பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கியமான விஷயங்கள் இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இன்று துவங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் குழு உருவாக்கிய பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி மட்டும் அல்லாமல் 2021-22 கொரோனா ஒமிக்ரான் மூலம் பாதிக்காத ஒரு முக்கியமான துறையைப் பற்றியும், விவசாயக் குடும்பங்களின் வருமானத்தில் ஏற்பட்டு உள்ள மிகப்பெரிய மாற்றம், இந்திய பொருளாதாரம் எப்போது 5 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்டும் என்பது வரையில் பல முக்கியமான விஷயங்களை வெளியிட்டுள்ளது.

 பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கியமான விஷயங்கள் இதுதான்..!
  • இந்தியாவில் சொந்த வீடு வாங்குவோர் எண்ணிக்கை மும்பை, தானே, புனே, நொய்டா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அதிகமாக உள்ளது
  • சேவைத்துறை 2021-22 ஆம் நிதியாண்டில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது
  • தனியார்த் துறையின் பங்கீடு மற்றும் முதலீடு அதிகரிக்க வேண்டும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது
  • ஏப்ரல் - நவம்பர் 2021 கலால் வரி மூலம் மத்திய அரசின் வருமானம் 23.2 சதவீதம் உயர்வு
  • டிசம்பர் 31ஆம் தேதி முடிவில் அன்னிய செலாவணி 633.6 பில்லியன் டாலராக உயர்வு
  • இந்தியாவில் வீட்டுக் கடன் வர்த்தகம் நவம்பர் மாதம் 8 சதவீதம் வரையில் உயர்வு
  • 2021-22ஆம் நிதியாண்டில் நிகர நிலையான முதலீட்டு அளவு (GFCF) 15 சதவீதம் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது
  • கச்சா எண்ணெய் விலை உயர்வால் இப்பிரிவு இறக்குமதி செலவுகள் 2 மடங்கு உயர்வு
  • மொத்த விலை பணவீக்கத்தில் WPI அளவீடு 20 சதவீதமாக உயர்வு
  • 2022-23ஆம் நிதியாண்டில் பணவீக்கம் பெரிய சவாலாக இருக்கும்
  • இந்தியாவில் சப்ளை துறையில் இருந்த பல பிரச்சனை தீர்க்கப்பட்டு உள்ள வேளையில் மத்திய அரசு அதிகளவில் வளர்ச்சி திட்டத்திற்காக முதலீடு செய்து வருகிறது.
  • பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள இந்தியப் பொருளாதாரம் தயாராக உள்ளது எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது,
  • அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை இந்தியாவுக்குப் பெரும் சவாலாக இருக்கும்
  • நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
  • 2023ஆம் நிதியாண்டில் ஜிடிபி 8 - 8.5% வரையில் மட்டுமே வளர்ச்சி அடையும்
  • நடப்பு நிதியாண்டான 2021-22ல் இந்தியப் பொருளாதாரம் 9.2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும்
  • ஐஎம்எப் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை 9.5 சதவீதத்திலிருந்து 9.0 சதவீதமாகக் குறைந்துள்ளது
  • விவசாயத் துறை தொடர் வளர்ச்சிப் பாதையில் உள்ளது
  • கொரோனா, ஒமிக்ரான் தொற்று மூலம் விவசாயத் துறை வர்த்தகம் மற்றும் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை
  • 2021-22 நிதியாண்டில் விவசாயத் துறை 3.9% வளர்ச்சி அடையும் - பொருளாதார ஆய்வறிக்கை
  • கடந்த ஆண்டு விவசாயத் துறை 3.6 சதவீதம் வளர்ச்சி அடைந்தது
  • 2021-22ல் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி 11.8% ஆக இருக்கும்
  • சேவைத் துறை 2021-22ல் 8.2% வளர்ச்சி அடையும் - பொருளாதார ஆய்வறிக்கை
  • இந்தியாவின் வளர்ச்சியில் ரயில்வே இன்ஜின் ஆக இருக்கும்
  • 2030க்குள் ரயில்வே துறை வர்த்தகம் மற்றும் சேவையை விரிவாக்கம் செய்ய அதிகப்படியான முதலீடுகள் தேவைப்படுகிறது
  • நடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை பட்ஜெட் மதிப்பு மட்டும் 2.15 லட்சம் கோடி ரூபாய், இது 2014ஆம் ஆண்டை விட 5 மடங்கு அதிகமாகும்
  • இந்தியாவின் கடன் - ஜிடிபி அளவு 201-21 முடிவில் 59.3 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது
  • இந்திய பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நிதியை வங்கி கடனாகத் திரட்டுவதைக் காட்டிலும் அதிகளவில் கேபிடல் சந்தையில் திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது
