அடேங்கப்பா.. 144 கோடிக்கு ஆடம்பர வீடு.. அசத்தும் ஐநாக்ஸ் முக்கியப்புள்ளி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தியேட்டர் நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகியவை தங்களது வர்த்தகத்தை மேம்படுத்தவும், சந்தையில் ஆதிக்கத்தை அதிகரிக்கவும் இரு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க முடிவு செய்துள்ளது.

 

இக்கூட்டணி நிறுவனம் அடுத்த 5 வருடத்தில் புதிதாக 1000 முதல் 1200 திரைகளைக் கைப்பற்றித் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.

பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் மத்தியிலான ஒப்பந்தம் முடிந்த உடன் INOX Leisure இன் இயக்குனரான சித்தார்த் ஜெயின் அட்டகாசமான காரியத்தைச் செய்துள்ளார்.

 ரஷ்யாவில் இருந்து வெளியேறும் முதல் இந்திய நிறுவனம்.. இன்ஃபோசிஸ் எடுத்த அதிரடி முடிவு..! ரஷ்யாவில் இருந்து வெளியேறும் முதல் இந்திய நிறுவனம்.. இன்ஃபோசிஸ் எடுத்த அதிரடி முடிவு..!

ஐநாக்ஸ் சித்தார்த் ஜெயின்,

ஐநாக்ஸ் சித்தார்த் ஜெயின்,

ஐநாக்ஸ் லெஷூர் நிறுவனத்தின் இயக்குனரான சித்தார்த் ஜெயின், மும்பையின் முக்கியமான மற்றும் விலை உயர்ந்த ரியல் எஸ்டேட் பகுதிகளில் ஒன்றான வொர்லியில் ஒரு quadruplex பிளாட்-ஐ சுமார் 144 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக இன்டெக்ஸ்டேப் தெரிவித்துள்ளது.

ரஹேஜா லெஜெண்ட்

ரஹேஜா லெஜெண்ட்

வொர்லி பகுதியில் டாக்டர் அன்னி பெசன்ட் சாலையில் உள்ள ரஹேஜா லெஜெண்ட் கட்டிடத்தில் உள்ள 42, 43, 44 மற்றும் 46 வது தளத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் ஒருங்கிணைத்து ஓரே வீடாக வங்கியுள்ளனர் சித்தார்த் ஜெயின். இந்த வீட்டை விற்றவர் ரஹேஜா யுனிவர்சலின் ஆஷிஷ் எஸ் ரஹேஜா என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

 144 கோடி ரூபாய்
 

144 கோடி ரூபாய்

இந்த வீட்டின் விற்பனை ஒப்பந்தத்தின் படி 4 மாடி கொண்ட வீட்டின் மதிப்பு 144 கோடி ரூபாய் மற்றும் முத்திரைத்தாள் கட்டணமாக 7.2 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. இன்டெக்ஸ்டேப் ஆய்வு செய்த ஆவணங்களின்படி, இந்த வீடு மார்ச் 31, 2022 அன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 10,567 சதுர அடி வீடு

10,567 சதுர அடி வீடு

ஐநாக்ஸ் லெஷூர் நிறுவனத்தின் இயக்குனரான சித்தார்த் ஜெயின் தற்போது வாங்கியுள்ள 4 மாடி வீட்டின் மொத்த கட்டப்பட்ட பகுதி 10,567 சதுர அடி மற்றும் 12 கார் பார்க்கிங்களுடன் உள்ளது. இந்தப் பகுதிகளில் ஒரு சதுர அடி சுமார் 1.4 லட்சம் ரூபாய் என்று உள்ளூர் தரகர்கள் தெரிவித்தனர்.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

ரஹேஜா லெஜண்ட் என்பது ரியல் எஸ்டேட் நிறுவனமான ரஹேஜா யுனிவர்சலின் பிரீமியம் காண்டோமினியம் வளாகமாகும், இது 47 தளங்களைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டிடம் 2011 இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆடம்பர அப்பார்ட்மென்ட்டில் பல பிரபலங்கள் உள்ளனர்.

விராட் கோலி

விராட் கோலி

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் இதே கட்டிடத்தின் 40வது மாடியில் உள்ள வீட்டை மாதம் ரூ.15 லட்சம் வாடகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் SIL இன்வெஸ்மெண்ட்ல், அஜந்தா பார்மா போன்ற பல முன்னணி நிறுவனங்கள் இந்தக் கட்டிடத்தில் வீட்டை லீஸ் எடுத்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

INOX Siddharth Jain buys Ultra luxury house in Mumbai for Rs 144 crore

INOX Siddharth Jain buys Ultra luxury house in Mumbai for Rs 144 crore அடேங்கப்பா.. 144 கோடிக்கு ஆடம்பர வீடு.. அசத்தும் ஐநாக்ஸ் முக்கியப்புள்ளி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X