டைம்ஸ் 100 வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியல்.. ஆகாஷ் அம்பானிக்கு கிடைத்த கெளரவம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இயக்குனர் பதவியில் கடந்த ஜூன் மாதம் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

 

இந்த நிலையில் தற்போது டைம்ஸ் வளர்ந்து வரும் 100 தலைவர்களின் பட்டியலில் ஆகாஷ் அம்பானி முதல் முறையாக இடம் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் ஆகாஷ் அம்பானி குறித்து டைம் என்ன கூறியுள்ளது என்பதை தற்போது பார்ப்போம்.

வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் பட்டியல்

வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் பட்டியல்

ரிலையன்ஸ் ஜியோ தலைவர், பில்லியனர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, டைம்100 நெக்ஸ்ட் இதழின் உலகின் வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் அவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க வணிக தலைவரான அம்ரபாலி கான் என்பவரும் இந்த பட்டியலில் உள்ளார்.

ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வாரிசான ஆகாஷ் அம்பானி கூடிய விரைவில் வணிகத்தில் உயர்ந்து டைம்ஸ் பட்டியலில் இடம்பெறுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது கடுமையான உழைப்பால் தற்போது அவருக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது என அவரை பற்றி டைம் கூறியது.

ஜியோ தலைவர்
 

ஜியோ தலைவர்

30 வயதான ஆகாஷ் அம்பானி கடந்த ஜூன் மாதம் 426 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கில் இருந்து பல பில்லியன் டாலர் முதலீடுகளை பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார் என்றும், இது அவரது முதல் சாதனை என்றும் டைம் மேலும் கூறியுள்ளது.

கூகுள், ஃபேஸ்புக்கில் இருந்து முதலீடு

கூகுள், ஃபேஸ்புக்கில் இருந்து முதலீடு

கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கில் இருந்து பல பில்லியன் டாலர் முதலீடுகளை பெற்ற ஆகாஷ் அம்பானி, அந்த முதலீடுகளை சிறப்பாக கையாண்டு ஜியோவை மிகப்பெரிய வளர்ச்சி அடைய செய்தார் என்று டைம் 100 நெக்ஸ்ட் மேலும் கூறியுள்ளது.

 100 வளர்ந்து வரும் தலைவர்கள்

100 வளர்ந்து வரும் தலைவர்கள்

வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், உடல்நலம், அறிவியல் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் 100 வளர்ந்து வரும் தலைவர்களை இந்த பட்டியல் எடுத்துக்காட்டுகிறது என்று டைம் தெரிவித்துள்ளது.

வேறு யார் யார்?

வேறு யார் யார்?

டைம் 100 100 வளர்ந்து வரும் தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க பாடகி SZA, நடிகை சிட்னி ஸ்வீனி, கூடைப்பந்து வீரர் ஜா மோரன்ட், ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸ், நடிகர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை கேகே பால்மர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஃபர்விசா ஃபர்ஹான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio Chairman Akash Ambani on Time's 100 emerging leaders list

Jio Chairman Akash Ambani on Time's 100 emerging leaders list | டைம்ஸ் 100 வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியல்.. ஆகாஷ் அம்பானிக்கு கிடைத்த கெளரவம்!
Story first published: Thursday, September 29, 2022, 7:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X