35 வருட வரலாற்று உச்சத்தினை உடைத்த நிக்கல்.. ஒரே நாளில் 75% ஏற்றம்.. என்ன காரணம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிக்கல் இன்று அதன் 35 ஆண்டுகால வரலாற்றின் உச்சத்தினை உடைத்து 70% ஏற்றம் கண்டுள்ளது.

இது உக்ரைன் - ரஷ்யா இடையேயான மோதலுக்கு பிறகு இந்தளவுக்கு அதிரடியான ஏற்றத்தினை கண்டுள்ளது.

நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக , இந்த பலத்த ஏற்றம் இருந்ததாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஐடி துறையினருக்கு காத்திருக்கும் பிரச்சனை.. உக்ரைன் - ரஷ்யா மோதல் தான் காரணம்..!ஐடி துறையினருக்கு காத்திருக்கும் பிரச்சனை.. உக்ரைன் - ரஷ்யா மோதல் தான் காரணம்..!

நிக்கல் இருப்பு சரிவு

நிக்கல் இருப்பு சரிவு

இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயமும் உள்ளது. அது சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், கையிருப்பும் குறைவாக உள்ளது. இது 70 - 75% குறைவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் 70% நிக்கலானது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இதே 7% நிக்கலானது மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளில் பயன்படுத்தப்படுகிறது.

 

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

சர்வதேச அளவில் மின்சார வாகனங்களின் பயன்பாடானது மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக தொடர்ந்து நிக்கலின் தேவையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், ரஷ்யாவின் நிக்கலானது உலகளவில் மின்சார வாகனங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

 யாருக்கு பாதிப்பு

யாருக்கு பாதிப்பு

நிக்கலின் பற்றாக்குறையானது இத்துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட் மற்றும் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ்(ஹிசார்) உள்ளிட்டவற்றில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இந்த நிறுவனங்கள் 70 - 80% மறுசுழற்சி செய்யப்பட்ட நிக்கலை பயன்படுத்துகின்றன.

2 நாளில் 150% ஏற்றம்

2 நாளில் 150% ஏற்றம்

கடந்த 2 தினங்களில் நிக்கலில் விலை மட்டும் 150% ஏற்றம் கண்டுள்ளது. இது இந்திய சந்தையிலும் 70% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இது எம்சிஎக்ஸ் சந்தையில் 45% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த அமர்வில் இண்ட்ராடே வணிகத்தில் 75% ஏற்றத்திலும், முடிவில் 67%மும் ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இன்று லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது.

 நிக்கலின் பயன்கள்

நிக்கலின் பயன்கள்

நிக்கல் அலாய் வீல்கள், பூச்சுகள், பேட்டரிகள், சமையலறைப் பொருட்கள், மொபைல் போன்கள், மருத்துவ உபகரணங்கள், போக்குவரத்து, கட்டிடங்கள், மின் உற்பத்தி மற்றும் நகைகள் போன்ற மற்ற பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நிக்கலின் பயன்பாடு துருப்பிடிக்காத எஃகுக்கான ஃபெட்ரோனிக்கல் உற்பத்தியால் ஆதிக்கம் செலுத்துகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nickel prices jumps 70%, its breaks 35 year record amid Ukraine tension

Nickel prices jumps 70%, its breaks 35 year record amid Ukraine tension/35 வருட வரலாற்று உச்சத்தினை உடைத்த நிக்கல்.. ஒரே நாளில் 75% ஏற்றம்.. என்ன காரணம்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X