ஐடி வேலையை விட்டுட்டு.. முறுக்கு விற்கும் ராஜேந்திர பிரசாத்.. மாத வருமானம் என்ன தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓரே வேலையில் நீண்ட காலம் பணியாற்றினாலோ, அதிகப்படியான மன அழுத்தத்தில் தொடர்ந்து பணியாற்றினாலோ அல்லது பணியில் எவ்விதமான சேலென்ஞ்ச் இல்லையென்றாலோ அந்த வேலையில் விரைவில் விரக்தி ஏற்படும்.

 

இப்படிப்பட்ட நேரத்தில் பலர் எடுக்கும் முக்கியமான முடிவு சொந்த தொழில் துவங்க வேண்டும் என்பது தான்.

சொந்த தொழில்

சொந்த தொழில்

சொந்த தொழில் ஜாலியாக இல்லாவிட்டாலும் ஒவ்வொரு முயற்சியும் முழுமையாக நம்முடையது, இதில் கிடைக்கும் வெற்றியும் தோல்வியும் முழுமையாக நம்முடையது என்பதால் மனநிறைவு அதிகமாகவே இருக்கும். இதுவே நாம் துவங்கும் வர்த்தகம் ஹிட்டானால் பல லட்சங்களில் லாபத்தைப் பார்க்க முடியும்.

இப்படித் தான் ராஜேந்திர பிரசாத் தனது ஐடி வேலையைத் தூக்கி எறிந்து விட்டுத் துவங்கிய வர்த்தகம் இன்று பெரிய பிராண்டாக மாற்றியுள்ளது.

ராஜேந்திர பிரசாத்

ராஜேந்திர பிரசாத்

அதிகப்படியான சம்பளம், நிலையான வாழ்க்கை முறை இருந்தும் மனநிறைவு பெறாத ராஜேந்திர பிரசாத் 20 வருடமாகப் பணியாற்றி வந்த ஐடி வேலையை ராஜினாமா செய்து விட்டு தனது நீண்ட நாள் கனவாக இருந்த வர்த்தகத்தைத் துவங்க முடிவு செய்தார்.

T-SNACKS பிராண்ட்
 

T-SNACKS பிராண்ட்

ஹைதராபாத்-ஐ சேர்ந்த ராஜேந்திர பிரசாத் ரேகொண்டா-வுக்கு உணவின் மீது, சமைப்பது மீது அதிக விருப்பம் இருந்த காரணத்தால் 2019ல் ஒரு சிறிய வர்த்தகத்தைக் கிளவுட் கிட்சன் அடிப்படையில் T-SNACKS என்ற பிராண்டின் கீழ் ஆரோக்கியமான மற்றும் பாரம்பரியமான தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச பகுதியில் மிகவும் பிரபலமாக இரு்ககும் தின்பண்டங்களைச் செய்து விற்பனை செய்யத் துவங்கினார்.

குழந்தைகள்

குழந்தைகள்

இந்த ஐடியா குழந்தைகள் அதிகளவிலான தின்பண்டங்களைச் சாப்பிடும் போது அவரை அரோக்கியமற்றதாக இருப்பதைக் கண்ட ராஜேந்திர பிரசாத் இத்துறையில் இறங்க முடிவு செய்தார்.

பாரம்பரியமான தின்பண்டங்கள்

பாரம்பரியமான தின்பண்டங்கள்

ராஜேந்திர பிரசாத்-க்கும் இரு குழந்தைகள் இருப்பதால் இதன் முக்கியத்துவம் உணர்ந்து இதே வேளையில் பாரம்பரியமான தின்பண்டங்களைச் செய்யத் தற்போது பலருக்கும் நேரம் இல்லாத காரணத்தால் இந்த இடைவெளியை முக்கிய வர்த்தக வாய்ப்பாகப் பார்த்தார் ராஜேந்திர பிரசாத்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா

தற்போது T-SNACKS பிராண்டு வாயிலாக ஸ்னாக்ஸ் மட்டும் அல்லாமல் ஸ்வீட் வகைகள், ஊறுகாய், பொடி வகைகளை விற்பனை செய்து வருகிறார். மேலும் அவருடைய தயாரிப்பை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறார்.

முதலீடு

முதலீடு

ராஜேந்திர பிரசாத் தனது வர்த்தகத்தை டிசம்பர் 2019ல் துவங்கியுள்ளார் புதிய வர்த்தகத்திற்கு மிகவும் மோசமான காலமாக இருந்தது கொரோனா தொற்று பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஹோட்டல் மற்றும் உணவு வர்த்தகமாக இருந்த நிலையில் இந்த வர்த்தகத்திற்காக வாடகைக்கு எடுத்த இடம், சமைப்பதற்காக முதலீடு செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாய் ஆகிய அனைத்தும் தேக்கம் அடைந்தது.

ஐடி வேலை

ஐடி வேலை

இந்த மோசமான காலக்கட்டத்தில் ராஜேந்திர பிரசாத் தனது வேலையை விடாமல் இருந்த காரணத்தால் பெரும் இழப்பையும், நெருக்கடியையும் கடந்து வந்துள்ளார். ராஜேந்திர பிரசாத் ஐடி வேலை பார்த்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில் அவருடைய மனைவி T-Snacks கிளவுட் கிட்சனை நடத்தியுள்ளார். கொரோனா காலத்தில் வெளிநாட்டில் இருக்கும் தனது நண்பர்கள் பல வழிகளில் உதவியதாகக் கூறுகிறார் ராஜேந்திர பிரசாத்.

25 க்கும் அதிகமான ஸ்னாஸ்

25 க்கும் அதிகமான ஸ்னாஸ்

இந்த நிலையில் கொரோனா தொற்றுப் பாதிப்பு முடிந்து வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கிய நேரத்தில் ராஜேந்திர பிரசாத் தனது ஐடி வேலையை விடுத்து முழு நேரமாக T-SNACKSல் பணியாற்ற முடிவு செய்த நிலையில் தற்போது 25 க்கும் அதிகமான ஸ்னாஸ் வகைகளை விற்பனை செய்து வருகிறார் ராஜேந்திர பிரசாத்.

இந்த வர்த்தகத்தின் மூலம் மாதம் 1 லட்சம் வரையிலான வருமானத்தைப் பெற்று வருவதாகக் கூறுகிறார் ராஜேந்திர பிரசாத்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rajendra Prasad Quit 20 year IT career to make Telangana and Andhra Pradesh snacks; Now exports to USA, UK

Rajendra Prasad Quit 20 year IT career to make Telangana and Andhra Pradesh snacks; Now exports to USA, UK
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X