எல்ஐசி பங்கு விற்பனை வேண்டாம்.. வெடிக்கும் போராட்டம்.. தொழிலாளர் சங்கம் அதிரடி முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த சனிக்கிழமையன்று தனது இரண்டாவது பட்ஜெட்டை பலத்த சவால்களுக்கும் மத்தியில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த பட்ஜெட்டில் எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதுவும் இதை பொது பங்கு வெளியீடு மூலமாக விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதற்காக எல்ஐசி தொழில் சங்க கழகங்கள் தொடர்ச்சியான போராட்டங்களைத் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

தொடர்ச்சியான் போராட்டம்

தொடர்ச்சியான் போராட்டம்

இந்த பங்கு விற்பனையை எதிர்த்து இந்த தொழில்சங்கங்கள் மதிய உணவு இடைவேளையின் போது போராட்டங்களை நடத்தும், பின்னர் மதிய உணவு நேரத்திற்கு முன் செவ்வாய்கிழமையன்றும் ஒரு மனி நேரம் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்யலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 ஐபிஒ எதற்கு?

ஐபிஒ எதற்கு?

மேலும் இது குறித்து அவர்கள் நாங்கள் முழுக்க இந்த பொது பங்கு வெளீயீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எல்ஐசி ஒரு நல்ல லாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக இருக்கும் போது, அதை ஏன் பொது பங்கு வெளியீட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அரசாங்கத்தின் முதலீடுகளில் கணிசமான அளவு எல்ஐசி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2,600 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

தங்க வாத்து கொல்லப்படுகிறது

தங்க வாத்து கொல்லப்படுகிறது

அரசாங்கத்திற்கு நிதி தேவைப்படும்போதெல்லாம் எங்களைத் தான் தேடி வருகின்றது. அதிலும் நாங்கள் உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூகத்துறை மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றிற்கும் நிதி வழங்கி வருகிறோம். ஆனால் எல்ஐசி ஐபிஓ மூலம் பட்டியிடலிடப்பட்டால். தங்க வாத்து கொல்லப்படும். ஆக நாங்கள் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம் என்றும் மூத்த அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.

ஒரு நாள் வேலை நிறுத்தம்

ஒரு நாள் வேலை நிறுத்தம்

எல்ஐசியில் (மார்ச் 2019ன் படி) தற்போது 2.85 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 3 மற்றும் 4ம் தேதி ஆர்பாட்டங்களுக்கு பின்னர், பின்னர் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை இந்த குழு பின்னர் பரிசீலிக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஐடிபிஐ வங்கியில் உள்ள பங்குகளையும் அரசு தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC unions decided to protests against the govt’s decision

LIC unions decided to protests on Feb 3 and feb 4th, and They will consider a one day strike later, said a report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X