டெல்லி: பணக்காரர்கள் மட்டும் தான் வரி செலுத்துகிறார்கள் என்ற கதையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதெல்லாம் ஒரு கட்டுக்கதை என்பது இதில் தெளிவாகிறது.
இது குறித்து ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கையில், 50% மக்கள் மறைமுக வரிகள் அல்லது நுகர்வான தொடர்பான வரிகளை செலுத்துகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.
ஏழைகள் தான் அதிக ஜிஎஸ்டி வரி
அறிக்கையின் படி, மொத்த ஜிஎஸ்டியில் மூன்றில் இரு பங்கு 64.3%, குறைவான வருமானம் உடைய 50% ஏழை மக்களிடம் இருந்து தான் வருகின்றதாம். இதே மூன்றில் ஒரு பங்கு 40% நடுத்தர மக்களிடம் இருந்தும், மிகப்பெரிய பெரிய 10% பணக்காரர்களிடம் இருந்தும் 3 - 4% மட்டுமே கிடைக்கிறதாம். மொத்தத்தில் ஏழை மக்கள் தான் பெரும் தொகையை செலுத்துகின்றார்கள்.
ஜிஎஸ்டி அதிகரிக்கலாம்
2021 - 22ல் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டியானது 14.7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. எனினும் தற்போதைய நிலவரப்படி 2022 - 23ம் நிதியாண்டில் 18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழைகள் அதிகம்
ஆக்ஸ்பாம் அறிக்கையானது, வருமான குழுவின் கீழ் 50% பேர், நடுத்தர மக்கள் 40% பேர் மற்றும் பணக்காரர்கள் 10% மொத்த வருமானத்தை மறைமுக வரிகளுக்கு செலவிடுகிறார்கள். கீழ் மட்டத்தில் உள்ள 50% மக்கள் தான், 10% பணக்காரர்களுடன் ஒப்பிடும்போது, மறைமுக வரி விதிப்பில் 6 மடங்கு அதிகம் செலுத்துகின்றனர்.
6.7% உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள்
மேற்கட்ட 50% ஏழை மக்கள் தங்கள் வருமானத்தில் 6.7% வருமானத்தை உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களான வரியாக செலவிடுகின்றனராம். இதே நடுத்தர மக்கள் 40% பேர் 3.3% உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களாக தங்களது வருமானத்தை செலவிடுகின்றார்களாம். இதே செல்வந்தர்களில் 10% பேர் வெறும் 0.4% மட்டுமே உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்காக செலவிடுகின்றனராம்.
வரியை குறைக்கணும்
பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் செலவு செய்யும் உணவு பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வறிக்கை கோரிக்கை விடுத்துள்ளது. இது வருவாய் ஈட்டுவதற்கு வழிவகுக்கலாம். ஆனால் இது ஒரு முற்போக்கான ஒன்று. இது ஏழைகளின் சுமையை மேலும் கூட்டலாம். ஆக ஏழை மக்களின் சுமையை குறைக்க வரியை குறைக்க வேண்டும்.
பணக்காரர்களுக்கு வரி விதிக்கலாம்
மாறாக பில்லியனர்களுக்கு வரியை அதிகரிக்க வேண்டும் என்று ஆக்ஸ்பாம் அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த செலவத்தின் மீது 3% சொத்து வரி விதித்தால், இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார இயக்கத்திற்கு, தற்போதைய ஒதுக்கீடான 37,800 கோடி ரூபாய் நிதியை 5 ஆண்டுகளுக்கு அளிக்க முடியும் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
நன்றாக இருக்கும்
உண்மையில் இதுபோன்ற அறிவிப்புகள் வரவிருக்கும் பட்ஜெட்டில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் எனலாம். சில நாடுகள் அரசின் வருவாயினை அதிகரிக்க பணக்காரர்களுக்கு என கூடுதல் வரியினை விதிக்கின்றன. அதுபோன்று விதிப்பதன் மூலம் பின் தங்கியுள்ள மக்களுக்கு அதனால் உதவ முடியும் என எதிர்பார்க்கின்றன.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications