இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ மார்ச் 2ஆம் தேதி முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதிகளவிலான தொகையை முதலீடு செய்து இந்தியா முழுவதும் இருக்கும் 22 வட்டங்களிலும் ஸ்பெக்ட்ரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் சேவை பிரிவும், டெலிகாம் சேவையிலும் மிகப்பெரிய திட்டங்களை வைத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, 2020ல் ஈர்த்த முதலீட்டின் மூலம் உலகின் முன்னணி டெக் மற்றும் முதலீட்டு நிறுவனங்களைக் கூட்டாளியாக இணைந்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் புதிய டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்து ஜியோ தயாராக இருக்க வேண்டும் என இலக்குடன் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதிகளவில் முதலீடு செய்து நாடு முழுவதிலும் தனது சேவையின் தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக அதிகளவிலான ஸ்பெக்டரத்தை கைப்பற்றியுள்ளது.
வெறும் 55 பைசா வட்டியில் வீட்டு கடன்.. போட்டிப்போட்டு வட்டியை குறைக்கும் வங்கிகள்..!

ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் டெலிகாம் சேவை அளித்து வந்தாலும், பல முக்கியமான பகுதிகளில் போதுமான அலைக்கற்றை இல்லாமலும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியாமலும் இருந்தது. இந்நிலையில் இப்பிரச்சனையை மார்ச் 2ஆம் தேதி முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சரி செய்துள்ளது.

பட்டையைக் கிளப்பும் ஜியோ
இந்த ஏலத்தின் முடிவில் ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் அனைத்து 22 வட்டங்களிலும் குறைந்தபட்சம் 20 MHz அளவிலான 1800 MHz அலைக்கற்றையும், 40 MHz அளவிலான 2300 MHz அலைக்கற்றையும் வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் அனைத்து விதமான சேவைகளையும் மேம்படுத்தப்பட்ட தரத்தில் அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

55 சதவீதம் ஸ்பெக்ட்ரம்
இதுமட்டும் அல்லாமல் மொத்த ஸ்பெக்ட்ரத்தில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 55 சதவீதம் அதாவது 1,717 MHz அலைக்கற்றையை வைத்துள்ளது. இதன் மூலம் இந்திய டெலிகாம் சந்தை வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்ஸ் ஜியோ தற்போது ஸ்பெக்ட்ரம் கையிருப்பிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவை
மேலும் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முடிவில் ரிலையன்ஸ் ஜியோ கையிருப்பில் வைத்திருக்கும் அலைக்கற்றைக் கொண்டு நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய முடியும் என்பது மிகவும் முக்கியமானது. ரிலையன்ஸ் ஜியோ பல முன்னணி நிறுவனங்கள் உடன் கூட்டணி சேர்ந்து புதிதாக ஒரு 5ஜி ஸ்டாக்-ஐ உருவாக்கியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி
புதிதாகக் கைப்பற்றி அலைக்கற்றை மூலம் தற்போது ஜியோ தளத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்லாமல் புதிதாக ஜியோ தளத்திற்குள் வரும் 300 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட சேவையை அளிக்க முடியும்.
மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் ஸ்பெக்ட்ரம் பலத்தின் மூலம் இந்திய மக்களுக்குப் புதிய டிஜிட்டல் அனுபவத்தை அளிக்க முடியும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஏலத்தில் ஆதிக்கம்
மார்ச் 2ஆம் தேதி முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மத்திய அரசு சுமார் 77,814.80 கோடி ரூபாய் அளவிற்கு 4ஜி அலைக்கற்றை விற்பனை செய்தது. இதில் அதிகப்படியாக ரிலையன்ஸ் ஜியோ சுமார் 488.35 MHz அலைக்கற்றை 57,122.65 கோடி ரூபாய் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது. இந்த ஏலத்தில் ஜியோ 800 MHz பேண்ட் பிரிவில் அதிகளவிலான அலைக்கற்றைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஏலம்
மத்திய அரசு இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz மற்றும் 2500 MHz பேண்ட் பிரிவில் 2,308 யூனிட் அலைக்கற்றை விற்பனை செய்து 3.92 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை ஈர்க்க திட்டமிட்டது. ஆனால் 700 MHz and 2,500 MHz பேண்டுகளின் கீழ் இருக்கும் அலைக்கற்றைக்கு டெலிகாம் நிறுவனங்கள் விருப்பம் தெரிவிக்காத நிலையில் விற்பனை செய்யப்படவில்லை.
சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..!