ஓமிக்ரான் எதிரொலி.. வங்கிகளுக்கு இது போறாத காலம் தான்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஓமிக்ரான் தாக்கம் என்பது மிகப்பெரிய அளவில் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இது 2020ஐ நினைவுபடுத்த தொடங்கியுள்ளது. அந்தளவுக்கு மோசமானதொரு நிலையை உருவாக்கி வருகின்றது.

 

ஏற்கனவே பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் பலமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

முகேஷ் அம்பானியின் சொத்து பிரிக்கும் மெகா திட்டம்.. 3 சூப்பர் ஸ்டார்களுக்கு என்ன தேவை..!

இந்த நிலையில் 2020ஐ போல முழு லாக்டவுன் அமல்படுத்தப்படலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

வாராக்கடன் அதிகரிக்கலாம்

வாராக்கடன் அதிகரிக்கலாம்

இது பொருளாதார வளர்ச்சியில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வங்கிகளில் வாராக்கடன் விகிதம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது வங்கிகளின் கடன் வளர்ச்சியினை பாதிக்கலாம் என்ற கருத்தும் இருந்து வருகின்றது.

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

இதற்கிடையில் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அப்படியே வைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வங்கியானது வளர்ச்சி விகிதத்தினை வைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை பல காலாண்டுகளாகவே மாற்றாமல் அப்படியே வைத்துள்ளது.

மாத தவணை அவகாசம்
 

மாத தவணை அவகாசம்

ஒரு வேளை இன்னும் ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து, கடந்த 2020ஐ போலவே நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால், வங்கிகளின் வாராக்கடன் விகிதம் அதிகரிக்கலாம். 2020ஐ போலவே மாத தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் கொடுக்கப்படலாமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது. நவம்பரில் 1.1% இருந்த கடன் தள்ளுபடி வளர்ச்சி, டிசம்பரில் 0.4% ஆக குறைந்துள்ளது.

EMI பாதிப்பினை ஏற்படுத்தலாம்

EMI பாதிப்பினை ஏற்படுத்தலாம்

ஏற்கனவே அத்தியாவசியம் அல்லாத மால்கள், வார இறுதியில் ஊரடங்கு, சினிமா தியேட்டர்கள், ஜிம்கள், உணவகங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது இத்துறை சார்ந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக அவர்கள் கடனை திரும்ப செலுத்துவதில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துறைகளில் பாதிப்பு எப்படி?

இத்துறைகளில் பாதிப்பு எப்படி?

மேலும் கொரோனா தொற்று இன்னும் சிறிது காலத்திற்கு நீடித்தால் இது இன்னும் போக்குவரத்து, சுற்றுலா துறை, சில்லறை வணிகம், ஹாஸ்பிட்டாலிட்டி துறைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அதன் தாக்கமும் சந்தைகளில் இருக்கலாம். மொத்தத்தில் வங்கிகளுக்கு இது போறாத காலம் தான்.

இக்ரா கணிப்பு

இக்ரா கணிப்பு

மூன்றாவது அலை குறித்து இக்ரா நிறுவனம் முந்தைய அலைகள் ஏற்படுத்திய தாக்கத்தினை விட, இந்த முறை அதிக தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளது. செப்டம்பர் 30, 2021 நிலவரப்படி வங்கிகளுக்கான ஒட்டுமொத்த மறுசீரமைக்கப்பட்ட கடன் 2.9% அதிகரித்து அல்லது 2.85 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் 30, 2021வுடன் ஒப்பிடும்போது 2% அதிகமாகும்.

GNPA

GNPA

வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்துகளின் விகிதம் செப்டம்பர் 2021ல் 6.9% ஆக இருந்து. இது செப்டாம்பர் 30, 2022க்குள் 8.1% ஆகவும், தாக்கம் மிக மோசமாக இருந்தால் 9.5% ஆகவும் அதிகரிக்க கூடும் என தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது வங்கிகளின் செயல்பாடுகளில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

50% செயல்பாடு தான்

50% செயல்பாடு தான்

ஏற்கனவே பல மாநிலங்களில் பலவற்றிற்கும் 50% செயல்பாடுகளுக்கே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு இன்னும் கடுமையாகினாலும் சொல்வதற்கில்லை என்ற நிலையே இருந்து வருகின்றது. இதுவே 4வது காலாண்டின் வளர்ச்சியில் மிக மோசமான வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். இந்த நிலையில் இது வங்கிகளிலும் எதிரொலிக்கலாம் என்பது மறுக்க முடியாத விஷயமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Omicron impact: indian bankers see likely NPA surge amid increasing Omicron cases

Omicron impact: indian bankers see likely NPA surge amid increasing Omicron cases/ஓமிக்ரான் எதிரொலி.. வங்கிகளுக்கு இது போறாத காலம் தான்.. !
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X