முகேஷ் அம்பானியின் மறக்க முடியாத சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரீடைல் சந்தையைப் புரட்டிபோடக்கூடிய ஒரு வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் டீல், அமேசான் வழக்கின் எதிரொலியால் ரோலர்கோஸ்டராக மாறியது.

 

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் கிஷோர் பியானியின் பியூச்சர் குரூப் இடையில் நடந்த 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு என்ன நடந்தது..?!

 24,713 கோடி ரூபாய் ஒப்பந்தம்

24,713 கோடி ரூபாய் ஒப்பந்தம்

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முகேஷ் அம்பானி தனது ரீடைல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு அதீத நிதிநெருக்கடி மற்றும் கடனில் இருக்கும் பியூச்சர் குரூப் நிறுவனத்தைப் பலகட்ட பேச்சுவார்த்தை மற்றும் பங்கு சீரமைப்புக்குப் பின் சுமார் 24,713 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றினார்.

 அம்பானிக்கு கிடைத்து என்ன..?

அம்பானிக்கு கிடைத்து என்ன..?

இந்த ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட், பியூச்சர் குரூப்-ன் ரீடைல், ஹோல்சேல், லாஜிஸ்டிக்ஸ், கிடங்குகள், சப்ளையர்கள், கூட்டணி நிறுவனங்கள், ஊழியர்கள் எனச் சகலத்தையும் கைபற்றியது.

இதோடு பிக் பஜார், FBB, ஈஸிடே, சென்டரல், புட்ஹால் ஆகிய பிராண்டுகள் உடன் இந்தியாவில் 420 நகரங்களில் விரிந்து இருக்கும் பியூச்சர் குரூப்-ன் மொத்த வர்த்தகத்தையும் கைப்பற்றியுள்ளது.

 

 டெஸ்கோ
 

டெஸ்கோ

பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றிய பின்பு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் ரீடைல் வர்த்தகத் தளம் 53 மில்லியன் சதுரடியாகவும், கிடங்கு பகுதி 18 மில்லியன் சதுரடியாகவும் உயர்ந்துள்ளது.

இதனால் உலகிலேயே 3வது பெரிய ரீடைல் நிறுவனமாக இருக்கும் டெஸ்கோ நிறுவனத்தைக் காட்டிலும் இடவசதியில் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

 

 அதிரடி விரிவாக்கம்

அதிரடி விரிவாக்கம்

பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றிய பின்பு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் கடைகள் எண்ணிக்கை 15 சதவீதம் உயர்ந்து 14,000 கடைகளாகவும், ஆடை மற்றும் பேஷன் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை 23 சதவீதம் உயர்ந்து 2,900 கடைகளாகவும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

 1,93,000 கோடி ரூபாய் வர்த்தகம்

1,93,000 கோடி ரூபாய் வர்த்தகம்

பியூச்சர் குரூப் உடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்குப் புதிதாக 30,000 கோடி ரூபாய் அளவிலான புதிய வருவாயுடன் சேர்த்து, மொத்த விற்பனையின் அளவு 1,93,000 கோடி ரூபாய் ($29.5 பில்லியன்) அளவிற்கு உயர உள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் வகைப்படுத்தப்பட்ட மொத்த ரீடைல் சந்தையின் 89 பில்லியன் டாலர் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் 30 சதவீத கைப்பற்றியுள்ளது.

 

 முகேஷ் அம்பானி கன்டிஷன்

முகேஷ் அம்பானி கன்டிஷன்

ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குருப் இடையிலான ஒப்பந்தத்தில் கிஷோர் பியானியோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களோ அடுத்த 15 வருடத்திற்கு ரீடைல் வர்த்தகப் பிரிவுக்குள் வர்த்தகத்தைத் துவங்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது, ஆனால் இதற்கு இரு தரப்பும் எவ்விதமான பதிலையும் இதுவரை அளிக்கவில்லை.

 15 வருடங்களுக்குத் தடை

15 வருடங்களுக்குத் தடை

இந்த ஒப்பந்தத்தின் படி ரிலையன்ஸ் ரீடைல் தற்போது இருக்கும் எந்த வர்த்தகத்திலும் கிஷோர் பியானியோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களோ அடுத்த 15 வருடத்திற்கு ரீடைல் வர்த்தகத்தைத் துவங்கக் கூடாது. அதுவும் குறிப்பாக ஆன்லைன், ஆப்லைன் போன்ற எவ்விதமான வர்த்தகத்திற்குள் நுழையக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியானது.

 கிஷோர் பியானி-யின் ஹோம்டவுன்

கிஷோர் பியானி-யின் ஹோம்டவுன்

ரிலையன்ஸ் ஒப்பந்தத்திற்குப் பின் பியூச்சர் குரூப் கிஷோர் பியானியிடம் தற்போது Praxis Retail என்னும் நிறுவனம் மட்டும் தான் உள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் தான் ஹோம் ரீடைல் வர்த்தக நிறுவனமான 48 ஹோம் டவுன் ஸ்டோர்ஸ் இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்த 48 ஹோம் டவுன் ஸ்டோர்ஸ் மூலம் கடந்த வருடம் 702 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது. இந்த வர்த்தகம் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 அமேசான் ஆரம்பம்

அமேசான் ஆரம்பம்

இந்திய ரீடைல் சந்தையைக் கைப்பற்றும் போட்டியில் அமேசான் தீவிரமாக இருந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் அமேசானுக்குப் பெரும் போட்டியாக நிலவியது.

