ஐபோன் 14-க்கு இவ்வளவு வரியா.. ஆடிப்போன இந்தியர்கள்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80ஐ தொட்டு பெரும் வீழ்ச்சியடைந்த நிலையிலும், உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை மற்றும் உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் பிரச்சனைக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் கடும் நெருக்கடிக்கு மத்தியில் தனது புதிய ஐபோந் 14 சீரியஸ் போன்களின் விலையைக் கட்டுப்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் இந்தியாவில் ஐபோன் விலை அதிகமாக இருப்பது மட்டும் அல்லாமல் பெரும் தொகையை வட்டியாக மட்டுமே செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

அப்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐபோனின் விலை என்ன..? ஒவ்வொரு போனுக்கும் எவ்வளவு வரி செலுத்துகிறோம் தெரியுமா..?

ஹர்ஷா இன்ஜினியர்ஸ் செப்டம்பர் 14 அன்று ஐபிஓ.. சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு! ஹர்ஷா இன்ஜினியர்ஸ் செப்டம்பர் 14 அன்று ஐபிஓ.. சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு!

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் இந்த வருடம் ஐபோன் 14 சீரியஸ்-ல் ஐபோன் மினி போனை நீக்கியுள்ளது, இதேபோல் ப்ரோ அல்லாத மாடல் விலையை ஐபோன் 13-ஐ நிகராகக் கட்டுப்படுத்திய நிலையில் ஐபோன் ப்ரோ மாடல் போன்கள் கிட்டத்தட்ட 10000 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஐபோன் 14 ஆரம்ப விலை

ஐபோன் 14 ஆரம்ப விலை

இந்தியாவில் ஐபோன் 14 ஆரம்ப விலை 79900 ரூபாய், இதே மாடல் அமெரிக்காவில் unlocked version 829 டாலர் + வரி சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் வரி என்பது 7 சதவீதத்தில் துவங்கி ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகிறது.

ஜிஎஸ்டி, இதர வரி, கட்டணங்கள்

ஜிஎஸ்டி, இதர வரி, கட்டணங்கள்

ஆனால் இந்தியாவில் ஐபோனுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி, இதர வரி மற்றும் கட்டணங்கள் 22 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதனால் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போனின் மொத்த விலையில் 30 சதவீதத்தை அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்தி வருகிறோம்.

விலை மற்றும் வரி

விலை மற்றும் வரி

உதாரணமாக ஐபோன் 14 துவக்க மாடல் விலை 79,900 ரூபாய். இதில் ஜிஎஸ்டி 18 சதவீதம் 12,188.14 ரூபாய், இதர வரி மற்றும் கட்டணங்கள் பிரிவில் 22 சதவீதம் என 12,210.34 ரூபாய். இதன் மூலம் ஐபோன் 14 துவக்க மாடலுக்கு ஒருவர் 24,398.47 ரூபாயை வரியாகச் செலுத்த வேண்டியுள்ளது.

வரிச் சுமை

வரிச் சுமை

இதேபோல் ஐபோன் 14 ப்ளஸ்-க்கு 27,451.10 ரூபாய், ஐபோன் 14 ப்ரோ மாடலுக்கு 39,666.60 ரூபாய், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு 42,720.23 ரூபாய் வரியாகச் செலுத்தப்படுகிறது.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விலை 1,39,900 ரூபாய் இதில் 42,720.23 ரூபாய் வரியாகச் செலுத்தப்படுகிறது என்றால் மொத்த தொகையில் 30.53 சதவீதம்.

உள்நாட்டு உற்பத்தி

உள்நாட்டு உற்பத்தி

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 14 உற்பத்தி செய்து விற்பனை செய்தால் இந்தப் போன் மீதான வரி பெரிய அளவில் குறையும். இதற்கான முயற்சிகளில் தான் தற்போது ஆப்பிள் இறங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

iPhone 14 buyers need pay 30 percent money on tax and duties in India

iPhone 14 Pro max buyers need pay 30 percent money on tax and duties in India ஐபோன் 14-க்கு இவ்வளவு வரியா.. ஆடிப்போன இந்தியர்கள்..?!
Story first published: Friday, September 9, 2022, 20:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X