ஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா பிரச்சனையில்ல.. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: யெஸ் பேங்க் படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பேட்டி அளித்துள்ளார்.

 

யெஸ் பேங்கில் டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. மேலும் இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது. ஆக யாரும் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்று நான் சொல்ல விரும்புகிறேன். ஆக வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்ப பெறுவதற்கோ அல்லது இது குறித்து யாரும் தேவையற்ற கவலையோ அடைய வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யெஸ் பேங்கினை மீட்க விரைவான நடவடிக்கை

யெஸ் பேங்கினை மீட்க விரைவான நடவடிக்கை

யெஸ் பேங்க் பிரச்சனையில் நடவடிக்கைகள் மிக விரைவானது, மிக வேகமாக வேகமாக எடுக்கப்பட்டது. இதுவும் ஒரு வகையான சாதனை தான். மேலும் கடந்த காலத்தில் வட்டி விகிதங்கள் பற்றி கவலை தெரிவித்தவர், மேலும் பரவி வரும் கொரோனாவை தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளை எடுக்கும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்ததை நினைவுகூறத் தக்கது.

ரிசர்வ் பேங்க் உதவி
 

ரிசர்வ் பேங்க் உதவி

யெஸ் பேங்கினை ஆதரிக்க ரிசர்வ் வங்கி தேவையென்றால் பணப்புழக்கத்தினையும் அளிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு ஐந்து மாதத்திற்கு முன்பே இவ்வங்கியின் டெபாசிட் தொகை குறைந்து விட்டது. ஏனெனில் வாடிக்கையாளர் தங்கள் யெஸ் பேங்கின் நிலை குறித்த பயத்தினால் திரும்ப பெற்றுள்ளனர்.

டெபாசிட் வீழ்ச்சி

டெபாசிட் வீழ்ச்சி

முன்னணி தனியார் வங்கியாக இருந்த யெஸ் பேங்கில் கடந்த டிசம்பர் காலாண்டில் டெபாசிட் தொகை 25% குறைந்து, 29,764 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் வாராக்கடன் அளவு மிக அதிகமாகவே அதிகரித்துள்ளது. அதே சமயம் இயக்க லாபமும் குறைந்துள்ளது. இதனால் யெஸ் வங்கி மேலும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் தான் ஆர்பிஐ இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது. இதன் மூலம் புத்துயிர் பெறும் விதமாக பல வங்கிகள் முதலீடு செய்ய முன் வந்துள்ளன.

பத்திர லாபம்

பத்திர லாபம்

இதற்கிடையில் சரிந்து வரும் இந்திய ரூபாயினை கட்டுப்படுத்த, அன்னிய செலவாணியை கட்டுப்படுத்தவும், 2 பில்லியன் டாலர் ஆதரிப்புக்காக வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 10 வருட பத்திர லாபம் 19 அடிப்படை புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே அக்டோபர் 9, 2019 வரையில் அதன் அதிகபட்ச வீழ்ச்சி 6.12% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI governor said Yes bank customers don’t withdraw money in panic

Reserve bank of India governor saktikanta Das asks yes bank customers don’t get panic, yes bank depositors money safe. Also he asks no need to withdraw money in panic.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X