LVB பிக்சட் டெபாசிட்-க்கு 7.5% வட்டி.. எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கியை விடவும் அதிகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல கோடி மக்கள் அதிகம் நம்பும், மிகவும் பாதுகாப்பான முதலீடாக விளங்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்குச் சந்தையின் முன்னணி வங்கிகளை விடவும் அதிக வட்டி வருமானத்தைக் கொடுக்கிறது DBS-வங்கி கட்டுப்பாட்டிற்கு மாறிய லட்சுமி விலாஸ் வங்கி.

அதிகளவிலான வாராக்கடன் மற்றும் நிர்வாகப் பிரச்சனையின் காரணமாகத் தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லட்சுமி விலாஸ் வங்கி சிங்கப்பூர் DBS வங்கியின் இந்தியக் கிளையான DBS இந்தியக் கிளையுடன் இணைக்கப்பட்டது.

இந்த இணைப்பின் மூலம் லட்சுமி விலாஸ் வங்கி திவாலாகும் நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டதோடு, இவ்வங்கியில் டெப்பாசிட் செய்தவர்களின் பணம் காப்பாற்றப்பட்டது.

இந்த நிலையில் DBS இந்தியா கட்டுப்பாட்டில் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கி தனது பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி வருமானம் கொடுக்கிறது.

 ஓரே வருடத்தில் 25% லாபத்தை அள்ளிக்கொடுத்த 4 SIP திட்டங்கள் இதுதான்..! ஓரே வருடத்தில் 25% லாபத்தை அள்ளிக்கொடுத்த 4 SIP திட்டங்கள் இதுதான்..!

 DBS வங்கி

DBS வங்கி

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் DBS வங்கி ஆசியாவிலேயே சிறந்த நிதி நிறுவனங்களில் ஒன்று. DBS சிங்கப்பூர் மட்டும் அல்லாமல் சுமார் 18 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. DBS வங்கியை "World's Best Bank" என யூரோமணி, "Global Bank of the Year" எனத் தி பேங்கர், "Best Bank in the World" எனக் குளோபல் பைனான்ஸ் ஆகிய அமைப்புகள் பாராட்டியுள்ளது.

 பணிநீக்கம் இல்லை

பணிநீக்கம் இல்லை

பொதுவாக ஒரு நிறுவன இணைப்பிற்குப் பின் ஊழியர்கள் பணிநீக்கம் கட்டாயம் இருக்கும். ஆனால் லட்சுமி விலாஸ் வங்கியின் அனைத்து ஊழியர்களும் தற்போது இருக்கும் அதே பணியில் DBS வங்கியின் நிர்வாகத்தின் கீழ் பணியாற்ற உள்ளனர். லட்சுமி விலாஸ் வங்கியில் இருக்கும் அதே கட்டுப்பாடுகள் விதிமுறைகள் தொடரும், இதில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என DBS இந்தியா தெரிவித்துள்ளது.

 வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

இதேபோல் லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தின் அதன் வாடிக்கையாளர்களுக்குச் சேமிப்பு கணக்கு, வைப்பு நிதிக்குக் கொடுத்த அதே வட்டி விகிதம் DBS வங்கி நிர்வாகத்திலும் தொடரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது மக்களுக்குப் பெரிய ஜாக்பாட் ஆகவே உள்ளது.

 

 பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

DBS இந்தியா வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கி அதிகப்படியாக 7.5 சதவீதம் வட்டியில் பிக்சட் டெபாசிட் சேவை அளிக்கிறது.

365 நாள் பிக்சட் டெபாசிட் திட்டம் - 6% வட்டி
366 நாள் பிக்சட் டெபாசிட் திட்டம் - 7% வட்டி
367 நாள் முதல் 3 வருட பிக்சட் டெபாசிட் திட்டம் - 6% வட்டி
3 முதல் 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டம் - 6% வட்டி
5 முதல் 10 வருட பிக்சட் டெபாசிட் திட்டம் - 6% வட்டி

இந்த அனைத்து திட்டங்களுக்கும் சீனியர் சிட்டிசன்களுக்கு 0.5 சதவீதம் கூடுதல் வட்டி அளிக்கிறது DBS இந்தியா வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கி.

 

 முன்னணி வங்கிகள்

முன்னணி வங்கிகள்

சந்தையில் முன்னணி வங்கிகளாக இருக்கும் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாம் நேஷனல் வங்கிகளை விடவும் லட்சுமி விலாஸ் வங்கியில் அதிக வட்டி விகிதத்தில் பிக்சட் டெபாசிட் சேவை அளிக்கப்படுகிறது.

லட்சுமி விலாஸ் வங்கியில் தற்போது கொடுக்கபடும் வட்டி விகிதம் சந்தையில் இருக்கும் பல வங்கிகளை விடவும் 2 முதல் 3 சதவீதம் அதிகமாகும்.

 

 5 லட்சம் வரை இன்சூரன்ஸ்

5 லட்சம் வரை இன்சூரன்ஸ்

DBS இந்தியா வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கியில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் Deposit Insurance and Credit Guarantee Corporation of India அமைப்பு இன்சூரன்ஸ் கொடுக்கிறது.

 குறுகிய கால முதலீடுகள்

குறுகிய கால முதலீடுகள்

தற்போதைய நிலையில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் குறுகிய கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். அடுத்த சில மாதத்தில் நீண்ட கால முதலீட்டுக்கான வட்டி விகிதம் உயரும் வாய்ப்புகள் இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lakshmi Vilas Bank (DBS) offers 7.5 percent interest rate for Fixed deposits

Lakshmi Vilas Bank (DBS) offers 7.5 percent interest rate for Fixed deposits
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X