தமிழகத்தில் மின் கட்டணம், பேருந்து கட்டணம் உயரப் போகிறதா..? பிடிஆர் சொல்வதென்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெள்ளை அறிக்கை மூலம் அறிவித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

 

அந்த வகையில் கவலையளிக்கும் ஒரு விஷயம் என்னவெனில், தமிழக மின்சார துறை மற்றும் போக்குவரத்து துறையில் கடன் அதிகரித்துள்ளதாக அறிவித்திருப்பது தான்.

0-0.1%வரி விதிப்பதே சரி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி டிவீட்..!

நியதி இது தான்

நியதி இது தான்

பொதுவாக ஒரு துறையில் அல்லது ஒரு நிறுவனத்தில் கடன் அதிகரித்துள்ளது என்றால், அந்த கடனை அடைக்க மேற்கொண்டு கடன் வாங்கி கட்டும். அதாவது நிறுவனங்கள் பங்கு விற்பனை, கடன் பத்திரங்கள் மூலம் திரட்டுவார்கள். தங்களது பொருட்களின் மீதான விலையை அதிகாரிப்பார்கள். இது மூலம் தங்களது வருவாயினை அதிகரிக்க திட்டமிடுவார்கள்.

அரசு கட்டணத்தினை உயர்த்த போகிறதா?

அரசு கட்டணத்தினை உயர்த்த போகிறதா?

அந்த வகையில் தற்போது தமிழக அரசு மின்சார துறை மற்றும் போக்குவரத்து துறையில் கடன் அதிகரித்திருப்பதாக கூறியிருப்பது, பல தரப்பிலும் அடுத்தடுத்து அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இது மின்சார கட்டணங்களை உயர்த்துமா? போக்குவரத்து கட்டணகளை உயர்த்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு நஷ்டம்
 

ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு நஷ்டம்

தமிழகத்தில் அரசு பேருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடினால் போக்குவரத்து துறைக்கு 59.15 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக நிதித்துறை அமைச்சர் வெள்ளை அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தார். அது மட்டுமே அல்ல 26 அரசுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளன. குறிப்பாக மின்சாரம், போக்குவரத்து துறை உள்ளிட்ட சில துறைகள் மட்டுமே 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளன. தமிழகத்தில் மொத்த கடனில் 10%, மின்சாரம் மற்றும் போக்குவரத்து செலவிடப்படுகிறது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

செலவினங்கள் அதிகரிப்பு

செலவினங்கள் அதிகரிப்பு

இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அனுதினமும் பெட்ரோல், டீசல் விலையானது அதிகரித்து கொண்டே செல்கின்றது. அதே சமயம் போக்குவரத்து கட்டணங்கள் விலையும் அதிகரிக்கப்படவில்லை. மேலும் அரசுக்கு ஒரு ரூபாய் போக்குவரத்து துறை மூலமாக வருமானமாக கிடைத்தால், 2.50 ரூபாய் வரை செலவாகிறது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுவும் கவனிக்கப்பட வேண்டியவை தான்

இதுவும் கவனிக்கப்பட வேண்டியவை தான்

தற்போது தமிழக டவுன் பஸ்களில் பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இலவசம். எனினும் அரசின் இந்த அறிவிப்புக்கு முன்னரே போக்குவரத்து துறையானது பெரும் கடனில் இருந்தது.

இதெ போல மின்சார துறையிலும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது தான் இன்றைய தமிழகத்தின் நிலை.

வரி விகிதமும் குறைவு

வரி விகிதமும் குறைவு

தமிழகத்தில் வாகன வரி விகிதமும் கடந்த 15 ஆண்டுகளாகவே மாற்றப்படாமல் உள்ளது. இது மற்ற மாநில அரசுகளோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் மிக குறைவு. மின் சார துறையிலும் குறைவு தான் என்றும் பிடிஆர் கூறியுள்ளார்.

கடன் சுமையை குறைக்க என்ன வழி?

கடன் சுமையை குறைக்க என்ன வழி?

பொதுவாக கடன் சுமையை குறைக்க செலவினங்களை குறைக்க வேண்டும். வருவாயை அதிகரிக்க வேண்டும். அப்படியிருக்கையில் வருவாயை அதிகரிக்க இத்துறைகளில் கட்டண அதிகரிப்புகள் செய்யப்படலாம் என்ற கருத்துகளும் நிலவி வருகின்றன.

 அனைத்துக்கும் தயார்?

அனைத்துக்கும் தயார்?

இதற்கிடையில் பொருளாதாரத்தினை மீட்க அதிரடியான மாற்றங்களால் மட்டுமே சாத்தியம். தமிழக அரசு அனைத்து விதமான அதிரடியான மாற்றங்களுக்கும் தயார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட போகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆக மொத்தத்தில் வரவிருக்கும் பட்ஜெட்டில் அதிரடியான பல அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is tamil nadu govt going to hike electric bill and bus ticket charges?

Is tamil nadu govt going to hike electric bill and bus ticket charges? tamilnadu white paper said about debt issue.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X