இந்தியாவின் வாரன் பஃபெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, நிஃப்டி 90,000 - 1,00,000 புள்ளிகளை தொடலாம் என்று கணித்துள்ளார்.
இது குறித்து CNBC International TV-க்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா 2030ம் ஆண்டளவில் நிஃப்டி 90,000 - 1,00,000 புள்ளிகளைத் தொடலாம் என்று கணித்துள்ளார்.
இந்தியா உங்களுக்கு ஏற்றத்தில் ஆச்சரியத்தை அளிக்கும். இந்தியா ஒரு ரோலில் இருக்கும், பங்கு சந்தையும் ஒரு ரோலில் இருக்கும் என்றும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா கூறியுள்ளார்.

நிஃப்டி இலக்கு
கடந்த 2014ல் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா நிஃப்டி 1,25,000 தாண்டும் எண்று கணித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் நான் அதனை நிராகரிக்க மாட்டேன். நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன் என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் நிகழும் மாற்றத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் நாம் தற்போது ஒரு புத்துயிர் பெற்ற மற்றும் மீண்டும் எழுந்த இந்தியாவைக் கொண்டுள்ளோம்.

பலவித மாற்றங்கள்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி, ரேரா, ஜன் தன் யோஜனா ஆகியவற்றின் அடிப்படையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை செய்துள்ளது. இந்தியாவின் விநியோகிக்கும் விதம் மாறியுள்ளது. தொழிலாளர் சட்டங்கள் மற்றும் விவசாய சட்டங்கள் மாறி வருகின்றன என்பதனையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசுக்கு ஆதாரவு
கொள்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை பொறுத்தவரையில், அரசாங்கம் செய்ய வேண்டியதை செய்து வருகிறது. அதே நேரத்தின் பணத்தை சமூக நீதியை முறையாக வழங்குவதற்காக பயன்படுத்துகிறது என்றும் பெருமைபடக் கூறியுள்ளார்.

பிட்காயின் பற்றி
இதே பிட்காயின் பற்றி கூறியவர், நான் அதனை 5 டாலருக்கு கூட வாங்க மாட்டேன். இது மிக உயர்ந்த வரிசையின் ஊகம் என்று நான் நினைக்கிறேன். நாணயங்களை வெளியிடுவதற்கான அதிகாரம் அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும். அது மற்றவர்களிடம் இருந்து பறிக்கப்பட வேண்டும். இந்தியாவில் கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.