Paid leave சம்பளத்த திருப்பிக் கொடுங்க! அரசிடம் கோரிக்கை வைத்திருக்கும் நாஸ்காம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லே ஆஃப் என்கிற சொல்லை, தமிழகத்தில் அதிகம் பிரபலப்படுத்தியவர்கள் என்றால் அது ஐடி ஊழியர்கள் தான்.

21-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை லே ஆஃப் என்றால் அது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா வைரஸ் வந்து பல துறைகளிலும் லே ஆஃப் என்கிற வார்த்தையை ஒரு சகஜமான சொல்லாக, சம்பவமாக மாற்றி இருக்கிறது.

என்ன இருந்தாலும், ஐடி துறையில் இந்த கொரோன வைரஸ் கொஞ்சம் அதிகமாக பிரச்சனைகளையே ஏற்படுத்தி இருக்கிறது எனச் சொல்லலாம். இந்த பிரச்சனைகளை சமாளிக்க நாஸ்காம் சில கோரிக்கைகளை நிதி அமைச்சகத்திடம் வைத்திருக்கிறது.

எப்படி இருந்தாங்க.. இப்படி ஆயிட்டாங்களே.. பயங்கர சொத்து மதிப்பு சரிவில் இந்திய பில்லியனர்கள்! எப்படி இருந்தாங்க.. இப்படி ஆயிட்டாங்களே.. பயங்கர சொத்து மதிப்பு சரிவில் இந்திய பில்லியனர்கள்!

போனஸ்

போனஸ்

ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள், 2020 - 21 நிதி ஆண்டுக்கு கட்டாய போனஸ் கொடுப்பதில் இருந்து விலக்கு கேட்டு இருக்கிறது. அதோடு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் Software Technology Parks of India போன்றவைகளை மற்ற வழிகளில் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி கோரி இருக்கிறது.

Work from Home

Work from Home

வீட்டில் இருந்தே ஊழியர்கள் அலுவலக வேலைகளைப் பார்க்க, கம்பெனிகள் செய்த செலவுகள், முறையான வியாபார செலவுகளாக கணக்கில் எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கேட்டு இருக்கிறார்கள். இப்போது வரை, ஒரு ஊழியரை வீட்டில் இருந்தே வேலை செய்ய, கம்பெனி செய்யும் செலவுகளை எல்லாம் சலுகைகளாக (perquisites) தான் கணக்கிடுகிறார்களாம். இதற்கு வரி வேறு செலுத்த வேண்டுமாம்.

Paid leave
 

Paid leave

அதே போல, கொரோனா பாதிப்பினாலும், லாக் டவுன் காலத்தில், Paid leave-ஆக கணக்கில் கொண்டு, ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை, அரசு திரும்பக் கொடுக்க வேண்டும். இது 31 மார்ச் 2021 வரையான கொரோனா தொடர்பான Paid leave-களுக்கு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது நாஸ்காம்.

நிதிச் சுமை

நிதிச் சுமை

இப்படி கம்பெனிகள், எந்த வேலையும் வாங்காமல் ஊழியர்களுக்கு, வெறுமனே Paid leave கொடுப்பது, கம்பெனிக்கு நிதிச் சுமையாகத் தான் இருக்கும். இந்த Paid leave சம்பளத்தை அரசு வழங்கினால், அது கம்பெனியின் நிதிச் சுமையை கணிசமாக குறைக்கும். அதோடு லே ஆஃப்களையும் தவிர்க்கலாம் எனச் சொல்கிறது நாஸ்காம் தரப்பு.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்க அரசு சுமார் 349 பில்லியன் டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 26.17 லட்சம் கோடி ரூபாய்) Paycheck Protection Program (PPP) என்கிற திட்டத்துக்கு ஒதுக்கி இருக்கிறது. இதை திரும்ப வராத கடனாக "forgivable loan" என்கிற பெயரில் சின்ன வியாபார நிறுவனங்களுக்கு கொடுக்கிறார்களாம்.

சம்பளம்

சம்பளம்

இந்த கடன் மூலம் அந்த வியாபார நிறுவனங்கள், கொரோனா பாதிப்பு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பயன்படுத்த வேண்டுமாம். இப்படி இந்தியாவும், தன் சிறு குறு நிறுவனங்களுக்கு, ஏதாவது செய்ய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார், முன்பு நாஸ்காமில் பணியாற்றிய ஒருவர்.

இது போக, நாஸ்காம் ஐடி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரிகளை குறைக்கச் சொன்னது, ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்கச் சொன்னது என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதை விரிவாக இந்த லிங்கில் படிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nasscom asking Center to reimburse paid leave salary

The Indian IT and IT enabled services industry body Nasscom asking government to reimburse the paid leave salary given to their employees. Nasscom is saying that this will help ease the financial burden and will ensure no job losses.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X