முகேஷ் அம்பானியின் அடுத்த ஆட்டம்.. ஆடைகள் நிறுவனத்தில் ரூ.950 கோடி முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய பில்லியனர் ஆன முகேஷ் அம்பானி தொடர்ந்து தனது வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக பல்வேறு விதமான துறைகளில் முதலீடு செய்து வருகிறார்.

குறிப்பாக அதன் சில்லறை வர்த்தகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக பல்வேறு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வருகின்றார். பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியும், பல நிறுவனங்களுடன் கூட்டணி வைத்தும் விரிவாக்கம் செய்து வருகின்றார்.

குறிப்பாக அத்தியாவசிய தேவைகள், ஆடைகள், காலணிகள், நகைகள் என ஒவ்வொரு துறையிலும் முதலீடுகளை செய்து வருகின்றார்.

இந்தியாவிலேயே காஸ்ட்லியான எஸ்யூவி கார் வைத்திருக்கும் முகேஷ் அம்பானி.. விலை என்ன தெரியுமா..?! இந்தியாவிலேயே காஸ்ட்லியான எஸ்யூவி கார் வைத்திருக்கும் முகேஷ் அம்பானி.. விலை என்ன தெரியுமா..?!

ரிலையன்ஸ்- க்ளோவியா முதலீடு

ரிலையன்ஸ்- க்ளோவியா முதலீடு

ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் நிறுவனம், பர்ப்பிள் பாண்டா ஃபேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இன்னர்வேர் பிராண்டான க்ளோவியாவின் 89% பங்குகளை, 950 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலில் இரண்டாம் நிலை பங்கு மற்றும் முதன்மை முதலீடுகள் அடங்கும்.

உள் ஆடை நிறுவனம்

உள் ஆடை நிறுவனம்

இதில் மீதமுள்ள பங்குகளை நிறுவனக் குழு மற்றும் நிர்வாகக் குழு அடங்கும்.

க்ளோவியா பிராண்ட் பங்கஜ் வெமானி, நேஹா காந்த் மற்றும் சுமன் செளத்ரி ஆகியோரால் 2013ல் தொடங்கப்பட்டது. க்ளோவியா இந்தியாவின் முன்னணி பிரிட்ஜ் - டு பிரிமியம் பிராண்டாகும். இது ஆயிரக்கணக்கான உள்ஆடை ரகங்களை கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும்.

 

மல்டிபிராண்ட்

மல்டிபிராண்ட்

க்ளோவியா 3500 ஆடை பொருட்களை கொண்டுள்ளது. இது நிலவரத்திற்கு ஏற்பட டிரெண்டிங் டிசைன்கள் மற்றும் புதுமையான ஸ்டைகள், உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பு, தரமான உடைகள் என பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பிராண்டாகவும் உள்ளது. இது ஆன்லைன் வணிகத்தினையும் செய்து வருகின்றது.

பல ஆடை பிராண்டுகள்

பல ஆடை பிராண்டுகள்

ஏற்கனவே இந்த நிறுவனம் ஜிவாமே மற்றும் அமண்டே உள்ளிட்ட பல பிராண்டுகளை கையகப்படுத்திய நிலையில், தற்போது இந்த கையகப்படுத்தலானது வந்துள்ளது. இது மேற்கோண்டு ஆடைகள் வணிகத்தினை மேம்படுத்த இந்த நிறுவனத்திற்கு உதவிகரமாக அமையும்.

தற்போதைய  நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது 10.24 மணி நிலவரப்படி, என்.எஸ்.இ-யில் 1.12% குறைந்து 2453.75 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 2480 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை இதுவரையில் 2439 ரூபாயாகும்.

இதே பி.எஸ்.இ-யில் இதன் விலை 1% குறைந்து, 2456 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 2478.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை இதுவரையில் 2442 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2750 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1877.60 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mukesh ambani's Reliance retail acquires 89% stake in inner wear brand clovia

Reliance retail acquires 89% stake in inner wear brand clovia/முகேஷ் அம்பானியின் அடுத்த ஆட்டம்.. ஆடைகள் நிறுவனத்தில் ரூ.950 கோடி முதலீடு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X