HCL-ன் புதிய தலைவரான ரோஷினி நாடார்-ன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தமிழரான ஷிவ் நாடார் பதவி விலகிய நிலையில் அவரது மகள் ரோஷினி நாடார் நிர்வாகக் குழுவின் தலைவராகியுள்ளார்.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ரோஷினி நாடார் நீண்ட காலமாக non-executive director ஆகவும், இந்நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகப் பிரிவில் முக்கியப் பதவிகளில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் புதிய தலைவர் ரோஷினி நாடார்-ன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? வாங்க பார்ப்போம்

 ஷிவ் நாடார் தலைவர் பதவியிலிருந்து விலகல்.. மகள் ரோஷிணி கையில் வந்த ஹெச்சிஎல்..! ஷிவ் நாடார் தலைவர் பதவியிலிருந்து விலகல்.. மகள் ரோஷிணி கையில் வந்த ஹெச்சிஎல்..!

ஹெச்சிஎல்

ஹெச்சிஎல்

தமிழரான ஷிவ் நாடார் தலைமையில் உருவான ஹெச்சிஎல் நிறுவனத்தின் வளர்ச்சி ஐடி துறைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒன்று வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஹெச்சிஎல் மூலம் வேலைவாய்ப்புப் பெற்றவர்கள் பல லட்சம் பேர்.

இந்நிலையில் ஹெச்சிஎல் தலைமை மாற்ற அதிர்ச்சியாக இருந்தாலும் 75 வயதாகும் ஷிவ் நாடார் நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறாமல் இந்நிறுவனத்தின் Chief Strategy Officer பொறுப்பேற்க உள்ளார்.

இது இந்நிறுவன முதலீட்டாளர்களும், தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

 

ரோஷினி நாடார்

ரோஷினி நாடார்

சுமார் 20.5 பில்லியன் டாலர் சந்தை சொத்து மதிப்புடைய ஹெச்சிஎல் குழுமத்தை வழிநடத்தும் நிர்வாக இயக்குநராக இருக்கும் ரோஷினி நாடார் மதிப்பு 36,800 கோடி ரூபாய்.

இந்தியாவின் பெண் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இவர் தற்போது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனத்தின் தலைவராகியுள்ளார். இந்திய ஐடி துறையில் பெண் தலைவர்கள் மிகவும் குறைவு, அதிலும் பணக்கார பெண் தலைவர் என்றால் அது ரோஷினி நாடார் மட்டும் தான்.

இந்திய அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் 54வது இடத்திலும் ரோஷினி நாடார் உள்ளார்.

 

முக்கியப் பதவிகள்

முக்கியப் பதவிகள்

2017, 2018, 2019 எனத் தொடர்ந்து இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் ரோஷினி நாடார், இப்புதிய பதவிக்கு முன்பு இந்நிறுவனத்தின் CSR கமிட்டியின் தலைவராகவும், ஷிவ் நாடார் பவுண்டேஷன் நிறுவனத்தின் டிரஸ்டியாகவும் உள்ளார்.

ஷிவ் நாடார் பவுண்டேஷன் தலைமையில் தான் சென்னையில் Sri Sivasubramaniya Nadar College of Engineering கல்லூரி இயங்கி வருகிறது.

 

கல்வி

கல்வி

கல்வியை முடித்த பின்பு 2012 ஹெச்சிஎல் நிறுவனத்தில் சேர்ந்த ஒரு வருடத்திலேயே ரோஷினி நாடார் ஹெச்சிஎல் நிர்வாகக் குழுவில் சேர்ந்தார்.

ரோஷினி நாடார் நார்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் ரோடியோ, டிவி, திரைப்படத் துறையில் பேச்சலர் டிகிரியும், கீலாக் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார்.

ஹெச்சில் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு பல ஷேக்-களையும் இவர இயக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

குழந்தைகள்

குழந்தைகள்

38 வயதான ரோஷினி நாடார் திருமணமாகி இரண்டு குழந்தைகள் (Armaan மற்றும் Jahaan ) உள்ளனர். இவரது கணவர் பெயர் ஷிகார் மல்ஹோத்ரா இவர் தற்போது ஹெச்சில் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராகவும், ஹெச்சிஎல் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

இதுமட்டும் அல்லாமல் Shiv Nadar Foundation, Shiv Nadar University Trustee, The Habitats Trust ஆகிய அமைப்புகளிலும் முக்கியப் பதவிகளை வகிக்கிறார் ஷிகார் மல்ஹோத்ரா.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s richest woman Roshni Nadar became chairman of HCL Technologies

India’s richest woman Roshni Nadar became chairman of HCL Technologies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X