சரக்கு கடைக்காரரை செமயா போட்டு கொடுத்த குடிமகன்! கப் எனப் பிடித்த கலால் வரித் துறை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் வந்ததால், பல கெடுதல் நடந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் புதிதாக குடிக்கத் தொடங்கி இருப்பவர்கள், குடி போதைக்கு அடியாகிக் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் எப்படியோ கொஞ்சம் விடுபட்டு இருந்தார்கள் என்பது தான் ஒரே ஆறுதலாக இருந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக, மதுக் கடைகளைத் திறந்தது தான் கிட்டத் தட்ட தலைப்புச் செய்தி போல தீ பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறது.

இதில் ஆர்வக் கோளாறில் ஒரு குடிமகன், தனக்கு சரக்கு விற்ற கடைக்காரரையே அரசு அதிகாரிகளிடம் கோர்த்துவிட்டு இருக்கிறார்.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

பட்டினி கிடந்துவிட்டு, திடீரென மணக்க மணக்க சிக்கன் பிரியாணியோடு, மட்டன் குழம்பு, வஞ்சிர மீன் வறுவல் கிடைத்தால் என்ன செய்வீர்கள்..? ஒரு பிடி பிடிக்கமாட்டீர்களா என்ன..? அது தான் குடியிலும் நடக்கும். சுமாராக் அகடந்த 40 நாட்களுக்கு மதுக் கடைகள் எல்லாம் அடைந்து கிடந்ததை அரசு திறக்க அனுமதி க்டொஉத்தார்கள். மக்கள் வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அந்த ஒருவர்

அந்த ஒருவர்

பெரும்பாலான மக்கள், ஒன்றுக்கு மூன்று, நான்கு மடங்கு மது பானங்களை வாங்கிச் செல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் பெங்களூரில் ஒரு நபர் மட்டும் சுமார் 52,000 ரூபாய்க்கு சரக்கு வாங்கி, ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். 52,000 ரூபாய்க்கு என்னத்த வாங்கி இருப்பார்.. பட்டியல் இதோ..!

சரக்கு பட்டியல்

சரக்கு பட்டியல்

100 பைப்பர் பெரியது 6 - 16,314 ரூபாய்
எஸ் எம் வி ப்ளைன் 750 4 - 5,848 ரூபாய்
பட்வைசர் 650 12 - 2,040 ரூபாய்
பட்வைசர் 500 24 - 3,360 ரூபாய்
பட் மேக்னம் 500 24 - 3,840 ரூபாய்
அப்சல்யூட் சிட்ரான் 1 - 2,925
ஜிம் பீம் வொயிட் 1 - 2,600 ரூபாய்
பிசி க்ரான்பெர்ரி 30 - 2,400 ரூபாய்... என பட்டியல் நீள்கிறது. மேலா படத்தில் பார்க்கலாம்.

கடை விவரம்

கடை விவரம்

இந்த மது பானங்களை, பெங்களூரில், மகானா டவர்ஸ் சிக்கா அடுகொடி பகுதியில் இருக்கும் வென்னிலா ஸ்பிரிட் சோன் என்கிற கடையில் இருந்து வாங்கி இருக்கிறார்கள். நேற்று மே 04, 2020 ம்தியம் 1.30 மணிக்கு தான் விற்று இருக்கிறார்கள். மொத்த பில் மதிப்பு 52,841 ரூபாய்.

கலால் வரி

கலால் வரி

இந்த பில் கர்நாடகா மாநிலத்தின் கலால் வரித் துறையினர் கண்ணில் பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக ஒரு நபருக்கு 2.3 லிட்டர் தான் இந்திய மது பானங்கள் (Indian made liquor - IML) விற்கப்பட வேண்டும். ஆனால் இந்த பில் படிப் பார்த்தால் 17.4 லிட்டர் விற்று இருக்கிறார்கள். அதே போல ஒரு நபருக்கு 18.2 லிட்டர் தான் பீர் விற்க வேண்டும். ஆனால் 35.1 லிட்டர் பீர் விற்று இருக்கிறார்கள்.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

எனவே வென்னிலா ஸ்பிரிட் சோன் கடையின் உரிமையாளர் எஸ் வெங்கடேஷ் மீது, ஒரு நபருக்கு அரசு அனுமதித்து இருக்கும் அளவுக்கு அதிகமாக மதுபானங்களை விற்றதற்கு ஒரு வழக்கை பதிவுச் செய்து இருப்பதாக பெங்களூரு நகர தெற்கு கலால் வரித் துறை துணை ஆணைய ஏ கிரி சொல்லி இருக்கிறார்.

கடைக்கார விளக்கம்

கடைக்கார விளக்கம்

"மதுபானங்களை வாங்க 8 பேர் ஒன்றாக சேர்ந்து வந்தார்கள். நண்பர்கள் எல்லாம் வாங்கிய சரக்குக்கு ஒருவரே பணம் கொடுத்தார். அவ்வளவு தான்" என வென்னிலா ஸ்பிரிட் சோன் கடையின் உரிமையாளர் வெங்கடேஷ் ஒரு எபிக் ரிப்ளை கொடுத்து இருக்கிறார். கலால் வரித் துறையினர் விசாரிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karnataka excise book case against liquor seller for selling more than limit

The Karnataka excise department has booked a case against a liquor seller in bengaluru for selling alcohol drinks more than the government permitted limit.
Story first published: Tuesday, May 5, 2020, 15:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X