வங்கிகளில் வாரா கடன் நிலைமை சரியாகும்! எஸ்பிஐ தலைவர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகின் டாப் 10 பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், எந்த நாட்டில் அதிகம் மோசமான கடன்கள் இருக்கின்றன என்கிற பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் திரட்டி, வெளியிட்டு இருக்கிறது. உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில், அதிகம் மோசமான கடன்களைக் கொண்ட நாடாக நம் இந்தியா முதல் இடத்தில் நிற்கிறது.

அதாவது, இந்தியா நிதி நிறுவனங்கள், 100 ரூபாய் மொத்தக் கடன் கொடுத்து இருக்கிறார்கள் என்றால், அதில் 9.3 ரூபாய் மோசமான கடனாக தேங்கி நிற்கிறது. இந்த மோசமான கடன்களை செயல்படாத கடன்களாகச் சொல்லலாம். நம் எளியோர் மொழியில் என்பிஏ (NPA - Non Performing Asset) என்று சொல்லலாம் என்கிற அச்சுறுத்தும் செய்தியை ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டது.

வங்கிகளில் வாரா கடன் நிலைமை சரியாகும்! எஸ்பிஐ தலைவர்..!

இந்த தரவுகளுக்கு பதில் கொடுக்கும் விதத்தில், 92-ம் ஆண்டு ஃபிக்கி கூட்டத்தில் (92nd Annual Convention of industry chamber FICCI), ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் ரஜ்னேஷ் குமார் இன்று பேசி இருக்கிறார்.

இந்தியாவின் பல வங்கிகளின் நிதி நிலை, குறிப்பாக வாராக் கடன்கள், வரும் மார்ச் 2020-க்குள் நல்ல நிலைக்கு வரும். எனவே, இந்திய வங்கிகள், கடன் கொடுக்க பணம் இல்லாத நிலை வராது எனச் சொல்லி இருக்கிறார். அதோடு, வங்கிகள் தன் வட்டி விகிதங்களை இதற்கு மேல் குறைக்க முடியாது. அதையும் மீறிக் குறைத்தால் Asset - Liability பொருந்தாது எனச் சொல்லி இருக்கிறார்.

இந்திய வங்கிகள் கடன் கொடுக்க போதுமான பணம் இருப்பதாகவும் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் போதுமான அளவுக்கு கடன் வாங்குவதில்லை எனச் சொல்லி இருக்கிறார்.

பதவி விலகும் ஆனந்த மஹிந்திரா..! அடுத்து யார் தலைமை..?பதவி விலகும் ஆனந்த மஹிந்திரா..! அடுத்து யார் தலைமை..?

அதோடு, இந்திய வங்கிகள், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் நுகர்வோர் செலவழிக்கும் துறைகளுக்கு கடன் கொடுக்க முடியும். இந்த துறைகளில், பெரிய அளவில் தேவை சரியவில்லை எனச் சொல்லி இருக்கிறார் எஸ்பிஐ தலைவர் ரஜ்னேஷ் குமார்.

இத்தனை சொன்ன எஸ்பிஐ தலைவர், இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது அத்தனை பாதுகாப்பானது அல்ல எனவும் எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Banks NPA situation will improve by march 2020 SBI Chairman

State bank of India chairman said that the indian Banks NPA situation will improve by march 20 SBI Chairman.
Story first published: Saturday, December 21, 2019, 19:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X