லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி அதீத வாராக்கடன் சுமையின் காரணமாகவும், நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவும் ரிசர்வ் வங்கி மற்றும் செபி கட்டுப்பாட்டிற்கு வந்ததைத்
தொடர்ந்து இவ்வங்கி பணப் பரிமாற்றம் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இவ்வங்கி மற்றும் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தைக் காப்பாற்றவும் லட்சுமி விலாஸ் வங்கியைச் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட DBS வங்கியுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS வங்கிகள் இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இணைப்பிற்கான பணிகளை இன்று முதல் துவங்கப்படுகிறது.

இதன் வாயிலாக நவம்பர் 27ஆம் தேதி முதல் லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றப்பட உள்ளது. மேலும் இதே நாளில் ரிசர்வ் வங்கி கோரிக்கை மூலம் லட்சுமி விலாஸ் வங்கி மீது அறிவிக்கப்பட்ட ஒரு மாத மோராடோரியம் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS வங்கிக்கான இணைப்புக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், நிர்ணயம் செய்யப்பட்ட நவம்பர் 27ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கி கிளைகள் அனைத்தும் DBS வங்கி கிளையாக இயங்க துவங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் மற்றும் டெப்பாசிட் பணம்

வாடிக்கையாளர்கள் மற்றும் டெப்பாசிட் பணம்

இதேபோல் நவம்பர் 27 முதல் லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் DBS வங்கி வாடிக்கையாளர்களாக மாறப்படுகிறார்கள். இதேபோல் டெப்பாசிட் தொகை, முதலீடுகள், வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகை என அனைத்தும் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் DBS வங்கி பெயரில் இயக்கிக்கொள்ள முடியும்.

லாபம்

லாபம்

லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS வங்கி இணைப்பு இரு தரப்பு வங்கிகளும் பெரிய அளவிலான லாபம் உள்ளது. இந்த இணைப்பு மூலம் லட்சுமி விலாஸ் வங்கி கிளைகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், வர்த்தகம் என DBS வங்கியின் ரீடைல் வர்த்தகம் விரிவாக்கம் செய்யப் பெரிய அளவிலான வாய்ப்பு உருவாகியுள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கி

அதீத வாராக்கடன் மற்றும் நிர்வாகப் பிரச்சனையில் இருந்து லட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கி மூலம் காப்பாற்றப்படும். இது மட்டும் அல்லாமல் லட்சுமி விலாஸ் வங்கியின் ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படபோவது இல்லை என்பதால் நிர்வாகத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
இதேபோல் ஊழியர்களின் சம்பளத்திலும் எவ்விதமான மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஊழியர்களின் சம்பளத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய வங்கி அமைப்பு

இந்திய வங்கி அமைப்பு

ரிசர்வ் வங்கி முதல் முறையாக நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள வங்கியை வெளிநாட்டு வங்கியுடன் இணைத்துள்ளது. பொதுவாக வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் ரீடைல் வங்கி சேவையில் இறங்குவது என்பது மிகவும் சவாலான ஒன்று. ஆனால் இதேநேரம் வெளிநாட்டு வங்கிகளிடம் அதிகளவிலான நிதி இருக்கும்.

இத்தகைய இணைப்பு மூலம் இந்தியாவில் நிதிநெருக்கடியில் இருக்கும் வங்கியைக் காப்பாற்ற புதிய வடிவமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lakshmi Vilas Bank to change as DBS Bank from Friday: moratorium lifted on same day

Lakshmi Vilas Bank to change as DBS Bank from Friday: moratorium lifted on same day
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X