இந்திய நுகர்வோர் வர்த்தகத் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஐடிசி முக்கியமான திட்டத்தைத் தீட்டியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆக உள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு முன்பு இந்தியப் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருந்தது அனைவருக்கும் தெரியும். இதன் எதிரொலியான நாட்டில் ஏற்பட்டுள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து நாட்டு மக்கள் மீண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு சட்ட விதிகள் மாற்றப்பட்டது.
இந்த விதி மாற்றங்களின் மூலம் புதிய வர்த்தக வாய்ப்பை ஐடிசி நிறுவனம் கண்டுள்ளது.
ஐடிசி
இந்திய வர்த்தக வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்துள்ள சட்ட விதி மாற்றங்கள் மூலம், ஐடிசி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவிற்குத் தரம்வாய்ந்த பழம் மற்றும் காய்கறிகளை விளைவிக்க ஒப்பந்த முறையில் விவசாயிகளுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு செய்துள்ள சட்ட விதி மாற்றங்களில் ஒப்பந்த விவசாயிகளும் திட்டமும் ஒன்று. மேலும் கொரோனா-க்கு பின்பு உலகளவில் மக்கள் மத்தியில் கொள்முதல் முறையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும் என ஐடிசி நம்புகிறது.
விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஐடிசி நிறுவனத்தின் விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் வர்த்தகத்தின் தலைவர் எஸ். சிவகுமார் கூறுகையில், "கொரோனா தொற்று எதிரொலியாக உலக மக்கள் பொருட்கள் வாங்கும் பழக்கத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகள் பல நாடுகளில் இருந்து பொருட்களை வாங்கித் தனது நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது." எனக் கூறினார்.
உதாரணமாகக் கிழக்கு இந்திய நாடுகள் அனைத்தும் பழம் மற்றும் காய்கறிகளைப் பல நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் பிரஷ் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்களும் அடக்கம்.
புதிய திட்டம்
சமீபத்தில் மத்திய அரசு செய்துள்ள விவசாயத் துறை சட்ட சீர்திருத்தத்தில் நாடு முழுவதும் விவசாயிகளிடம் விவசாய ஒப்பந்தம், farmer producer organisations (FPOs) எனப்படும் விவசாய விளைபொருட்கள் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐடிசி நிறுவனம் இந்தியாவில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேம்படு வரையில் விவசாயத் துறையில் அதிகளவிலான முதலீடுகளையும், சப்ளை செயின் தளத்தையும், விவசாயிகளுக்கு அதிக வருமானம் கொடுக்கும் வகையில் அதிகளவிலான முதலீடுகளைச் செய்ய உள்ளதாகச் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கூட்டணி
இதன் படி கார்பரேட் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஒப்பந்த செய்யப்பட்டு Price Assurance and Farm Services Ordinance 2020 விவசாயிகளுக்கு நியாயமான விலையை நேரடியாகக் கிடைக்கச் செய்திட முடிவு செய்துள்ளது ஐடிசி.
7 மாத காலம்
இத்திட்டத்திற்காக ஐடிசி அடுத்த 6 முதல் 7 மாதங்களில் நாட்டில் முக்கியப் பகுதிகளில் 3 தளத்தை உருவாக்க உள்ளது. இந்த ஒப்பந்த முறையில் கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு ஐடிசி ஏற்றுமதி செய்ய உள்ளது.
இதற்காக ஐடிசி ஐரோப்பா, அமெரிக்கா, கிழக்கத்திய நாடுகளிடம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
மக்கள் கருத்து
இத்திட்டத்தில் யாருக்கு அதிக லாபம் விவசாயிகளுக்கு, கார்பரேட் நிறுவனங்களுக்காக..? இக்கூட்டணி ஒப்பந்தம் மூலம் விவசாயிகளுக்குத் தற்போது கிடைக்கும் வருமானத்தை விடவும் அதிக வருமானம் கிடைக்குமா..?
உங்கள் பதிலை கமெண்ட் பதிவிடம் இடத்தில் பதிவிடுங்கள்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications