இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் டாப் 50 ரீடைல் நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது. கடந்த 5 வருடத்தில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பார்க்கும் போது ஆச்சரியம் என்ற ஒரு வார்த்தை தான் பதிலாக உள்ளது.
முதல் இடம்
இதோடு 2013-18 நிதியாண்டு காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் ரீடைல் அதாவது சில்லறை விற்பனை நிறுவனங்கள் பட்டியலில் ஆண்டு வருவாய் வளர்ச்சி அடிப்படையில் ரிலையன்ஸ் ரீடைல் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ரீலையன்ஸ் ரீடைல் இக்காலகட்டத்தில் சராசரியாக 55.8 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜப்பான் மற்றும் சீனா
டெலாய்ட் ஆய்வு செய்து உருவாக்கிய இப்பட்டியலில் 50 சதவீத நிறுவனங்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தது, 25 சதவீத நிறுவனங்கள் சீனா மற்றும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தது.
இப்படி ஜப்பான், சீனா நிறுவனங்கள் ஆட்சி செய்யும் Deloitte's Global Powers of Retailing 2020 index பட்டியலில் இடம்பெற்றுள்ள ஓரே இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல் மட்டும் தான்.
ரிலையன்ஸ் ரீடைல்
இந்தியாவில் மட்டும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட கடைகளை வைத்து மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் ஓரே நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல். இந்நிறுவனம் 2018ஆம் நிதியாண்டில் சுமார் 18.5 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் பெற்றுள்ளது. இது 2017ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 88.4 சதவீதம் அதிகமாகும்.
ஆஃப்லைன் வர்த்தகம்
ரிலையன்ஸ் ரீடைல் தற்போது ஆப்லைன் வர்த்தகச் சந்தையை விரிவாக்கம் பணிகளைத் துவங்கியுள்ளது, அதாவது மக்கள் மற்றும் சிறு விற்பனை கடைகளைத் தனது ரிலையன்ஸ் ரீடைல் குடைக்குள் இணைக்கும் பணிகளைச் செய்து வருகிறது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக மளிகை பொருட்களை மக்கள் ஆர்டர் செய்தால் ஹோம் டெலிவரி செய்யும் திட்டத்தைத் தற்போது சோதனை திட்டமாக மும்பையில் செயல்படுத்தி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications