இந்தக் கொரோனா காலத்தில் இந்தியப் பொருளாதாரமும், வர்த்தகச் சந்தையும் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட வேளையில், பங்குசந்தை மற்றும் முதலீட்டுச் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் பல பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இன்னும் சரிவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக இந்திய முதலீட்டுச் சந்தையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடும் அதிகரித்து வருகிறது.
இதன் வாயிலாகச் செப்டம்பர் வாரத்தின் முதல் வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி அளவு வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது என ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.14.94 லட்சம் கோடி தொட்ட ரிலையன்ஸ்! இந்தியாவின் டாப் 30 கம்பெனி பங்குகள் விவரம்!

வரலாற்று உச்சம்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் படி செப்டம்பர் 4ஆம் தேதி வார முடிவில், நாட்டின் அன்னிய செலாவணி முதலீட்டு அளவு 582 மில்லியன் டாலர் உயர்ந்து வரலாற்று உச்ச அளவான 542.013 பில்லியன் டாலர் அளவிலான உயர்வை அடைந்துள்ளது.
ஆகஸ்ட் 28ஆம் தேதி வார முடிவில் அதிகப்படியான 3.883 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்று 541.431 பில்லியன் டாலர் அளவை அடைந்திருந்தது. இந்த வாரத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாணய
இந்திய அன்னிய செலாவணியில் பெரும் பகுதி வெளிநாட்டு நாணயங்கள் தான், அந்த வகையில் ஆகஸ்ட் 4 உடன் முடிந்த வாரத்தில் வெளிநாட்டு நாணய இருப்பு அளவு 269 மில்லியம் டாலர் உயர்ந்து மொத்த வெளிநாட்டு நாணய இருப்பு 498.362 பில்லியன் டாலாரக உள்ளது.

தங்கம்
இதேபோல் தங்க இருப்பின் அளவு 321 மில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து மொத்த தங்க இருப்பின் அளவு 37.521 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும் அடுத்த 2 வார காலத்திற்கு Shradh வழக்கம் காரணமாக இந்தியாவில் தங்கம் மீது முதலீடு செய்யவும் வழக்கம் தடைப்பெற்றுள்ளது. இதனால் அடுத்த இரண்டு வாரத்தில் தங்க இருப்பு அளவு பெரிய அளவில் இருக்காது எனக் கணிக்கப்படுகிறது.

அன்னிய முதலீடு
கொரோனாவு தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பெருமளவிலான கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு நாட்டின் வர்த்தகம் சந்தையும், பொருளாதாரமும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியிருக்கும் காரணத்தால் இனி வரும் வாரத்தில் இந்தியச் சந்தையில் வரும் அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் எனத் தெரிகிறது.