எல்ஐசிக்கு ரூ.30,000 கோடி வாராக்கடனா.. ஏன் என்ன ஆச்சு.. காரணம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மக்களின் வாழ் நாள் பாதுகாப்புக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் எல்.ஐ.சி நிறுவனம், இன்சூரன்ஸ் துறையில் மட்டுமா இருக்கிறது.

 

இது ஒரு பாதுகாப்பான அராசாங்க பத்திரங்களை வாங்குதல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு பிணை வழங்குதல் என பலவற்றிலும் அல்லவா தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.

சொல்லப்போனால் சமீபத்தில் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் தேவையான முதலீட்டை எல்ஐசியிடம் இருந்து தான் மத்திய அரசு பெற்றுக் கொண்டிருக்கிறது.

செலுத்த வேண்டிய வரிக்கு மேல் வரியா..? அதென்ன சர்சார்ஜ்..!

வாராக்கடன் அதிகரிப்பு

வாராக்கடன் அதிகரிப்பு

சமீபத்திய நிதி எண்களைப் பொறுத்தவரை எல்ஐசி தனியார் துறை தொழில் முனைவோருக்கு கடன்களை வழங்குவதில், வங்கிகளைப் போன்றே தவறுகளை பிரதிபலிக்கிறது என்றும் கூறப்படுகிறது. இது எடுத்துக்காட்டும் விதமாக 2019 - 20ம், நிதியாண்டின் முதல் பாதியில் மொத்த வாராக்கடன் அளவு (ஏப்ரல் - செப்டம்பர் காலத்தில்) 6.10% ஆக அதிகரித்து உள்ளது.

தனியார் வங்கிகளைப் போல

தனியார் வங்கிகளைப் போல

யெஸ் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற வங்கிகளுடன் ஒப்பிடத்தக்கவையாகும். ஒரு காலத்தில் சிறந்த சொத்துத் தரத்திற்காக அறியப்பட்ட வங்கிகள், தற்போது சவாலான சூழ்நிலைகளினால் வாராக்கடன்கள் அதிகரித்து வருவதை காண்கின்றனர். குறிப்பாக சொல்லப்போனால் யெஸ் வங்கி கடந்த இரண்டாவது காலாண்டில் 7.39%, ஐசிஐசிஐ வங்கி 6.37%, ஆக்ஸிஸ் வங்கி 5.03% வாராக்கடன் விகிதங்களுடன் இருந்தன.

கடன் வழங்குதல்
 

கடன் வழங்குதல்

அரசு பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி கார்ப்பரேட் துறைகளுக்கும் மற்றும் மாற்ற முடியாத கடனீடுகள் (non-convertible debentures) மூலமும் கடன் வழங்கி வருகிறது. மொத்த சொத்து 36 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இந்த நிறுவனம், தனியார் துறைகளிலும் பங்கினை கொண்டுள்ளது.

மொத்த வாராக்கடன்

மொத்த வாராக்கடன்

செப்டம்பர் 30. 2019, நிலவரப்படி எல்ஐசி மொத்தம் சுமார் 30,000 கோடி ரூபாய் வாராக்கடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 30, 2019 நிலவரப்படி 6.10% மொத்த வாராக்கடன் உள்ளதாகவும், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டதட்ட இது இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் எல்ஐசி எப்போதும் நிலையான மொத்த வாராக்கடன் விகிதம் 1.5 - 2% தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கெல்லாம் கடன்?

யாருக்கெல்லாம் கடன்?

டெக்கான் குரோனிக்கள், எஸ்ஸார் போர்ட், காமன், ஐ எல் & எஃப் எஸ், பூஷண் பவர், வீடியோகான் இஸ்டஸ்ட்ரீஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், ஆம்ற்றாக் ஆட்டோ, ஏபிஜி ஷிப்யார்ட், யூனிடெக், ஜிவிகே பவர், ஜிடிஎல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதில் அடங்கும். இந்த நிறுவனங்கள் பலவற்றில் எல்ஐசி இரண்டு வகையான வெளிப்பாடுகளையும் கொண்டுள்ளது. ஒன்று கால கடன்கள், மற்றொன்று என்.சி.டிக்கள் வழியாக முதலீடுகள் செய்துள்ளது. இதில் பெரும்பாலான வழக்குகளில் எல்ஐசிக்கு சாதகமாக கிடைக்குமா என்பது சந்தேகமான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்சூரன்ஸ் துறையில் ஆதிக்கம்

இன்சூரன்ஸ் துறையில் ஆதிக்கம்

போட்டிகள் அதிகளவில் இருந்த போதிலும் கூட முதல் ஆண்டு பிரிமீயங்களில் மூன்றில் ஒரு பங்கு எல்ஐசி ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC reported total gross NPAs of around Rs 30,000 crore as on last September end

Despite heavy competition, The LIC dominates the insurance market share with over two – third share in the first year premium. But LIC had Total gross NPAs around Rs.30,000 crore as on sep 30,2019.
Story first published: Wednesday, January 22, 2020, 12:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X