முகேஷ் அம்பானி பேரன் பெயர் என்ன தெரியுமா..? தந்தை பெயருடன் சூப்பர் கனெக்ஷன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானி-யை தாத்தாவாக்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரான ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தா ஜோடிக்குப் பிறந்த குழந்தைக்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

 

டிசம்பர் 10ஆம் தேதி கிருஷ்ணரின் அருளால் ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என முகேஷ் அம்பானி குடும்பச் செய்தி தொடர்பாளர் அறிக்கையை வெளியிட்ட நிலையில், மாலையில் குழந்தையுடன் ஒரு கியூட் போட்டோவை வெளியிட்டார் முகேஷ் அம்பானி.

இந்நிலையில் இக்குழந்தைக்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

பெயர் சூட்டு வீழா

பெயர் சூட்டு வீழா

முகேஷ் அம்பானியின் பேரனுக்கு டிசம்பர் 10ஆம் தேதி மொத்த பாலிவுட் சூப்பர்ஸ்டார்களும் வாழ்த்து தெரிவித்து, பேரனுடன் இருக்கும் முகேஷ் அம்பானியின் போட்டோ மிகப்பெரிய அளவில் வைரலாக்கப்பட்டது. இந்த நிலையில் 14 நாள் இடைவெளியில் முகேஷ் அம்பானி குடும்பத்தின் முதல் பேரனுக்குப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

பிரித்வி ஆகாஷ் அம்பானி

பிரித்வி ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தா தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்குக் கடவுள் கிருஷ்ணன் அருளாலும், திருபாய் அம்பானி மற்றும் கோகிலாபென் அம்பானியின் ஆசீர்வாதத்தாலும் பிரித்வி ஆகாஷ் அம்பானி எனப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெயர் காரணம்
 

பெயர் காரணம்

முகேஷ் அம்பானி குடும்பத்தில் ஆகாஷ் அம்பானி என்ற பெயருடன் ஆகாசம் இருக்கும் நிலையில் ஆகாஷ் அம்பானி குடும்பத்திற்குப் பிரித்வி என்ற பெயர் மூலம் பூமியைச் சேர்த்துள்ளனர். பிரித்வி என்பதற்குச் சமஸ்கிருதத்தில் பூமி என்ற பொருள் உண்டு. இதை மையப்படுத்தியே பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

முகேஷ் அம்பானி குடும்பம்

முகேஷ் அம்பானி குடும்பம்

மேலும் பிரித்வி ஆகாஷ் அம்பானி எனப் பெயர் சூட்டப்பட்டத்திற்குப் பாட்டி நீதா, தாத்தா முகேஷ், பாட்டி மோனா, தாத்தா ரஸ்ஸெல் ஆகியோருடன் அத்தை ஈஷா, மாமா ஆனந்த், சித்தப்பா அனந்த் ஆகியோர் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளதாகப் பெயர் சூட்டும் விழா பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2019 மார்ச் மாத திருமணம்

2019 மார்ச் மாத திருமணம்

2019ல் மார்ச் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரான ஆகாஷ் அம்பானிக்கும் தனது நீண்ட காதலியான, வைர வியாபாரியான ரசில் மேத்தாவின் மகளான ஸ்லோகா மேத்தாவை மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்திற்குக் கூகிள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை முதல் பல பெரும் நிறுவனங்களின் தலைவர், அரசு தலைவர்கள், ரஜினிகாந்த் உட்படப் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani grandson name reveal: Awesome connection with father Akash’s name

Mukesh Ambani grandson name reveal: Awesome connection with father Akash’s name
Story first published: Thursday, December 24, 2020, 11:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X