EMI தேதி ஒத்திவையுங்கள்! அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள்! ப சிதம்பரம் பளிச் ட்விட்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா கோரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலக அளவில் சுமாராக 4.35 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சுமார் 19,640 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமாராக 560 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், 9 பேர் மரணித்து இருக்கிறார்கள்.

மேற்கொண்டு கொரோனா வைரஸ் மக்களுக்கு பரவாமல் இருக்க, இந்திய அரசு, ஒரு அதிரடி நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

தங்கம் விலையில் என்னப்பா குழப்பம்.. டாலரில்  வீழ்ச்சி.. இந்தியாவில் 1000 ரூபாய்க்கு மேல் ஏற்றம்!தங்கம் விலையில் என்னப்பா குழப்பம்.. டாலரில் வீழ்ச்சி.. இந்தியாவில் 1000 ரூபாய்க்கு மேல் ஏற்றம்!

ப சிதம்பரம்

ப சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரம், 21 நாள் ஊரடங்கு காலத்தின் போது, ஏழை எளிய மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமைகள் என ஒரு பட்டியலைப் போட்டு இருக்கிறார். அவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பிரதமர் கிசான் திட்டம்

பிரதமர் கிசான் திட்டம்

1. பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித் தொகையை ரூ 12,000 ஆக உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும்.

2. குத்தகை விவசாயிகளின் பட்டியல்களை மாநில அரசுகளிடமிருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயின் குடும்பத்திற்கும் ரூ 12,000 உடன் வழங்க வேண்டும்.

 

ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் & ஜன் தன்

ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் & ஜன் தன்

3. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் ரூ 3,000 உடனடியாக வழங்க வேண்டும்.

4. ஜன் தன் திட்டம் அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் (நகர்ப் புற வங்கிக் கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.

 

உணவு

உணவு

மேலும் தொடர்ந்து ட்விட் செய்து இருக்கும் ப சிதம்பரம் "ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக உடன் வழங்க வேண்டும்" எனச் சொல்லி இருக்கிறார். எல்லோருக்கும் உணவு கிடைத்துவிட்டது என்றாலே பாதி பிரச்சனை குறைந்துவிடுமே..!

சம்பளம்

சம்பளம்

"ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போதுள்ள வேலைகளயோ ஊதியத்தையோ குறைக்கக் கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள் தருகின்ற ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்" எனச் சொல்லி இருக்கிறார் ப சிதம்பரம்.

மற்றவர்களுக்கு

மற்றவர்களுக்கு

"மேற்கூறிய இனங்களில் அடங்காதவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும் ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளைப் பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு திறந்து அக்கணக்கில் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்" எனச் சொல்லி இருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சர்.

இ எம் ஐ & ஜிஎஸ்டி

இ எம் ஐ & ஜிஎஸ்டி

வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாத தவணை (EMI) இறுதி நாட்களை 30-6-2020க்கு ஒத்தி வைக்க வேண்டும்.
மக்களின் அன்றாடத் தேவைக்கு பயன்படும் பொருள்கள், சேவைகள் மீது உள்ள ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5% உடன் குறைக்க வேண்டும்" எனச் சொல்லி இருக்கிறார்.

ப சிதம்பரத்தின் ட்விட்களைக் காண க்ளிக் செய்யுங்கள்:

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

P chidambaram ask to consider to extend date of EMI payment & cut GST on essentials

Former central finance minister P Chidambaram ask the central government to consider to extend the date of EMI payment and to cut the GST rate on essentials
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X