பின் சென்டரல் நிர்வாக அமைப்பு கடந்த சில வருடங்களாகச் செய்யப்பட்ட சோதனையில் 5,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சுமார் 40,000 கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி வரி மோசடி செய்யப்பட்டு உள்ளதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

 வரி வருமானம் சரிவு

வரி வருமானம் சரிவு

மத்திய அரசுக்கு கடந்த இரண்டு வருடத்தில் ஏற்பட்ட வர்த்தகச் சரிவின் வாயிலாகவும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டதன் வாயிலாகவும் அதிகளவிலான வரி வசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சரிவைச் சமாளிக்கப் பல முக்கியமான வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவை மீதான ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

 ஜனவரி 1 முதல்

ஜனவரி 1 முதல்

இதேவேளையில் வரி மோசடிகளைத் தடுப்பதன் வாயிலாகவும் அதிகப்படியான வரியை வசூல் செய்ய முடியும் என்பதைப் பெரிய அளவில் நம்பும் மத்திய அரசு ஜனவரி 1 முதல் பல முக்கியக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

 2021 வரி வசூல்

2021 வரி வசூல்

ஜனவரி -ரூ. 1,19,847 கோடி

பிப்ரவரி - ரூ. 1,13,143 கோடி

மார்ச் - ரூ. 1,23,902 கோடி

ஏப்ரல் - ரூ. 1,41,384 கோடி

மே - ரூ. 1,02,709 கோடி

ஜூன் - ரூ. 92,849 கோடி

ஜூலை - ரூ. 1,16,393 கோடி

ஆகஸ்ட் - ரூ. 1,12,020 கோடி

செப்டம்பர் - ரூ. 1,17,010 கோடி

அக்டோபர் - ரூ. 1,30,127 கோடி

நவம்பர் - ரூ. 1,31,526 கோடி

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST Fraud: ₹40,000 crore worth of GST evasion detected in 2021

GST Fraud: ₹40,000 crore worth of GST evasion detected in 2021 ரூ40,000 கோடி மோசடி.. மத்திய அரசு கொடுத்த பகிர் ரிப்போர்ட்..!
Story first published: Friday, December 31, 2021, 12:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X