  • மத்திய அரசு "Waterfall" திட்டத்தை நீக்கிவிட்டு "Barbell" முறையில் பொருளாதார முடிவுகளை எடுக்க முடிவு செய்துள்ளது
  • Barbell கொள்கையின் கீழ் முடிவுகளை எடுக்க ஜிஎஸ்டி வசூல், மின் நுகர்வு, மொபிலிட்டி குறியீடுகள், டிஜிட்டல் பணம் பரிமாற்றம், செயற்கைக்கோள் புகைப்படங்கள், சரக்கு நகர்வுகள், நெடுஞ்சாலை கட்டண வசூல் என 80 HFI இணைத்துள்ளது
  • கொரோனா தொற்று மூலம் அதிகம் பாதிக்கப்பட்டது சேவைத் துறை தான்
  • கட்டண குறைப்பு, விலை சரிவு ஆகியவற்றின் காரணமாகச் சொந்த வீடு வாங்க மும்பை, தானே, புனே, நொய்டா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு சிறந்த இடமாக உருவெடுத்துள்ளது - பொருளாதார ஆய்வறிக்கை
  • ஏப்ரல் - நவம்பர் 2021ல் சுமார் 75 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு 89,066 கோடி ரூபாய் லாபத்தைத் திரட்டியுள்ளது
  • டிசம்பர் 2021ல் 4.6 பில்லியன் பணப் பரிமாற்றத்தின் மூலம் 8.26 லட்சம் கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது
  • இந்தியாவில் QR கோடு மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
  • உலகிலேயே 3வது ஸ்டார்ட்அப் சந்தையாக இந்தியா விளங்குகிறது
  • 2016-17ஆம் நிதியாண்டில் வெறும் 733 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே உருவாக்கப்பட்ட நிலையில் 2021-22 ஆம் நிதியாண்டில் 14,000 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது
  • இந்தியாவில் இதுவரை 83 யூனிகார்ன் நிறுவனம் மட்டுமே இருக்கும் நிலையில் 2021ல் மட்டும் சுமார் 44 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகியுள்ளது
  • இந்தியாவில் எரிபொருள் உடன் எத்தனால் கலக்கும் அளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது
  • 2020-21ஆம் நிதியாண்டில் எத்தனால் சப்ளை 302 கோடி லிட்டராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது
  • 2013-14ல் எத்தனால் சப்ளை அளவு வெறும் 38 கோடி லிட்டராக மட்டுமே இருந்தது. 2022-23ஆம் நிதியாண்டில் 400 லீட்டரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • சுற்றுலாத் துறையின் வர்த்தக வளர்ச்சி இன்னும் உறுதியான நிலையை அடையவில்லை
  • குளோபல் இன்னோவேஷன் இன்டெக்ஸ் பட்டியலில் இந்தியா 35வது இடத்தைப் பிடித்துள்ளது
  • 2022ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் 7.36 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன் கொடுக்கப்பட்டு உள்ளது
  • மத்திய அரசு தேசிய நில விற்பனை அமைப்பை உருவாக்க உள்ளது
  • மத்திய அரசு நிறுவனங்களிடம் இருக்கும் 3600 ஏக்கர் நிலத்தை விற்பனை அல்லது குத்தகை மூலம் பணமாக்கும் பணிகளைச் செய்ய உள்ளது
  • 2025ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்டும், ஆனால் அதற்கு 1.4 டிரில்லியன் டாலர் அளவிலா முதலீட்டைச் செய்ய வேண்டும்
  • ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்குவதில் பெங்களுரை முந்திய டெல்லி
  • வேலைவாய்ப்பின்மை அளவீடு நவம்பர் மாதம் 7 சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பர் மாதம் 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • ஜனவரி 30 வரையிலான காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை அளவீடு 6.5 சதவீதமாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவில் தற்போது உற்பத்தி, ஹோட்டல்கள், சுற்றுலா ஆகிய துறையில் வேலைவாய்ப்புகள் இழந்துள்ளது.
  • 021ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 300 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது
  • நாட்டில் ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 2014 இல் 6,426 ரூபாயிலிருந்து 2019 இல் 10,218 ரூபாயாக உயர்ந்துள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 8-8.5% வரை வளர்ச்சியடையும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Highlights of economic survey 2022

Highlights of economic survey 2022 பொருளாதார ஆய்வறிக்கையில் எப்படி என்ன தான் இருக்கு..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X