நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில், மூத்த குடிமக்கள் அதிக வட்டி, அதிக லாபம் கொடுக்கும் ஆபத்து இல்லாத முதலீடு திட்டங்களைத் தேடி வருகின்றனர். இவர்களுக்காகவே சிறப்பான முதலீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு அதிக லாபம் அளிக்கக் கூடிய ஒரு சிறப்புப் பிக்ஸட் டெபாசிட் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ் தற்போதைய சந்தை வைப்பு நிதி வட்டி விகிதத்தை விடவும் அதிகமான வட்டி வருமானம் கொடுக்கப்படுகிறது. இதில் முதலீடு செய்ய இன்னும் 7 நாள் மட்டுமே உள்ளதால் மூத்த குடிமக்களுக்கு மத்தியில் இத்திட்டங்கள் பிரபலமாகி வருகிறது.

பாதுகாப்பான முதலீடு
மூத்த குடிமக்கள் செய்யும் முதலீடுகள் ஆபத்து குறைவாக இருக்கும் திட்டங்களாக இருக்க வேண்டும். இப்போது தான் குறித்த லாபமும், வருமானமும் கிடைக்கு. ஆகவே தற்போது சந்தையில் நீண்ட கால அடிப்படையில் அதிக வருமானம் கொடுக்கக் கூடிய திட்டங்களாக இருப்பது வங்கி வைப்பு நிதி மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்.

வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பால் வங்கிகள் அதிகளவிலான வட்டியைக் குறைத்துள்ள நிலையில், புதிய வைப்பு நிதிகளையும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு இந்தியாவின் முன்னணி வங்கிகள் தற்போத சந்தை வைப்பு நிதியை விடவும் கூடுதல் வட்டி விகிதத்தில் பிக்ஸட் டெபாசிட் சேவையை வழங்குகிறது.

7 நாட்கள் மட்டுமே
இந்தச் சிறப்பு முதலீட்டுச் சேவை மே மாதம் முதல் அமலில் இருக்கும் நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி தான் கடைசி நாளாக உள்ளது. இதனால் முதலீடு செய்ய விரும்புவோர் அனைவரும் அடுத்த 7 நாட்களுக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறுங்கள். சரி அப்படி எந்த வங்கி எவ்வளவு வட்டி விகிதத்தில் வருமானம் கொடுக்கிறது..? வாங்கப் பார்ப்போம்.

ஹெச்டிஎப்சி வங்கி
நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி HDFC Senior Citizen Care திட்டத்தின் கீழ் 0.75 சதவீதம் கூடுதல் வட்டி வருமானத்தை அளிக்கிறது. இந்தப் புதிய வட்டி விகிதம் நவம்பர் 17ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில், டிசம்பர் 13ஆம் தேதி வரையில் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு ஐசிஐசிஐ வங்கி 6.25% வட்டி வருமானம் கொடுக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி
ஹெச்டிஎப்சி வங்கியைப் போலவே ஐசிஐசிஐ வங்கியும் மூத்த குடிமக்களை அதிகளவில் வாடிக்கையாளர்களாக ஈர்க்கும் பொருட்டு ICICI Bank Golden Years என்ற திட்டத்தில் தற்போதைய சந்தை அளவீட்டை விடவும் 80 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.80 சதவீதம் வட்டியைக் கூடுதலாக அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு ஐசிஐசிஐ வங்கி 6.30% வட்டி வருமானம் கொடுக்கிறது.

பாங்க் ஆப் பரோடா
பாங்க் ஆப் பரோடா மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டத்திற்கு 100 அடிப்படை புள்ளிகள் அதாவது 1 சதவீதம் கூடுதல் வட்டி வருமானத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் இத்திட்டத்தில் 5 முதல் 10 வருட காலத்திற்கு முதலீடு செய்வோருக்கு 6.25 சதவீத வட்டி வருமானம் கொடுக்கிறது.