இனி 1, 2 சிகரெட் வாங்க முடியாது, வாங்கினா பெட்டி தான்.. மத்திய அரசு விரைவில் உத்தரவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்தனும்-ன்னு சொல்வாங்க, ஆனால் சிகரெட் விற்பனையில் மத்திய அரசின் கட்டுப்பாடுகளைக் கேட்டாலே மனது புண்ணாகிறது.

சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட உள்ளது.

ஆம் மத்திய அரசு விரைவில் சிகரெட்-ஐ தனித்தனியாக விற்பனை செய்வதைத் தடை செய்ய உள்ளது.

சிகரெட் பாக்கெட்டுக்களில் திடீர் மாற்றம்... இதை பார்த்தாலே புகைக்க தோன்றாதோ? சிகரெட் பாக்கெட்டுக்களில் திடீர் மாற்றம்... இதை பார்த்தாலே புகைக்க தோன்றாதோ?

புகையிலைப் பொருட்கள்

புகையிலைப் பொருட்கள்

நாடாளுமன்றத்தின் நிலைக்குழு புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை இந்தியாவில் கட்டுப்படுத்த ஒற்றைச் சிகரெட் விற்பனையைத் தடை செய்யப் பரிந்துரைத்துள்ளது எனப் பல தரப்புகள் கூறி வருகிறது.

சிகரெட் விற்பனை

சிகரெட் விற்பனை

லூஸ் சிகரெட் விற்பனை மூலம் அரசின் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் பிரச்சாரத்தைச் சீர்குலைப்பதாகப் பாராளுமன்றத்தின் நிலைக்குழு கூறியது. இதனால் 1, 2 சிகரெட் ஆக லூஸ்-ல் விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

விமான நிலையங்கள்
 

விமான நிலையங்கள்

இது மட்டும் அல்லாமல் நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் smoking zone-ஐ அகற்றவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் விரைவில் சிகரெட்-ஐ தனித்தனியாக விற்பனை செய்வதைத் தடை செய்யும் அறிவிப்பு வெளியாகலாம்.

இ-சிகரெட் விற்பனை தடை

இ-சிகரெட் விற்பனை தடை

சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு இ-சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டை இந்தியாவில் மொத்தமாகத் தடை செய்ய அரசாணை வெளியிட்டு இப்பிரிவின் வர்த்தகத்தை மொத்தமாகத் தடை செய்தது மறக்க முடியாது.

வரி உயர்வு

வரி உயர்வு

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகும் புகையிலை பொருட்கள் மீதான வரி அதிக அளவில் உயர்த்தப்படவில்லை என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வரி விதிப்பு

வரி விதிப்பு

தற்போதைய வரி விதிப்புகள் படி, இந்தியாவில் பீடிகள் மீது 22% வரியும், சிகரெட்டுகளுக்கு 53% வரியும் மற்றும் புகையில்லா புகையிலைக்கு (smokeless tobacco) 64% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்தியா புகையிலை பொருட்கள் மீது 75 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்று WHO இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மரணங்கள்

மரணங்கள்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.5 லட்சம் பேர் சிகரெட் புகைப்பதால் மரணம் அடைகின்றனர். 2018 ஆம் ஆண்டில், நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் நடத்திய ஆய்வில் புகைபிடிப்பவர்களில் 46% பேர் படிப்பறிவில்லாதவர்கள் என்றும், 16% பேர் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் என்றும் தரவுகள் கூறுகிறது.

200 ரூபாய் அபராதம்

200 ரூபாய் அபராதம்

இந்தியாவில் பொது இடங்களில் புகைபிடிப்பது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதியை மீறியவர்கள் மீது சுமார் 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் புகையிலை பொருட்களின் விளம்பரத்திற்கும் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்

பட்ஜெட்

மத்திய நிதியமைச்சகம் பட்ஜெட் தயாரிப்புக்கான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், விரைவில் தேவையான தரவுகளைத் தரட்டிய பின்பு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளைத் துவங்கும்.

இந்த நிலையில் லூஸ் சிகரெட் விற்பனை குறித்த தடை அறிவிப்புப் பட்ஜெட் அறிக்கைக்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Govt may ban sale of loose cigarettes before budget 2023

Modi Govt may ban sale of loose cigarettes before budget 2023; Standing Committee of Parliament has recommended a ban on selling single cigarettes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X