94 வருட பழமையான தமிழக வங்கியின் மாபெரும் வரலாறு..! #LVB

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தைச் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கி இயக்கத்துக்கு, மத்திய நிதித்துறை கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதத்திற்கு தடை விதித்துள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு தற்போது மத்திய நிதித்துறை இயக்க தடை விதித்துள்ளது. இந்த வங்கியில் இருந்து ஒரு மாதத்திற்கு சேமிப்பு, நடப்பு மற்றும் அனைத்து கணக்குகளில் இருந்தும் 25000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது.

எனினும் கல்வி செலவு, அவசர மருத்துவ தேவை, திருமண செலவுகள் உள்ளிட்ட முக்கிய செலவுக்கு, ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் 25,000 ரூபாய் மேல் எடுத்துக் கொள்ளலாம் என்று பல நிபந்தனைகளை விதித்துள்ளது நிதியமைச்சகம். இந்த அதிரடி நடவடிக்கையானது இன்று மாலை 6 மணி முதல் ( நவம்பர் 17) டிசம்பர் 16 வரை அமலில் இருக்கும் என்றும் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது கவனிக்கதக்கது. அதெல்லாம் சரி, இவ்வங்கியின் வரலாறு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

 

தமிழகத்தை சேர்ந்த லட்சுமி விலாஸ் பேங்க் இயங்க கட்டுப்பாடுகளுடன் தடை.. என்ன காரணம்..!

லட்சுமி விலாஸ் வங்கியின் வரலாறு

லட்சுமி விலாஸ் வங்கியின் வரலாறு

தென் இந்தியாவை சேர்ந்த பிரபல வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி, 7 தொழிலதிபர்களால் கடந்த 1926ம் ஆண்டில் கருரில் உருவாக்கப்பட்டது. ராமலிங்க செட்டியார் என்பவரின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த வங்கியின் நோக்கமே, தொழில் மற்றும் வேளாண்மை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள கரூர் மற்றும் அதை சுற்றியுள்ள மக்களின் நிதித் தேவையை பூர்த்தி செய்வதே.

உரிமம் எப்போது?

உரிமம் எப்போது?

இந்த நிலையில் 1926ல் நவம்பர் 10ம்தேதி இவ்வணிகத்தைத் தொடங்க சான்றிதழைப் பெற்றது. எனினும் 1949ல் ரிசர்வ் வங்கி வங்கித் துறையின் கட்டுப்பாட்டாளராக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஜூன் 1958ல் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கி உரிமைத்தை பெற்றது லட்சுமி விலாஸ் வங்கி. இந்த நிலையிலேயே ஆக்ஸ்ட் 11, 1958 அன்று முதல் இது ஒரு வணிக வங்கியாக செயல்பட ஆரம்பித்தது.

விரிவாக்க பணிகள்
 

விரிவாக்க பணிகள்

இவ்வங்கி 1958ல் வணிக வங்கியாக செயல்பட ஆரம்பித்தாலும், குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக 1961 - 1965 ல் வளர்ச்சி கண்ட நிலையில், கணிசமான விரிவாக்கத்தையும் கண்டது. இதன் பின்னரே இவ்வங்கி மகராஷ்டிரா மற்றும் குஜராத், மத்தியபிரதேசம் உள்ள குறிப்பிட்ட வணிக மையங்களிலும் கிளைகளை நிறுவியது.

சர்வதேச அளவில் விரிவாக்கம்

சர்வதேச அளவில் விரிவாக்கம்

இதற்கிடையில் 1977ல் சர்வதேச அளவில் தனது சேவைகளை வழங்கும் அளவுக்கு வளர்ந்தது. பின்னர் கடந்த 1993ம் ஆண்டு வங்கியின் சொந்தக் குழுவினரால் தரவு செயலாக்கம் மற்றும் கணினிமயமாக்கல் என விரிவாக்கம் செய்தது. மேலும் கடந்த 2018ம் ஆண்டு நிலவரப்படி, இவ்வங்கியில் மொத்தம் 569 கிளைகள், 1046 ஏடிஎம்கள், மற்றும் 7 நீடிப்பு கவுண்டர்கள் என நிறுவனப்பட்டிருந்தது.

