ரூ.13,600 கோடி மோசடி செய்த மெகுல் சோக்ஸி காணவில்லை.. இந்திய அரசுக்கு புதிய தலைவலி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி உடன் சேர்ந்து சுமார் 13,600 கோடி ரூபாய் மோசடி செய்த மெகுல் சோக்ஸி இந்தியாவை விட்டு இரவோடு இரவாகத் தப்பியோடிய நிலையில், நீண்ட காலத்திற்குப் பின்பு கிரீபியன் நாடுகளான ஆன்டிகுவா மற்றும் பார்புடா பகுதியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவதாகத் தகவல் கிடைத்தது.

23,000 பேர் பணியமர்த்தல்.. பிளிப்கார்ட் சொன்ன செம விஷயம்..! 23,000 பேர் பணியமர்த்தல்.. பிளிப்கார்ட் சொன்ன செம விஷயம்..!

இதன் மூலம் இந்திய அரசு மெகுல் சோக்ஸி இந்தியாவிற்கு அழைத்து வர அரசு பல்வேறு முயற்சிகள் செய்து வரும் வேளையில் தற்போது மெகுல் சோக்ஸி காணவில்லை எனப் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13600 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டி உண்மை வெளியாவதற்கு முந்தைய நாள் இரவில் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு தப்பியோடி கிரீபியன் நாடுகளான ஆன்டிகுவா மற்றும் பார்புடா பகுதியில் குடியுரிமை பெற்று 2018 முதல் வாழ்ந்து வருகிறார்.

 மெகுல் சோக்ஸி காணவில்லை

மெகுல் சோக்ஸி காணவில்லை


இந்நிலையில் மெகுல் சோக்ஸி-ஐ இந்தியாவிற்கு நாடு கடத்தவும், இன்டர்போல் கைது செய்யும் உத்தரவை விடுத்துள்ள வேளையில் மே 23ஆம் தேதி மாலை 5.15 முதல் மெகுல் சோக்ஸி காணவில்லை என அவரது வழக்கறிஞர் வழக்கறிஞர் ஆன்டிகுவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 கார் மட்டும் கிடைத்தது

கார் மட்டும் கிடைத்தது

இந்தப் புகாரில் 62 வயதான மெகுல் சோக்ஸி மே 23ஆம் தேதி தனது காரில் விட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்பு அவர் காணவில்லை என மே 24ஆம் தேதி புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் தேடதல் பணியில் இறக்கிய ஆன்டிகுவா காவல் அதிகாரிகள் மெகுல் சோக்ஸியின் கார்-ஐ மட்டும் கண்டு பிடித்துள்ளனர்.

 மெகுல் சோக்ஸியின் குடியுரிமை

மெகுல் சோக்ஸியின் குடியுரிமை

2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஆன்டிகுவா மற்றும் பார்புடா அரசுகள் மெகுல் சோக்ஸியின் குடியுரிமையை ரத்து செய்வதற்கான பணிகளைத் துவங்கியது, இதை எதிர்த்து வழக்கு தொடுத்தார் மெகுல் சோக்ஸி. இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் அவர் காணாமல் போய் உள்ளார்.

 ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாடுகள்

ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாடுகள்

இந்நிலையில் ஆன்டிகுவா மற்றும் பார்புடா பகுதியின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறுகையில் மெகுல் சோக்ஸி கியூபாவில் இருக்கும் தனது பண்ணைவீட்டில் வசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் மெகுல் சோக்ஸி கியூபா நாட்டிலும் குடியுரிமை பெற்று உள்ளதாகக் கூறப்படுகிறது.

 கியூபா-விற்குத் தப்பித்த மெகுல் சோக்ஸி

கியூபா-விற்குத் தப்பித்த மெகுல் சோக்ஸி

இந்தியா - கியூபா இடையே extradition treaty என்பதால், மெகுல் சோக்ஸி கியூபாவில் திட்டமிட்டுக் குடியுரிமை பெற்று ஆன்டிகுவா மற்றும் பார்புடா அரசின் நெருக்கடியைச் சமாளிக்க இந்நாட்டில் இருந்து கியூபாவிற்குத் தப்பியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மேலும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியாகக் கூறி வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mehul Choksi goes missing from Antigua, may have fled to Cuba

Mehul Choksi goes missing from Antigua, may have fled to Cuba
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X