முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாக்டவுன் காலத்தில் மக்கள் அனைவரும் அதிகளவில் ஆன்லைன் சேவைகளை நம்பியிருந்த நிலையில், தனது ஜியோமார்ட் வர்த்தகத்தை அறிமுகம் செய்து மளிகை பொருட்கள், காய்கறிகளை விற்பனை செய்யத் துவங்கியது.
இந்த வெற்றிக்குப் பின் ஜியோ நிறுவனத்தில் செய்தது போலவே ரீடைல் வர்த்தக நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திட்ட முடிவு செய்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
2020க்கு இது போதும்.. ரிலையன்ஸ் ஜியோ செய்த சிறப்பான காரியம்..!

லாக்டவுனில் புதிய வர்த்தகம்
லாக்டவுன் காலத்தில் புதிய வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியாமல் பல நிறுவனங்கள் தவித்து வந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாடு முழுவதும் இருக்கும் தனது ரிலையன்ஸ் ரீடைல்கள் கடைகளை ஜியோமார்ட் சேவைகளுடன் இணைத்து சேவையை வழங்கியது.
இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் ஜியோமார்ட் சேவை அறிமுகம் செய்த சில வாரங்களிலேயே நாட்டில் 200 நகரங்களுக்கு மேல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து.

பேஸ்புக் முதலீடு
இந்த நிலையில் தான் ஏப்ரல் 22ஆம் தேதி பேஸ்புக் நிறுவனம் சுமார் 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 9.99 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது.
பேஸ்புக்-இன் முதலீடு மூலம் ரிலையன்ஸ் ரீடைல் தனது ரீடைல் வர்த்தகத்தை வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுடன் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அதற்கு இரு நிறுவனங்களும் திட்டமிடத் துவங்கியது.

ரிலையன்ஸ் ஜியோ
இதேவேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 32.47 பங்குகளை விற்பனை செய்து சுமார் சுமார் 1,52,056 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டி மாபெரும் வெற்றியைக் கண்டது.

முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் ஜியோவின் முதலீட்டு வெற்றி, ஜியோமார்ட் மூலம் ரீடைல் சந்தையில் வெற்றியை தொடர்ந்து முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு செய்தது.

சில்வர் லேக் - ரிலையன்ஸ் ரீடைல்
இதன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது ரீடைல் வர்த்தகப் பங்குகளையும் விற்பனை செய்வதாக அறிவித்த நிலையில், செப்டம்பர் 25ஆம் தேதி முதல் நிறுவனமான சில்வர் லேக் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தில் சுமார் 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்து 1.60 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது.

47,265 கோடி ரூபாய் முதலீடு
இதன்பின்பு மீண்டும் சல்வர் லேக் பார்ட்னர்ஸ் 1,875 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதற்கு அடுத்து கேகேஆர் 5,550 கோடி ரூபாய், முபதாலா 6,247 கோடி ரூபாய், ADIA 5,512 கோடி ரூபாய், GIC 5,512 கோடி ரூபாய், டிபிஜி 1,837 கோடி ரூபாய், ஜெனரல் அட்லான்டிக் 3,675 கோடி ரூபாய், PIF 9,555 கோடி ரூபாய் முதலீடு செய்தது.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் 10.09 சதவீத பங்கு விற்பனை மூலம் சுமார் 47,265 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டி அசத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தக விரிவாக்கம்
இதற்கிடையில் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பியூச்சர் குரூப் வர்த்தகத்தை 24,713 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது, பல்வேறு ஆடை நிறுவனங்களில் முதலீடு செய்தது, ஜியோமார்ட் தளத்தில் ஆடை, எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற புதிய வர்த்தகப் பிரிவை அறிமுகம் செய்தது எனப் பல விரிவாக்கங்களைச் செய்துள்ளது.