குழந்தைகளை டார்கெட் செய்யும் ரிலையன்ஸ்.. பெற்றோர்களே பர்ஸ் பத்திரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமத்திற்கு மத்தியிலான போட்டி நாளுக்கு நாள் கடுமையாகி வரும் வேளையில் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் DNA loop என்ற மிகப்பெரிய திட்டத்தில் சத்தமே இல்லாமல் பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்கு அதானி-யோ, டாடா-வோ போட்டியில்லை தனக்குத் தானே போட்டியாக விளங்குகிறது.

இதனால் எந்த அளவிற்கு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முடிவில் ரிலையன்ஸ் திட்டவட்டமாக உள்ளது.

ரிஷி சுனக் வந்தாச்சு.. மோடி அரசு எதிர்பார்த்தது இனியாவது நடக்குமா..?! ரிஷி சுனக் வந்தாச்சு.. மோடி அரசு எதிர்பார்த்தது இனியாவது நடக்குமா..?!

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல துறையில் வர்த்தகம் செய்து வரும் நிலையில் ரிடைல் துறையில் அம்பானி ஆசை ஆசையாகத் தனது மூத்த பேரனுக்காகப் பிறந்த போது, தாத்தாவின் பாசத்தைக் காட்டும் விதமாக உலகிலேயே மிகவும் பழமையான பிரிட்டன் பொம்மை நிறுவனமான Hamleys-ஐ பெரும் தொகைக்கு வாங்கினார்.

Hamleys நிறுவனம்

Hamleys நிறுவனம்

பிரிட்டன் பொருளாதாரம் கொரோனா தொற்றுக் காலத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் முகேஷ் அம்பானி Hamleys நிறுவனத்தை வாங்கி இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் விரிவாக்கம் செய்தார். இதே காலகட்டத்தில் தான் மத்திய அரசு இந்தியா பொம்மை உற்பத்தி ஹப் ஆக மாற வேண்டும் எனத் திட்டத்தை முன்வைத்தது.

Rowan - தனிப் பிராண்டு

Rowan - தனிப் பிராண்டு

Hamleys பொம்மைகளையும், தயாரிப்புகளையும் இந்தியாவில் விற்பனை செய்யவும், விநியோகம் செய்யவும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் Rowan என்ற தனிப் பிராண்டை உருவாக்கியது. இந்த நிலையில் Hamleys பிராண்டை இயக்கும் நிறுவனமாக இந்த Rowan தற்போது அடுத்தக்கட்ட வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் புதிய விற்பனை கடையாகவே மாற உள்ளது.

சிறிய கடை - முதல் கடை

சிறிய கடை - முதல் கடை

Hamleys-க்குப் பின்னால் இயங்கி வந்த Rowan இனி வர்த்தகச் சந்தையில் நேரடியாக இயங்க உள்ளது. Hamleys போல் அல்லாமல் Rowan பொம்மை கடைகள் சிறியதாகவும் அதிகமாகவும் இந்தியா முழுவதும் அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. Rowan பிராண்டின் முதல் கடை NCR பகுதியில் குருகிராம் பகுகியில் சுமார் 1400 சுதரடியில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

நடுத்தர வாடிக்கையாளர்கள்

நடுத்தர வாடிக்கையாளர்கள்

Hamleys கடைகளில் கிடைக்கும் பொம்மைகள் அனைத்தும் சந்தையில் கிடைக்கும் பிற பிராண்ட் பொருட்களைக் காட்டிலும் கொஞ்சம் காஸ்ட்லியாகவே இருக்கும், இதனால் நடுத்தரப் பிரிவில் இருக்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாலும், பெரிய அளவிலான விற்பனையை ரிலையன்ஸ் இந்தப் பொம்மை பிரிவில் அடைய முடியாமல் இருந்தது. இதைச் சரி செய்யவே வர்த்தகத்திற்குப் பின்னால் இருந்த Rowan பிராண்ட் தற்போது வெளிச்சத்திற்கு வர உள்ளது.

வர்த்தக மாடல்

வர்த்தக மாடல்

இந்த Rowan கடைகளில், மலிவான விலையில் விற்பனை செய்யப்படும் Rowan பிராண்ட் பொம்மைகள் மட்டும் அல்லாமல், பிற முன்னணி பிராண்டுகளின் பொம்மைகளும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் Hamleys ப்ரிமியம் பிரண்டாகவும், Rowan நடுத்தர மற்றும் அதிகப்படியான மக்களை நுகர்வும் மாஸ் பிரிவு பிராண்டாகவும் இருக்கும்.

500 முதல் 1000 சுதுரடி கடைகள்

500 முதல் 1000 சுதுரடி கடைகள்

Rowan பிராண்ட் கடைகளில் குறைந்த விலை கொண்ட பொம்மைகளும், அதிகத் தள்ளுபடிகளும் அளிக்கப்படும், மேலும் Rowan பிராண்ட் கடைகள் அனைத்தும் 500 முதல் 1000 சுதுரடி அளவில் தான் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-யின் DNA LOOP திட்டத்தில் இந்தப் பொம்மை விற்பனையும் மிகவும் முக்கியமானதாக விளங்கும்.

Hamleys மற்றும் Rowan

Hamleys மற்றும் Rowan

முகேஷ் அம்பானி கைப்பற்றிய பின்பு பிரிட்டன் நிறுவனமாக இருந்த Hamleys இந்திய நிறுவனமாக மாறியுள்ளது. Hamleys பிராண்டு கடைகள் 15 நாடுகளில் சுமார் 200க்கும் அதிகமான விற்பனை கடைகளைக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் ROWAN பிராண்ட் கடைகள் இந்த எண்ணிக்கையை விரைவில் எட்டும் எனக் கணிக்கப்படுகிறது. Hamleys மற்றும் Rowan ஆகிய இரு பிராண்டும் Reliance Retail Ventures Ltd (RRVL) கீழ் இயங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani expanding toy business with Rowan brand in affordable segment apart from Hamleys brand

Mukesh Ambani expanding toy business with the Rowan brand in the affordable segment apart from Hamleys brand. Both the Rowan brand, and Hamleys brand will be under Reliance Retail Ventures Ltd
Story first published: Wednesday, October 26, 2022, 16:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X