அதள பாதாளம் நோக்கி செல்லும் இந்திய ரூபாய்.. கதறும் மத்திய அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்துள்ள நிலையில், இன்று காலையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 72.11 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.

இதற்கு முக்கிய காரணம் ஈரான் தனது முக்கிய இராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க முயன்றால், அமெரிக்கா பெரும் பதிலடி கொடுக்கும் என்றும் கடந்த ஞாயிற்றுகிழமையன்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார்.

அமெரிக்கா ஈரான் தாக்குதலால் கச்சா எண்ணெய் விலையானது தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

 அமெரிக்கா ஈரான் பதற்றம்.. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்.. ! அமெரிக்கா ஈரான் பதற்றம்.. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்.. !

ரூபாய் வீழ்ச்சி

ரூபாய் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.90 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 70.59 அமெரிக்கா டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக உள்நாட்டு சந்தையும் வீழ்ச்சி கண்டே காணப்படுகிறது. இதன் எதிரொலி இந்திய சந்தையில் உள்ள சில பங்குகளும் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

இந்திய சந்தை வீழ்ச்சி

இந்திய சந்தை வீழ்ச்சி

அதிலும் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் (2.30 மணியளவில்) 807 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 40,656 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 239 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,986 ஆகவும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.04 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.

எண்ணெய்க்காக அதிக செலவு

எண்ணெய்க்காக அதிக செலவு

இந்தியா எரிபொருளுக்காக அதிகளவில் இறக்குமதியையே நம்பி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்காக அதிக செலவு செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த விலையேற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி காணும் என்ற அனுமானத்தினாலேயே ரூபாயின் மதிப்பு, மேலும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

பத்திர லாபம் வீழ்ச்சி

பத்திர லாபம் வீழ்ச்சி

மேலும் சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிலையற்ற தன்மையால் ஈக்விட்டி சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. இதனால் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இது தவிர 10 வருட பத்திர லாபம் 6.55 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது ஆக, இது போன்ற பல காரணிகள் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian rupee down 31 paise to 72.11 per dollar on rising crude oil prices

Indian rupee down 31 paise to 72.11 per dollar on rising crude oil prices. Also sensex down 807 points to 40,656, and nifty trade below 12,000
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X