முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நம்மில் வாட்ஸப் உபயோகிக்காதவர் இருப்பது மிகக் குறைவே. ஒரு காலகட்டத்தில் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட வாட்ஸப் இன்று காலையில் எழுந்தவுடன் குட் மார்னிங், குட் நைட், இன்று என்ன
உணவு என்பது முதல் கொண்டு ஸ்டேட்டஸ் வைப்பது வரை நம்மவர்களின் பழக்கம். இப்படி மக்களின் வாழ்வுடன் ஒன்றிபோயுள்ள வாட்ஸப்பிலேயே, ஷாப்பிங் செய்யும் வசதியும் கிடைத்தால் எப்படி இருக்கும்.

இதற்காக அடித்தளமிட்டு வருகிறது ஜியோமார்ட். பில்லியனர் முகேஷ் அம்பானியின் ஜியோமார்ட் நிறுவனத்தின் சேவைகளை, வாட்ஸப் மூலம் பெறும் வகையில் இணைக்க திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

உண்மையில் அப்படி ஒரு விஷயம் நடந்துவிட்டால், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு பெருத்த அடியாகத் தான் இருக்கும். ஏனெனில் காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் முதல் விஷயம், இன்று யார் யார் என்ன ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்கள் என்பதை பார்ப்பது தான். அப்படிப்பட்ட வாட்ஸப் மூலம் தனது வணிகத்தினை விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறார் முகேஷ் அம்பானி.

பெரும் சவால் தான்

பெரும் சவால் தான்

உண்மையில் இது ஒரு மிகப்பெரிய விஷயம் தான். போட்டி நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய சவால் தான். முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் காலடி எடுத்த வைத்த பின்பு, பல நிறுவனங்கள் காணா மல் போயின. டேட்டா கட்டணங்களும் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிறுவனம் தொலைத் தொடர்பு துறைக்கு வந்து சில ஆண்டுகளிலேயே பல மில்லியன் வாடிக்கையாளர்களை தன்னகத்தே ஈர்த்துள்ளது.

வாட்ஸப் மூலம் வணிகம்

வாட்ஸப் மூலம் வணிகம்

அதே போல தற்போது ரிலையன்ஸின் ஆன்லைன் ரீடெயில் வணிகத்தினை டெவலப் செய்ய, அதிரடி திட்டத்தினை கையில் எடுத்துள்ளார் முகேஷ் அம்பானி. அது வாட்ஸப் மூலம் சில்லறை வணிகத்தினை விரிவுபடுத்துவது தான். இன்றைய காலகட்டத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவி கிடக்கும் வாட்ஸப் மூலம், எளிதில் மக்களை சென்று
அடைய முடியும் என்பதை தான், முகேஷ் அம்பானி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் போலும்.

விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

இந்த வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணியானது ஆறு மாதத்திற்குள் நடைமுறைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 400 மில்லியன் மக்கள் வாட்ஸப் மூலம் ஆர்டர் செய்ய வழிவகுக்கும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் மிகப்பிரபலமான மெசேஜ் ஆப் இது தான். ஆக மெசேஜ் மூலமாகவே மக்கள் தங்களது ஆர்டர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அமேசான் ஃபிளிப்கார்ட்டுக்கு பெரும் சவால் தான்

அமேசான் ஃபிளிப்கார்ட்டுக்கு பெரும் சவால் தான்

இந்த கூட்டணியானது இந்தியா முழுவதும் தனது வணிகத்தினை விரைவாக விரிவுபடுத்த அனுமதிக்கும். இது மிக வேகமாக இந்தியாவில் வளர்ச்சி கண்டு வரும் அமேசான் ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு, மிகப்பெரிய சவாலாக அமையும். ரிலையன்ஸ் ரீடெயில் வணிகம் 2025ல் 1.3 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை முகேஷ் அம்பானி பெற முயற்சிக்கிறார்.

விரிவாக்கம் செய்ய திட்டம்

விரிவாக்கம் செய்ய திட்டம்

ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் மிகப்பெரிய ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளராக உள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் சமீபத்தில் தான் களமிறங்கியது. எனினும் தனது வணிகத்தினை விரிவுபடுத்த, பிரம்மாண்ட திட்டங்களை தீட்டி வருகின்றது. பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் வணிகமாக ஜியோ பிளார்ட்பார்மில் 9.9% பங்குகளை வாங்கியது.

லட்சக்கணக்கான வியாபாரிகள் இணைப்பு

லட்சக்கணக்கான வியாபாரிகள் இணைப்பு

மேற்கண்ட இந்த முதலீடானது இரு நிறுவனங்களுக்கும், தங்களது வணிகத்தினை மேம்படுத்திக் கொள்ள ஒரு வழியாக அமைந்தது எனலாம். எனினும் மேற்கண்ட இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே தனது வணிகத்தினை விரிவுபடுத்தும் விதமாக லட்சக் கணக்கான வியாபாரிகள் மற்றும் மளிகைக் கடை உரிமையாளர்கள் ஜியோ மார்டில் இணைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜியோமார்டின் இந்த திட்டம் உண்மையில் நுகர்வோருக்கு பயனுள்ள ஒரு திட்டம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh ambani’s Reliance plans to embed Jiomart in whatsapp

Jiomart latest updates.. Mukesh ambani’s Reliance plans to embed Jiomart in whatsapp
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X