ரூ.25,000 மட்டுமே கிடைக்கும்.. லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.! #LVB

லட்சுமி விலாஸ் வங்கி மீதான moratorium கட்டுப்பாடுகள் மூலம் இவ்வங்கி வாடிக்கையாளர்கள் 25,000 ரூபாய்க்கு அதிகமான பணத்தை எடுக்கவோ, கடன் பெறவோ முடியாது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முக்கிய வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி 2019 முதல் ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில், இவ்வங்கியின் நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனையின் விளைவாக லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் வங்கியின் 6 இயக்குனர்களைப் பதவியில் இருந்து நீக்கி ரிசர்வ் வங்கி உதவியுடன் தற்காலிகமாக 3 அதிகாரிகளின் கையில் நிர்வாகத்தைக் கொடுத்தது.

Recommended Video

Lakshmi Vilas Bank-ல் புதிய கட்டுப்பாடுகள் ஏன்? | Oneindia Tamil

இதன் பின்பு லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகத்தை மொத்தமாக ரிசர்வ் வங்கியும் செபியும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இவ்வங்கியின் நிர்வாகம் மற்றும் நிதி நிலை, வர்த்தக முறை, வர்த்தகம் குறித்து ஆய்வுகள் கடந்த 2 மாதமாக நடத்தி வருகிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் கோரிக்கையின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கியின் மீது டிசம்பர் 16 வரையில் moratorium கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 மத்திய நிதியமைச்சகம்

மத்திய நிதியமைச்சகம்

இன்று மாலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு நிர்வாகம் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு நவம்பர் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரையில் moratorium கட்டுப்பாடுகளை விதிக்கப்படுவதாக அறிவித்தது.

டெபாசிட்

டெபாசிட்

இந்தத் தடை காலத்தில் இவ்வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு 25,000 ரூபாய்க்கு அதிகமாகத் தொகையைக் கொடுக்கக் கூடாது, அப்படிக் கொடுக்க வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து எழுத்துப்பூரவ ஒப்புதல் பெற வேண்டும்.

கடன்

கடன்

இதேபோல் வங்கி 25,000 ரூபாய்க்கு மேல் யாருக்கும் கடன் அளிக்கக் கூடாது. இப்படிக் கடன் கொடுக்க வேண்டுமென்றால் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.

 அவரச மற்றும் தவிர்க்க முடியாத காரணங்கள்

அவரச மற்றும் தவிர்க்க முடியாத காரணங்கள்

மேலும் அவரச காரணங்களுக்காகவும், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அதாவது குடும்பப் பிரச்சனை, மருத்துவச் செலவுகள், கல்வி கட்டணம் ஆகியவற்றுக்காக நிதி தேவை இருக்கும் பட்சத்தில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு 25,000 ரூபாய்க்கு அதிகமாகத் தொகையைக் கொடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி கொடுக்கிறது.

 PCA விதிகள்

PCA விதிகள்

இவ்வங்கியின் கடந்த செப்டம்பர் 2019ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் prompt corrective action (PCA) கீழ் உள்ளது. மேலும் அக்டோபர் மாதம் லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்து தற்போது moratorium கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LVB cant pay more that ₹25,000 to depositor, creditor under moratorium

LVB cant pay more that ₹25,000 to depositor, creditor under moratorium
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X