முகேஷ் அம்பானி புதிய முதலீடு.. பெப்சி, கோகோ கோலா அதிர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் குளிர்பான வர்த்தகத்தில் இறங்குவதற்காகக் குஜராத் மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட வட இந்தியாவில் பரவலாக விற்கப்படும் Sosyo Hajoori Beverages நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.

Sosyo Hajoori Beverages நிறுவனம் சுமார் 100 ஆண்டுப் பழமையான மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் இந்நிறுவனத்தின் கீழ் Sosyo, Kashmira, Lemee, Ginlim, Runner, Opener, Hajoori Soda மற்றும் S'eau ஆகிய பிராண்டுகளில் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய ரீடைல் சந்தையில் மக்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய கனவுடன் ரிலையன்ஸ் ரீடைல் சமீபத்தில் Independence என்ற பிராண்டை உருவாக்கியது.

டாடா-வுக்குச் சரிவு.. முகேஷ் பன்சால் எடுத்த திடீர் முடிவு..! டாடா-வுக்குச் சரிவு.. முகேஷ் பன்சால் எடுத்த திடீர் முடிவு..!

பெப்சி, கோகோ கோலா

பெப்சி, கோகோ கோலா

இந்திய குளிர்பான சந்தையில் பெப்சி, கோகோ கோலா பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில் இந்தியாவில் இருந்து பல மாநில மற்றும் பிராந்திய குளிர்பான நிறுவனங்கள் மாயமானது. உதாரணமாகத் தமிழ்நாட்டில் Love-O போன்ற பல பிராண்டுகள் மாயமாகியுள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி


இதை மீட்டு எடுக்கும் அதேவேளையில் பெரும் பணத்தை இப்பிரிவில் சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்த முகேஷ் அம்பானி 2022ல் campa Cola நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்பு தற்போது குஜராத் மாநிலத்தின் Sosyo Hajoori Beverages நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல் அறிமுகம் செய்துள்ள Independence பிராண்டின் கீழ் ஸ்னாக்ஸ் முதல் அனைத்து உணவு பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளது. இந்தப் பிராண்டு தயாரிப்புகள் அனைத்தும் முதல் கட்டமாகக் குஜராத் மாநிலத்தில் மட்டும் சந்தைப்படுத்த உள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

இதன் இயக்கம், வர்த்தக முறை ஆகியவற்றைப் பொருத்து நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாகத் தனது பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Independence பிராண்ட்

Independence பிராண்ட்

இந்த நிலையில் Independence பிராண்டின் கீழ் இந்தியாவில் குளிர்பான விற்பனை மற்றும் அதன் வர்த்தகம் மிகவும் முக்கியமாக இருக்கும் வேளையில் இத்துறை ஏற்கனவே பெப்சி, கோகோ கோலா போன்ற பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில் புதிய பிராண்டை அறிமுகம் செய்து குளிர்பானத்தை அறிமுகம் செய்தால் சந்தையில் வெற்றிபெறுவது மிகவும் கடினம்.

 முகேஷ் அம்பானி ஸ்மார்ட்டான ஐடியா

முகேஷ் அம்பானி ஸ்மார்ட்டான ஐடியா

இந்த நிலையில் தான் முகேஷ் அம்பானி ஸ்மார்ட்டான ஒரு திட்டத்தைத் தீட்டினார். இந்தியாவில் விளிம்பு நிலையில் இருக்கும் மற்றும் பிரபலமான குளிர்பான பிராண்டுகளைக் குறைவான விலைக்கு வாங்கி நாடு முழுவதும் புதிய பேகேஜ்-ல் விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்தார்.

நாஸ்டாலஜி விஷயங்கள்

நாஸ்டாலஜி விஷயங்கள்

இந்தியர்களுக்கு எப்போது நாஸ்டாலஜி விஷயங்கள் மீது அதிகப்படியான ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளது, உதாரணமாக 90களில், 80களில் விற்பனை செய்யப்பட்ட மிட்டாய் வகைகள் பெரிய அளவில் தற்போது வரவேற்பு பெற்று உள்ளது.

பார்லே Rol-a-Cola

பார்லே Rol-a-Cola

இதேபோல் டிவிட்டரில் திடீரென டிராண்டான பார்லே நிறுவனத்தின் Rol-a-Cola மீது மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியதால் பார்லே பல வருடங்களுக்குப் பின்பு மீண்டும் அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்தது.

campa cola டீல்

campa cola டீல்

இந்த வெற்றிகளைத் தொடர்ந்து தான் முகேஷ் அம்பானி 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 1970களில் மற்றும் 1980களில் கொடி கட்டி பறந்த ஒரு முன்னணி கோலா பிராண்டாக இருந்த campa cola அமெரிக்க நிறுவனங்களான கோகோ கோலா மற்றும் பெப்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தாலும், வர்த்தகத் தந்திரத்தாலும் வீழ்ந்த நிறுவனத்தை முகேஷ் அம்பானி 22 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது இதன் தயாரிப்புகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

Lotus Chocolate நிறுவன டீல்

Lotus Chocolate நிறுவன டீல்

Independence பிராண்டின் வர்த்தகத்திற்காகக் கடந்த வாரம் ரிலையன்ஸ் Lotus Chocolate நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளைச் சுமார் 74 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இது மட்டும் அல்லாமல் கூடுதலாக 26 சதவீத பங்குகளை வாங்க ஓப்பன் ஆஃபர் வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani's Reliance buys 50% shares Sosyo cooldrinks brand after campa cola; Pepsi, Coca cola Shocks

Mukesh Ambani's Reliance buys 50% shares Sosyo cooldrinks brand after campa cola; Pepsi, Coca cola Shocks
Story first published: Wednesday, January 4, 2023, 14:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X