செப்டம்பர் 30 கடைசி நாள்.. இந்த 5 விஷயத்தை மறக்காமல் செய்ய வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றுக் காரணமாகப் பலவற்றுக்கு அரசு கூடுதலான காலத்தை அளித்துள்ளது பலருக்கும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆனால் சிலர் கடைசிக் காலகட்டம் வரையில் இதைச் செய்யமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நினைவூட்டும் வகையில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்களை இப்போது பார்ப்போம்.

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல்

கொரோனா தொற்று மற்றும் புதிய வருமான வரித் தளத்தில் இருக்கும் கோளாறு ஆகியவற்றின் காரணமாக மத்திய நிகியமைச்சகம் மாத சம்பளக்காரர்கள் வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாளாக இருந்த ஜூன் 30ஆம் தேதியை செப்டம்பர் 30ஆம் தேதியாக நீட்டித்துள்ளது.

வருமான வரித் தளத்தில் இன்னும் ப ல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் மீண்டும் இக்கால அளவீடுகள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

2020-21ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை செப்டம்பர் 30க்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் அளவிலான அபராதம் விதிக்கப்படும்.

வங்கி கணக்கில் மொபைல் எண் இணைப்பு

வங்கி கணக்கில் மொபைல் எண் இணைப்பு

அக்டோபர் 1ஆம் தேதி முதல் அனைத்து விதமான வங்கி ஆட்டோ டெபிட் பேமெண்ட்களுக்கும் இரு முறை ஒப்புதல் முறையில் பணம் டெபிட் செய்யப்படும். இதனால் உங்கள் வங்கி கணக்கில் சரியான மொபைல் எண்-ஐ இணைக்க வேண்டும்.

இல்லையெனில் தவணை ஆட்டோ டெபிட் செய்யப்படாமல் அபராதம் எதிர்கொள்ள வேண்டி வரும். அதாவது வங்கிகள் தானாக டெபிட் செய்யும் அனைத்து டெபிட்களும் இனி உங்கள் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. இதற்குக் கட்டாயம் சரியான மொபைல் எண் உடன் உங்கள் வங்கி கணக்கு இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

வீட்டுக் கடன், வாகன கடன், கார் லோன், பைக் லோன், பர்சனல் லோன், கல்வி கடன், மியூச்சுவல் பண்ட் SIP, கரென்ட் பில், போன் பில், நெட்பிளிக்ஸ் கட்டணம், கிரெடிட் கார்ட் பில் என ஒவ்வொரு மாதமும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் ஆட்டோ டெபிட் செய்யப்படும் தொகைக்கு two-factor authentication கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த முறை ஏப்ரல் 1ஆம் தேதியே அமலாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில் மக்களுக்குத் தங்கள் வங்கிக் கணக்கில் சரியான மொபைல் எண் இணைக்கச் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.

ஆதார் பான் இணைப்பு

ஆதார் பான் இணைப்பு

மத்திய அரசு ஆதார் பான் இணைப்புக்குப் பல முறை கால நீட்டிப்புச் செய்து செப்டம்பர் 30ஆம் தேதி கடைசித் தேதியாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 30க்கு பின்பும் இணைக்காவிட்டால் பான் எண் ரத்துச் செய்யப்படும்.

ரத்துச் செய்யப்படும் பட்சத்தில் புதிய பான் கார்டை தான் அனைவரும் வாங்க வேண்டும். இதுமட்டும் அல்லாமல் 1000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

மறக்காமல் செப்டம்பர் 30க்குள் பான் எண்-ஐ இணைத்திடுங்கள்

டிமாட் கணக்கிற்கு KYC

டிமாட் கணக்கிற்கு KYC

ஜூலை 30ஆம் தேதி பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனைத்து டிமாட் கணக்குகளுக்கும் KYC கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டது. முன்பு இதற்கு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது.

இதன் பின்பு செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி என அறிவித்தது. இந்த KYCல் பெயர், முகவரி, பான், மொபைல் எண், ஈமெயில் ஐடி, வருமான விபரம் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அட்வான்ஸ் வரிப் பேமெண்ட்

அட்வான்ஸ் வரிப் பேமெண்ட்

2021-22ஆம் நிதியாண்டுக்கான அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த வருமான வரி தாக்கல் செய்வது போலக் கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் செப்டம்பர் 15ஆம் தேதியைக் கடைசி நாளாக அறிவித்த வருமான வரித்துறை செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ITR filing, Demat KYC, Aadhaar pan link, bank Account mobile number link: Sep 30 last date

ITR filing, Demat KYC, Aadhaar pan link, bank Account mobile number link: Sep 30 last date
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X