பியூச்சர் குரூபில் ஏற்கனவே அமேசான் பல நிபந்தனைகளுடன் முதலீடு செய்து ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், கிஷோர் பியானி விதிமுறைகளை மீறி ரிலையன்ஸ் ரீடைல் உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அமேசான் குற்றம்சாட்டியது.

இதன் எதிரொலியாக ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் ரத்துச் செய்யக் கோரி அமேசான்.காம்-இன் தாய் நிறுவனம் அமேசான், சிங்கப்பூரில் வழக்குத் தொடுத்தது.

 

 அமேசான் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம்

அமேசான் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம்

2019ல் அமேசான் நிறுவனம், பியூச்சர் குரூப் குழுமத்தின் கிளை மற்றும் ஹோல்டிங் நிறுவனமான பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது.

 ஒப்பந்தத்தில் செக்

ஒப்பந்தத்தில் செக்

அமேசான் - பியூச்சர் குரூப் மத்தியில் நடந்த இந்த 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் அமேசான், பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்படச் சுமார் 15 நிறுவனங்களை வெளிப்படையாகவே குறிப்பிட்டு, இந்த நிறுவனங்கள் எந்தக் காரணத்திற்காகவும் பங்குகளையோ, வர்த்தகத்தையோ கைப்பற்றக் கூடாது எனக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

 15 நிறுவனங்கள்

15 நிறுவனங்கள்

இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ், வால்மார்ட், அலிபாபா, சாப்ட்பேங்க், கூகிள், நேஸ்பர்ஸ், ஈபே, டாக்கெட், பேடிஎம், சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கான ஆதாரத்தை அமேசான் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தில் (SIAC) சமர்ப்பித்துள்ளது.

 

 அமேசான் வழக்கு

அமேசான் வழக்கு

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் கிஷோர் பியானியின் பியூச்சர் குரூப் இடையிலான 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்துச் செய்யக் கோரி அமேசான், சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தில் (SIAC) தொடுத்தது வழக்கில் அமேசான் வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து அமேசான் இந்தியாவில் செபி மற்றும் CCI அமைப்பிடம் ஒப்பந்தத்தை ரத்துச் செய்யக் கோரிக்கை விடுத்தது.

 

 சிசிஐ ஒப்புதல்

சிசிஐ ஒப்புதல்

அமேசானுக்குத் தீர்ப்புச் சாதகமாக வந்ததைத் தொடர்ந்து இந்திய நீதிமன்றத்தின் அமேசான் மற்றும் பியூச்சர் குரூப் வழக்கு தொடுத்துள்ள நிலையில், ப்யூச்சர் குரூப் - ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் (CCI) வழங்கியுள்ளது.

 SIAC அமைப்பில் கிஷோர் பியானி வழக்கு

SIAC அமைப்பில் கிஷோர் பியானி வழக்கு

ரிலையன்ஸ் ரீடைல் ஒப்பந்தத்தில் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை முன்நிறுத்தி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள காரணத்தால் கிஷோர் பியானி சிங்கப்பூர் SIAC அமைப்பில் அமேசான் - பியூச்சர் கூப்பன்ஸ் வழக்கில் இருந்து பியூச்சர் குரூப் நிறுவனத்தை விடுவிக்க வழக்கு தொடுத்த நிலையில், SAIC அமைப்பு கிஷோர் பியானி வழக்கை நிராகரித்துள்ளது.

இதன் மூலம் இந்திய நீதிமன்றம், சிங்கப்பூர் SIAC அமைப்பு ஆகிய இரு இடத்திலும் அமேசான் மற்றும் பியூச்சர் குரூப் ஆகிய இரு நிறுவனங்களும் வழக்கு தொடுத்துள்ளது.

 

செபி

செபி

இந்நிலையில் தற்போது சந்தை கட்டுப்பாட்டு அணைப்பான செபி, ரிலையன்ஸ் ரீடைல் உடன் பியூச்சர் குரூப்-ஐ இணைக்க மும்பை பங்குச்சந்தையிடம் NOC கொடுத்தை பற்றி விளக்கம் கேட்டுள்ளது.

 வழக்குகள்

வழக்குகள்

அமேசானும், பியூச்சர் குரூப்-ம் வழக்கை இரு வித்தியாசமான முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளது.

பியூச்சர் குரூப் பியூச்சர் ரீடைல் மற்றும் பியூச்சர் கூப்பன்ஸ் ஆகிய நிறுவனத்தைத் தனித்தனியாகப் பிரித்து வழக்கை விசாரிக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் அமேசான் இரு நிறுவனம் ஒன்றிணைந்த நிறுவனமாக வழக்கை விசாரிக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 6 நிறுவனங்கள்

6 நிறுவனங்கள்

அக்டோபர் மாகம் பியூச்சர் குரூப் தனது 6 கிளை நிறுவனங்களை ஆதாவது பியூச்சர் கன்ஸ்யூமர், பியூச்சர் எண்டர்பிரைசர்ஸ், பியூச்சர் மாக்கெட் நெட்வொர்க்ஸ், பியூச்சர் லைப்ஸ்டைல், பியூச்சர் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் ஆகிய 5 நிறுவனங்களைப் பியூச்சர் ரீடைல் என்ற 6வது நிறுவனத்துடன் இணைத்தது.

இந்நிலையில் அமேசான் முதலீடு செய்தபோது பியூச்சக் கூப்பன்ஸ் பியூச்சர் குரூப்-ன் கிளை நிறுவனங்களுக்குத் தாய் நிறுவனமாகச் செயல்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance - Future group - Amazon deal turned to be roller coaster for 2020 Indian business

Reliance - Future group - Amazon deals turned to be roller coaster for 2020 Indian business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X