வங்கி இணைப்பு

வங்கி இணைப்பு

இதன் பின்னர் கடந்த ஏப்ரல் 2019 அன்று, லட்சுமி விலாஸ் வங்கி வாரியம், நாட்டின் இரண்டாவது பெரிய வீட்டு நிதி நிறுவனமான இந்தியா ஃபுல்ஸ் ஹவிஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் இணைக்க ஒப்பதல் பெறப்பட்டது. இந்த நிலையில் இந்தியா ஃபுல்ஸ் ஒருகிணைந்த இந்த கூட்டமைப்பில் 90.5% பங்குகளை பெறுவார்கள் என்றும், இதே மீதமுள்ள 9.5% பங்குகளை லட்சமி விலாஸ் வங்கி பெறும் என்றும், இது இந்த இணைப்பிற்கு பின்னர் இந்தியா புல்ஸ் லட்சுமி விலாஸ் என்று அழைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

லட்சுமி விலாஸூக்கு தொடர் நஷ்டம்

லட்சுமி விலாஸூக்கு தொடர் நஷ்டம்

கடந்த சில வருடங்களாகவே தொடர் நஷ்டத்தினை மட்டுமே கண்டு வந்த இந்த வங்கி, கடந்த 2019ம் நிதியாண்டில் பெருத்த நஷ்டத்தினையே கண்டுள்ளது. குறிப்பாக கடந்த 2015 முதல் சிறும் லாபத்தில் இருந்து வந்த நிலையில் 2018 மற்றும் 2019ல் பெரும் நஷ்டத்தினை கண்டது. இதனால் கடந்த ஜூலை 2017ல் 189 ரூபாயாக இருந்த பங்கின் விலை, இன்று வெறும் 15.55 ரூபாயாக மட்டும் உள்ளது,

வருவாயும் குறைவு

வருவாயும் குறைவு

குறிப்பாக வட்டி வருவாயும் தொடர்ந்து இவ்வங்கியில் குறைந்து கொண்டே வந்த நிலையில் இவ்வங்கி இப்படி இணைப்பு நடவடிக்கைக்கு ஒப்புக் கொண்டது என கூறலாம். குறிப்பாக கடந்த ஜூன் 2018ல் 726.99 கோடி ரூபாயாக இருந்த வருவாய், ஜூன் 2019ல் 623.94 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே கடந்த மார்ச் 2015ல் 230.15 கோடி ரூபாயாக இருந்த செலவினம், கடந்த மார்ச் 2019ல் 401 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் மற்ற வருவாய்களும் இந்த சமயத்தில் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த ஜூன் 2018ல் 60.51 கோடி ரூபாயாக இருந்தது, ஜூன் 2019ல் 53.22 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆக வருமானம் குறைந்து செலவினங்களே இவ்வங்கியை ஆட்டி படைக்க தொடங்கியது, இந்த நிலையில் தற்போது இப்படி ஒரு அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

நிகர லாபம் எப்படி இருந்தது?

நிகர லாபம் எப்படி இருந்தது?

இந்த வங்கியின் லாபம் தொடர்ந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த மார்ச் 2015ல் 132.20 கோடி ரூபாயாக இருந்த, இத நிகரலாபம், 2016ல் 180.21 கோடி ரூபாயாகவும், 2017ல் 256.07 கோடி ரூபாயாகவும், இதே 2018ல் 584.87 கோடி ரூபாய் நஷ்டமும், இதே 2019ல் 894.10 கோடி ரூபாய் நஷ்டமும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிசிஏ நடவடிக்கை

பிசிஏ நடவடிக்கை

இதற்கிடையில் சமீபத்தில் லட்சுமி விலாஸ் வங்கி மீது பல்வேறு புகார்கள் எழுந்ததன் காரணமாக, ரிசர்வ் வங்கி அதிரடி இந்த வங்கியின் மீது PCA நடவடிக்கை எடுத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிகளவிலான வாராக்கடன் மற்றும் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு போதுமான நிதி வலிமை இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி மீது இந்த நடவடிக்கையை எடுத்தது ரிசர்வ் வங்கி.

ஏன் இந்த நடவடிக்கை

ஏன் இந்த நடவடிக்கை

இந்த பிசிஏ நடவடிக்கை வங்கி நிதி செயல்பாடுகளில் திருப்தி இல்லாத நிலையில் அதன் செயல்திறனை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளின் இது முக்கிய நடவடிக்கை ஆகும். இதன் மூலம் ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, இவ்வங்கியின் நிர்வாகம் மற்றும் நிதி நிலை, வர்த்தக முறை, வர்த்தகம் குறித்து ஆய்வுகள் கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி நடத்தி வருகிறது. இதற்கிடையில் இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கை பாய்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

lakshmi vilas bank history details

Tamilnadu based lakshmi vilas bank under one month moratorium, its effective from 6:00 pm on November 17 till December 16.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X