எதிரிக்கு கூட எங்கள் நிலை வரக்கூடாது... 30 வருடங்கள் கழித்து மெளனம் கலைத்த ஹர்ஷத் மேத்தா மனைவி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஹர்ஷத் மேத்தா என்பவர் செய்த மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்திய பங்கு சந்தையை ஆட்டம் காண வைத்தது.

ஹர்ஷத் மேத்தா இறந்து 20 வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் தற்போது அவர் மனைவி தனது கணவர் பெயரில் இணையதளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

அந்த இணையதளத்தில் ஹர்ஷத் மேத்தாவிற்கு நடந்த கொடுமை, சிறையில் அவர் அனுபவித்த கொடுமை, மாரடைப்பு ஏற்பட்டபோது கூட அவருக்கு மருத்துவ உதவி கிடைக்காதது குறித்து அவர் பதிவு செய்துள்ளார்.

34 வயதில் பல கோடிகளுக்கு அதிபதி.. உலக பணக்காரர்கள் பட்டியலில் அபூர்வா மேத்தா, நிகில் காமத்..!34 வயதில் பல கோடிகளுக்கு அதிபதி.. உலக பணக்காரர்கள் பட்டியலில் அபூர்வா மேத்தா, நிகில் காமத்..!

ஹர்ஷத் மேத்தா

ஹர்ஷத் மேத்தா

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஹர்ஷத் மேத்தா என்ற பெயர் மிகப்பெரிய அளவில் ஊடகங்களில் செய்தியாக வலம் வந்தது. சாதாரண குடும்பத்தில் பிறந்து பங்கு சந்தையில் நுழைந்து 1987ஆம் ஆண்டு தனது சகோதரருடன் இணைந்து க்ரோமோர் என்ற பங்குத்தரகு நிறுவனத்தை ஹர்ஷத் மேத்தா தொடங்கினார்.

மோசடி

மோசடி

ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார் என்பது 1992ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. அவர் பங்குகளை வாங்குவதற்கு வங்கியில் இருந்த பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

 ஹர்ஷத் மேத்தாவின் வீழ்ச்சி!

ஹர்ஷத் மேத்தாவின் வீழ்ச்சி!

ஹர்ஷத் மேத்தாவின் பங்கு சந்தை மோசடி இந்தியாவின் பொருளாதாரத்தை அசைத்து பார்த்தது என்பதும், அதன் பின்னர்தான் பங்குச்சந்தைக்கு புதிய சட்ட திட்டங்கள் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை வர்த்தகத்தில் எந்த அளவுக்கு உச்சத்துக்கு சென்றாரோ அதே அளவுக்கு அவர் படு பாதாளத்துக்கும் சென்றார்.

சிறையில் மரணம்

சிறையில் மரணம்

கடந்த 2001 ஆம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா சிறையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அவருடைய மனைவி ஜோதி 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது கணவருக்கு ஏற்பட்ட விசாரணை குறித்தும், அவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்தும் இணையதளம் ஒன்றை தொடங்கி பதிவு செய்துள்ளார்.

இணையதளம்

இணையதளம்

ஹர்ஷத் மேத்தாவின் மனைவி ஜோதி மேத்தா https://harshadmehta.in/ என்ற இணையதளத்தில் எழுதிய கட்டுரை மிகப்பெரிய அளவில் தற்போது பிரபலமாகி வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அன்று தனது கணவர் சிறையில் திடீரென மாரடைப்பு காரணமாக இறந்தார் என்றும் 47 வயது வரை ஆரோக்கியமாகவும் எந்தவித இதய கோளாறும் இல்லாமல் இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.

மாரடைப்பு

மாரடைப்பு

ஹர்ஷத் மேத்தாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட முதல் 4 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று சிறை காவலர்களுக்கு தெரிந்திருந்தும் அந்த நான்கு மணி நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்க சிறை அதிகாரிகள் முன்வரவில்லை என்றும், அடுத்த அறையில் இருந்த தனது சகோதரரிடம் கூட அவருக்கு நேர்ந்த மாரடைப்பு குறித்து எந்தவிதமான தகவலையும் சிறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றும் ஜோதி தனது இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.

சிறை மருத்துவர்கள்

சிறை மருத்துவர்கள்

சிறை மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது மாரடைப்பிற்கு உரிய எந்த மருந்து மாத்திரைகளும் அவர்களிடம் இல்லை என்றும், அதன்பிறகு தனது மெடிக்கல் பாக்ஸில் உள்ள மருந்தை தரும்படி ஹர்ஷத் மேத்தா கேட்ட பிறகுதான் அதை அவர்கள் கொடுத்ததாகவும் அந்த மருந்து தான் அவரை நான்கு மணி நேரத்திற்கு உயிரோடு வைத்திருந்தது என்றும் ஜோதி பதிவு செய்துள்ளார்.

விசாரணை அறிக்கை

விசாரணை அறிக்கை

அதன் பிறகு தானே மருத்துவமனைக்கு அவரை நடக்க வைத்து அழைத்து சென்றனர் என்றும் அப்போது தான் அவருக்கு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டு சக்கர நாற்காலியிலேயே உயிரிழந்ததாகவும் ஜோதி பதிவுசெய்துள்ளார். மேலும் அவர் இறந்தது குறித்து எந்தவிதமான விசாரணை அறிக்கையும், பிரேத பரிசோதனையின் அறிக்கையும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் பலமுறை கேட்டும் அது குறித்து சிறை அதிகாரிகள் எங்களுக்கு அதை தரவில்லை என்றும் ஜோதி பதிவு செய்துள்ளார்.

எதிரிக்கு கூட வரக்கூடாது

எதிரிக்கு கூட வரக்கூடாது

என் கணவர் இறக்கும் போது அவருக்கு கடைசி நேரத்தில் எங்களால் பக்கபலமாக இருக்க முடியவில்லை என்ற மன உறுத்தல் தங்களுக்கு இருந்து வருவதாகவும், இது குறித்த பல உண்மைகளை நாங்கள் மருத்துவரிடமிருந்து அறிந்து கொண்டோம் என்றும் எங்களது நிலைமை எங்களது எதிரிக்குக் கூட வரக்கூடாது என்றும் அவர் அதில் பதிவு செய்துள்ளார். ஜோதி மேத்தாவின் இந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Harshad Mehta Wife Jyoti breaks silence about his husband scam!

Harshad Mehta Wife Jyoti breaks silence about his husband scam! | எதிரிக்கு கூட எங்கள் நிலை வரக்கூடாது... 30 வருடங்கள் கழித்து மெளனம் கலைத்த ஹர்ஷத் மேத்தா மனைவி!
Story first published: Monday, July 11, 2022, 7:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X