தமிழகத்தில் உள்ள முன்னணி வணிக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்று தான் முருகப்பா குழுமம். 1900ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த குழுமத்தில் தான் நீண்ட நாட்களாக ஒரு பதவி பிரச்சனை இருந்து வருகின்றது.
முருகப்பா குழுமத்தை சேர்ந்த எம்வி முருகப்பனின் மூத்த மகள் வள்ளி அருணாச்சலம், தங்களுக்கு 8.15% பங்குகள் உள்ள அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் பதவி மறுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவரது உறவினர்கள் அதற்கு ஏதேனும் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
டிசிஎஸ் அறிவிப்பால் ஐடி பங்குகள் தாறுமாறான வளர்ச்சி..!

முருகப்பா குழும வணிகம்
கடந்த 1900ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்தின் மதிப்பு சுமார் 36,893 கோடி ரூபாயாகும். இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சுமார் 28 தொழில்களை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் ஐந்து தலைமுறைகளாக குடும்ப வணிகத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பதவி பிரச்சனை
இந்த நிலையில் முருகப்பா குழுமத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாக தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் தான் வள்ளி அருணாச்சலம். முருகப்பா குழுமம் பங்கு வைத்திருக்கும் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில், வள்ளி அருணாச்சலத்திற்கு பதவி மறுக்கப்பட்டதாக கடந்த சில மாதங்களாகவே பல கட்ட பேச்சு வார்த்தகளை நடத்தி வந்தார்.

அனைவருக்கும் லீகல் நோட்டீஸ்
முருகப்பா குழுமம் போன்ற தலைமுறை தலைமுறையாக வியாபாரம் செய்து வரும் ஒரு நிறுவனத்தில், பெண்களின் பங்கு இன்றைய நாளிலும் பெரியதாக இல்லை. ஏனெனில் சட்ட வாரிசுகள் வெளிப்படையாக ஆண்களே உள்ளனர் என்றெல்லாம் குற்றம் சாட்டி வந்த நிலையில், இன்று அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், அம்பானி இண்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவன உறுப்பினர்களுக்கும் லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

ஆலோசித்து எடுக்கப்பட்ட முயற்சி
இது குறித்து வள்ளி அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவனமாக முழுமையான ஆலோசனையை பின்பற்றி, எங்களின் சுயதீன ஆலோசனையுடனும் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதோடு எனது தந்தையின் விருப்பத்தினை தீர்பதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளில், தற்போது சட்ட ரீதியாக தீர்வு காண முடிவு செய்துள்ளோம்.

இது மிகப்பெரிய நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து தான் முருகப்பா குழும உறுப்பினர்கள், அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிர்வாக உறுப்பினர்கள், இது நிறுவனம் தொடர்பான நிறுவன உறுப்பினர்களுக்கு நாங்கள் லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இந்த நடவடிக்கை எங்களுக்கு மிகப்பெரிய நடவடிக்கையாகும். இது மிகவும் துரதிஷ்டவசமானது என்றும் கூறியுள்ளார்.

வள்ளி அருணாச்சலத்திற்கு எதிராக வாக்கு
எனினும் கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பில் வள்ளி அருணாச்சலத்திற்கு எதிராக 91.36% வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கெல்லாம் அசந்து போகாதவராய் நீதித்துறை மீது எங்களுக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது, நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். நீதி மேலோங்கும் என்று நம்புகிறோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெற்றி பாதையாக மாறுமா?
இது போன்ற பரம்பரை வணிகங்களில், இன்னும் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆக பாலின விஷயங்களை கருத்தில் கொள்ளாமல், திறனை உள்ளடக்கிய ஒரு மன நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக நிச்சயம் வள்ளி அருணாச்சலத்தின் போராட்டம், எதிர்காலத்தில் பல பெண்களுக்கு வெற்றி பாதையாக மாறும் என்று நாமும் நம்புவோம்.