6 நாட்களில் 11 லட்சம் கோடி கோவிந்தா.. கண்ணீருடன் முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரத்தின் மோசமான வளர்ச்சிப் பாதையின் காரணமாக ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த மும்பை பங்குச் சந்தை தற்போது கொரோனா வைரஸ்-ல் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

மும்பை பங்குச்சந்தை கடந்த 6 வர்த்தக நாளில் தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்துள்ள நிலையில் இந்தியச் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர்.

6 நாட்களில் 11 லட்சம் கோடி கோவிந்தா.. கண்ணீருடன் முதலீட்டாளர்கள்..!

சீனாவில் வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது சீனா-வை தாண்டி வெளிநாடுகளுக்கும் வேகமாகப் பரவி வரும் காரணத்தால் பல நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுச் சர்வதேச பொருளாதார நெருக்கடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் கருத்து நிலவுகிறது.

ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியாவில் டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டு முடிவுகளை இந்திய நிறுவனங்கள் அறிவிக்கும் இதனால் பங்குச்சந்தையில் கணிசமான வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவல் படி இந்திய நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் சர்வதேசச் சந்தை காரணத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளில்லா டோல் கேட்.. புதிய திட்டத்தைத் தீட்டும் மத்திய அரசு..!ஆளில்லா டோல் கேட்.. புதிய திட்டத்தைத் தீட்டும் மத்திய அரசு..!

இந்த வாரத்தில் மட்டும் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 7.3 சதவீதமும், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 6.8 சதவீதமும் சரிந்துள்ளது. இது 2009ஆம் ஆண்டு ஒட்டுமொத்த உலகையை அதிரவைத்த மோசமான நிதி நெருக்கடிக் காலத்தைக் காட்டிலும் தற்போது இந்தியப் பங்குச்சந்தை மோசமான சரிவைச் சந்தித்து வருகிறது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இந்தியப் பங்குச்சந்தை தாண்டி சர்வதேச பங்குச்சந்தைகளும் சரிவுடன் முடிவடைந்து சுமார் 5 டிரில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை இழந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Investors lose ₹11 lakh cr in 6 sessions, Sensex records worst week since 2009

Sensex registered its worst week since 2009 sliding nearly 7%, as global markets fell on growing fears that the coronavirus outbreak could turn into a pandemic. Equity investors' wealth, measured by the market capitalisation of all the BSE-listed firms, eroded by ₹11 lakh crore in just 6 sessions. The Sensex fell 1,448 points to close at 38,297 on Friday.
Story first published: Saturday, February 29, 2020, 8:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X